1. பூனைமனம் வாழ்வோட்டத்தின் ஏதோவொரு புள்ளியில் நானும் black commando என்று என்னால் பெயரிடப்பட்ட கருப்புப்பூனையும் அறிமுகமானோம். நட்புறவு தட்டுப்படுவதற்கும் கெட்டிப்படுவதற்குமான காலதேசவர்த்தமானங்களைத் துல்லியமாக power point வரைகோடுகளில் விளக்கிவிட முடியுமா என்ன? அது ஆணா பெண்ணா தெரியாது. அதற்கு எத்தனை வயது – தெரியாது. அது எங்கிருந்து வருகிறது – தெரியாது. அதற்கான நீள்வட்டப்பாதையின் ஆரம், விட்டம் – சுற்றளவு – எதுவுமே தெரியாது. விளங்கவியலாச் சீட்டுக்குலுக்கலனைய வாழ்வியக்கத்தில் குறைகாலம் கூட்டுச்சேர்ந்தது போலவே கையாட்டி விடைபெறாமல் […]
அரசியல்பார்வை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) …………………………………………………………………………………………………………………… அதுவொரு வனம் என்று எதை வைத்துச் சொல்கிறாய் என்கிறீர்கள் வனத்தை வனம் என்றுதானே சொல்லமுடியும் என்கிறேன். அதுவொரு வனம் என்று எதை வைத்துச் சொல்கிறாய் என்கிறீர்கள் வனம் நம் கண் முன் விரிந்திருக்கிறது. இது போதாதா என்கிறேன். போதாது. இது வனம் என்பதற்கு அத்தாட்சி வேண்டும் என்கிறீர்கள். காற்றின் இருப்புக்கு அத்தாட்சி கேட்பது எத்தனை அபத்தமோ அதை விட மோசம் வனத்தின் பிரத்யட்சத்துக்கு நிரூபணம் கேட்பது என்கிறேன். இது வனமானால் […]