குரு அரவிந்தன். பேராசிரியர் பசுபதி அவர்களை கனடாவில் தான் முதன் முதலாகச் சந்தித்தேன். அமைதியான, சிரித்த முகத்தோடு எல்லோரோடும் அன்பாகப் பழக்ககூடிய ஆழ்ந்த இலக்கிய அறிவு கொண்ட மனிதராக அவரை என்னால் இனம் காணமுடிந்தது. அதன்பின் அவரை அடிக்கடி ரொறன்ரோ தமிழ் சங்கத்தில் சந்திப்பதுண்டு, அவரது உரைகளையும் கேட்டிருக்கின்றேன். அதுமட்டுமல்ல, அவரோடு ஒருநாள் உரையாடியபோது, அவர் தன்னை எனது வாசகன் என்று சொல்லி என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்திருந்தார். ரொறன்ரோவில் நடந்த ஒரு நிகழ்வில், சிந்தனைப்பூக்கள் எஸ். பத்மநாதன் […]
குரு அரவிந்தன் 1 – காட்டுப் பன்றிகள் யூன் மாதம் 23 ஆம் திகதி சனிக்கிழமை, காலை நேரம் வானம் வெளித்திருந்தது. பாடசாலை விடுமுறையாகையால், வழமைபோல அவர்கள் தங்கள் துவிச்சக்கர வண்டியை எடுத்துக் கொண்டு பெற்றோரிடம் சொல்லி விடை பெற்றுக் கொண்டு கிளம்பினார்கள். சிறுவர்களாக இருந்தாலும், அன்று பயிற்சி நாள் என்பதால் உதைபந்தாட்டக் குழுவினரான அவர்களின் பயிற்றுநரின் வீட்டிற்குச் சென்றார்கள். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விளையாட்டுப் பிடிக்கும், அதுமாதிரி இவர்களுக்குக் உதைபந்தாட்டம் பிடித்திருந்தது, பிடித்திருந்தது என்று சொல்வதைவிட உதைபந்தாட்டத்தில் […]
குரு அரவிந்தன் (சேராவிடினும் நான் துன்புற மாட்டேன் இந்த அணையை நான் என்று எண்ணிடுவாய்..!) எனக்கு என்ன ஆச்சு, எதுவும் புரியவில்லை. ஒரு பெண்ணைக் கண்டவுடன் ஏற்படும் ஈர்ப்பு இவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருக்குமா என்று நினைத்துப் பார்த்தேன். திரும்பத் திரும்ப அவளையே பார்க்கத் தூண்டிய மனசு அவளைச் சுற்றிச் சுற்றியே வந்தது. மனசும் ஒரு தேனீ போலத்தான் இருக்குமோ என்ற நினைத்தேன். மொட்டாக இருந்தால் உதாசீனம் செய்வதும், மலரப் போகிறது என்று தெரிந்தல் சுற்றிச் சுற்றி […]
குரு அரவிந்தன் வீடு வெறிச்சிட்டுக் கிடந்தது. காலையில் எழுந்து நிலானி பள்ளிக்குச் சென்று விட்டாள். செல்லும்போது ஓடி வந்து வழமைபோல கட்டி அணைத்து முத்தம் தந்துவிட்டுச் சென்றாள். உடம்பு வளர்ந்து விட்டதே தவிர மனசளவில் எந்தவொரு கவலையும் இல்லாத குழந்தையாகவே இருந்தாள். தெளிந்த நீரோடையாய் நகர்ந்த எங்கள் குடும்ப வாழ்க்கையில் சிறு தடுமாற்றம், காரணம் சென்ற வாரம் மகள் வயதிற்கு வந்து விட்டாள் என்ற உண்மைதான். கற்பனை உலகிலிருந்த என்னை நிஜவாழ்க்கைக்கு இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தியிருந்ததும் […]
குரு அரவிந்தன். புளோரிடாவில் உள்ள ‘போட் லாடடேல்’ கடற்கரையில் குளித்துவிட்டு, உடை மாற்றிக் கொண்டு, கரையோர வெண்மணற்பரப்பில் சற்றுத் தூரம் நடந்தேன். குடும்பமாக வந்து நீச்சல் உடையோடு பலவகையான வண்ணக் குடைகளின் கீழ் இருப்பவர்களும், மறுபக்கம் வெய்யில் காய்பவர்களுமாய், சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அங்குமிங்குமாய் நிரம்பியிருக்கச் சிறுவர், சிறுமியர் ஆங்காங்கே மணல்வீடு கட்டி ஆரவாரமாய் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களைக் கடந்தபடியே நடந்து கொண்டிருந்த எனது பார்வை அங்கிருந்த அந்தப் பதாகை மேல் பட்டது. கறுப்பு நிற பதாகையில் […]