இரா முருகன்

நாவல்  தினை – அத்தியாயம் ஏழு (CE 5000 CE  1900)

This entry is part 18 of 22 in the series 26 மார்ச் 2023

இரா முருகன் பயணத்துக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளை செய்து முடிப்பது ஒரு சுறுசுறுப்பில்லாமல் நடந்து கொண்டிருந்ததாக குயிலிக்கும் வானம்பாடிக்கும் மனதில் பட்டது.  ஆரம்ப வேகம் அப்புறம் இல்லை. ஏழு மணி காலை நேரத்தில் வந்தவர்கள்  பத்தரை மணி ஆகியும் புறப்படவில்லை. பயண அலுவலகத்தின் புறப்பாடு பகுதியில் ஆரஞ்சு நிற விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன. இன்றைக்குப் பயணம் இருக்கிறது என்று மட்டும் சொல்கிறவை இந்த விளக்குகள். குயிலியின் உள்ளங்கையில் டிஜிட்டல் திரை ஒளிர்ந்தது. பொருள் வயின் பயணம் என்று எழுதிய […]

நாவல்  தினை – அத்தியாயம் ஆறு- CE   பொ.யு 5000

This entry is part 14 of 14 in the series 19 மார்ச் 2023

இரா முருகன்                                                                                     பொது யுகம்  5000  புறப்படுங்கள். மூன்றாம் நூற்றாண்டு சென்றடைவீர் இருவரும். நீலன் மருத்துவரை நம் காலத்துக்கு அழைத்து வருக. அன்பால் அழைத்து வருக. வருவார். சென்று வருக. பெருந்தேளர் குயிலியையும் வானம்பாடியையும் அனுப்பி வைத்தார். நாலாயிரத்து எழுநூறு ஆண்டுகள் பின்னே போகும் காலப் பயணம். ஒரு வினாடி நேரத்தில் ஒரு வருடம் பின்னால் போகத் தொழில்நுட்ப வசதி இருந்தாலும் அதை முழுக்கச் சார்ந்து பயணப்படாமல் மெல்ல மெல்லப் பயணப்படுவதை இந்தப் பெண்கள் தேர்ந்தெடுத்தார்கள். […]

நாவல் தினை – அத்தியாயம் ஐந்து CE 5000 பொது யுகம் 5000

This entry is part 9 of 13 in the series 12 மார்ச் 2023

குயிலியும் வானம்பாடியும் அவசரமாக நடந்த  ’ஏமப் பெருந்துயில்’ Cryostasis என்று எழுதி இருந்த ஒழுங்கை, இருட்டும், அமைதியுமாக நீண்டு போனது. ஒரே போல ஐந்தடி உயரமும், ஆறடி நீளமும், இரண்டு அடி அகலமுமான தேள்கள் அங்கே நகர்ந்து கொண்டிருந்தன. அவற்றின் பழுக்கக் காய்ச்சிய சம்மட்டி போன்ற பெரிய கொடுக்குகள் எந்த வினாடியிலும் தாக்குதலை எதிர்பார்த்து, பயமுறுத்தும்படி உயர்ந்து நின்றன.  குயிலியும் வானம்பாடியும் ஓரமாக ஒதுங்கி வணக்கத்துக்குரிய ஒரு செந்தேளர், எனில் பெரும் பதவி வகிக்கும் செந்தேள் நகர்ந்துபோக […]

நாவல் தினை – அத்தியாயம் நான்கு CE 300 – CE 5000

This entry is part 18 of 18 in the series 5 மார்ச் 2023

இரா முருகன் “அவை தாமே வாசிக்கத் தொடங்கி இருந்தன”. காடன் திரும்பத் திரும்பச் சொன்னான். குயிலியும் வானம்பாடியும் ஈரத் தலைமுடி நீர்த் திவலைகளைச் சிதறி நனைந்த மூங்கிலன்ன தோள்கள் பளிச்சிடச் சிரித்தார்கள்.   “காடரே, நாங்கள் தொழிற்நுட்பம் சிறந்த 4700 வருடங்கள் உங்களுக்கு  அப்புறம் உயிர்த்திருந்திருக்கலாம் தான். ஆனால் தானே வாசிக்கும் புல்லாங்குழல் போன்ற சின்னச்சின்ன ஆச்சரியத்தை உண்டு பண்ணும் வெட்டியான கருவிகளை உருவாக்க நேரம் வீணாகச் செலவழித்திருக்க மாட்டோம்”. அவர்கள் கொண்டு வந்த குழல்கள் வெளியின் […]

நாவல்  தினை  – அத்தியாயம் மூன்று

This entry is part 10 of 11 in the series 19 பெப்ருவரி 2023

இரா முருகன் CE 300, CE 5000 கூத்து ஆடி முடித்துப் போகிற பெண்கள் இலைக் கிண்ணங்களில் உதிர்த்த புட்டும், தேன் பொழிந்து பிசைந்த தினையும்  எடுத்துக்கொண்டு அரமர என்று சிரிப்பும் பேச்சுமாகப் போனார்கள். ஆடிய தரையில் தேனும் பழமும் புரட்டிய மாவுத் துகள்களைத் தேடிக் கருநீல எறும்புகள் மொய்க்கத் தொடங்கின. சீனர், ஆட்டத்தையும் பாட்டையும் அணுவணுவாக ரசித்துப்  பார்த்து அந்த அனுபவத்திலேயே மனம் தொடர்ந்து சஞ்சரிக்கக் கொஞ்சம் கண்மூடி மரத் துண்டில் அமர்ந்திருந்தார். அவர் முன்னும் […]

நாவல்  தினை             அத்தியாயம் இரண்டு    CE 300

This entry is part 15 of 16 in the series 12 பெப்ருவரி 2023

இரா முருகன் அந்தியோடு மிழவும் உயிர்த்தது மலையில். கடல்கோள் துயரம் பாடிக் கேட்க கணியனைச் சுற்றி பத்து பேர் அமர்ந்திருந்தார்கள்.  நாகன் கணியன் கடல்கோளின்    பதினெட்டாம் ஆண்டு   நிறைவாகி,  சூரிய மண்டல கிரகங்கள் திரும்ப நிலைக்கும் தினம் இன்று எனக் கணித்திருந்தான். கடல்கோள் தினத்தன்று சமவெளியில்    கடல் பொங்கி உயர்ந்து உள்ளே புகுந்து எல்லாவற்றையும் எல்லாரையும் அலைகளில் பொதிந்து அடித்துப்போய் கடலில் உயிர் நீக்கச் செய்தது. மலைப் பிரதேச மக்கள் எந்த உதவியும் செய்ய இயலாமல் மலை […]

தினை – நாவல் ( பூர்வாங்கம் )

This entry is part 5 of 8 in the series 5 பெப்ருவரி 2023

இரா முருகன் சில குறிப்புகள்  1) தினை என்பது சிறு தானியம் -foxtail millet. இந்த 2023-ஆம் ஆண்டு உலகச் சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. தினை நாவல் அந்தக் கொண்டாட்டத்தில் பங்குபெறும் 2) தினை நாவல் எழுதப்பட்டுக் கொண்டிருக்கும்போதே திண்ணையில் பிரசுரமாக இருக்கிறது.  நாவல் ஆசிரியர் என்ற முறையில் எனக்கும் வாசகர்களுக்கும் புது அனுபவமாக இது இருக்கலாம் 3)நாவலின் மொழிநடை பண்டிதத் தமிழிலிருந்து பாமர மொழிப் பயன்பாடு வரை பரவியிருக்கும் 4)தினை ஃபாண்டஸி, மாய யதார்த்தம், சர்ரியலிசம், அறிவியல் […]

சாவடி காட்சி 22 -23-24-25

This entry is part 33 of 33 in the series 4 ஜனவரி 2015

காட்சி 22   காலம் மாலை களம் உள்ளே   சேட் கடையாளிடம் பேசிக் கொண்டிருக்கிறார்   சேட்: யோவ் அந்தாளு ஆர்மின்னானே.. சந்தேகமா இருக்கு   கடையாள்: ஜி அவன் போலீசா?   சேட்: வயசானவனா இருக்கானே.. கூடவே நாமக்கார அய்யர் ஒருத்தர்.. அமாவாசைக்கு திதி கொடுக்கவா வந்தான் எளவெடுத்தவன்?   கடையாள்: ஜி அந்த நகையை என்னத்துக்கு பெட்டியிலே வச்சீங்க? வளவி, சங்கிலின்னா தெரியாது.. இது கிராமத்து நகை.. சட்டுனு தெரியுதே. வக்காளி என்ன […]

சாவடி 19-20-21 காட்சிகள்

This entry is part 22 of 22 in the series 28 டிசம்பர் 2014

காட்சி 19 காலம் பகல்   களம் உள்ளே   அய்யங்கார் வீடு. ஊஞ்சலை ஒட்டி அய்யங்கார் மனைவி நாயகி நின்றிருக்கிறாள். தரையில் சுவரில் சாய்ந்து உட்கார்ந்து முகத்தை தோள் துண்டால் மூடியபடி விசும்புகிறான் அவள் சகோதரன் ரத்னவேலு. ஊஞ்சலில் ஒரு மஞ்சள் துணிப்பையில் இருந்து ரூபாய் நோட்டுக் கட்டுகள் வெளியே சரிந்து இருக்கின்றன. அதில் ஒன்று பிரிந்து, ஊஞ்சலைச் சுற்றி அங்கங்கே பணம்.   நாயகி : எதுக்கு அண்ணே அழுவறீங்க? அழுதாலும் தொழுதாலும் ஆட்டக்காரங்க விதி […]

சாவடி – காட்சிகள் 16-18

This entry is part 2 of 23 in the series 21 டிசம்பர் 2014

காட்சி 16 காலம் இரவு களம் உள்ளே சவுக்கார்பேட்டை சத்திரம் ஊமையனும், மனைவியும். வள்ளி: எத்தினி நேரம் தான் நடந்ததையே நினச்சுக்கிட்டு உக்காந்திருக்கப் போறீங்க? வந்து சாப்பிடுங்க.. சோறு பொங்கியாச்சு.. குழம்பு கூட வச்சிருக்கேன்.. வெண்டிக்கா இருந்தா போட்டிருக்கலாம்.. ஊமையன்: பசியே இல்லே வள்ளி.. பட்டணத்துலே தொழில் நடத்த கொத்தவால் சாவடிக்குள்ளே மொதல் அடி எடுத்து வச்சா, தாணக்காரன் கண்ணுலேயா பட்டுத் தொலைக்கணும்..நேரம்.. எக்குத் தப்பா பேசிடுவேன்னு பயத்துலே ஊமையனா உக்காந்தாலும் நம்ம விதி.. மனைவி: தாணாக்காரரு […]