ரொம்ப வருஷம் கழித்து அவன் அந்த அலுவலகத்திற்கு மாறுதலில் வந்தபோதுதான் அவளைப் பார்த்தான். அவளும், தான் வேலை பார்க்கும் துறையிலேயேதான் பணியாற்றுகிறாள் என்ற விபரமே அப்போதுதான் அவனுக்குத் தெரியவந்தது. அதுவே அவளிடம் கொஞ்சம் நெருங்கிவிட்டதைப் போலத் தோன்றி சிலிர்ப்பை ஏற்படுத்தியது. இத்தனை வருஷம் பார்க்காமல் இருந்திருந்தாலும், இப்போது பார்க்க நேர்ந்ததில் ரொம்பவும் நெருக்கமாக உணர்ந்தான். எதற்காக இப்படித் தோன்றுகிறது என்று நினைத்துப் பார்த்தபோது, ஊரில் இருக்கையிலேயே அவள் அழகு தன்னை வசீகரித்திருந்ததும், இவளெல்லாம் எங்கே தனக்குக் கிடைக்கப் […]
உஷாதீபன் தினமும் காலையில் யோகா வகுப்பிற்குச் சென்று வரும் நான் மாலை வேளைகளில் நடைப் பயிற்சி மேற்கொள்வது உண்டு. அம்மாதிரி நேரங்களில் அதிகம் போக்குவரத்து இல்லாத பகுதியாகத் தேர்ந்தெடுத்து, என் நடைக்கு உகந்த இடங்களாகக் கொண்டு வழக்கமாகச் சென்று வருவேன். வாகனங்களின் இரைச்சல் அதிகமில்லாத, குறுக்கீடுகள் இல்லாத பகுதியாக என்பது கூடத் தொடர்ந்த நடைப் பயிற்சி அனுபவத்தின்பாற்பட்டுத்தான். ஒரு சிறு விஷயத்திற்குக் கூட நமக்கு அந்தந்தச் செயலுக்கேற்றாற்போல் அனுபவம் தேவைப்படுகிறது. அப்படியானால்தான் நாம் அதிலே மன நிம்மதியை […]
உஷாதீபன் ஆனாலும் ஒரு ஐம்பது ரூபாயை நான் அவன் கையில் வலியத் திணித்து விட்டுத்தான் வந்தேன். அப்பொழுதுதானே என் மனதுக்கு சமாதானம் ஆகும். அந்தக் கண்ணுக்குத் தெரியாத சாட்சிக்கு யார் பதில் சொல்வது? நான்தானே சொல்லியாக வேண்டும். இல்லையென்றால் பொழுது பொழுதாய் அறுத்துக் கொண்டிருக்குமே? ஏற்கனவே என்னைப் பாடாய்ப் படுத்தியது போதாதா? அதற்காக இப்படியா வருவார்கள் என்று கேட்குமே? காசு மிச்சம்னுட்டு வந்திட்ட! அதானே? சரியான ஆள்டா நீ? அன்னைக்கு உங்கப்பா நாள் […]
வெளியீடு – காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில் (தி.ஜானகிராமன் கதைகள்-முழுத் தொகுப்பு) கதையைச் சொல்வதா? அல்லது எழுதியுள்ள அழகைச் சொல்வதா? தோன்றிய கதையினால் அழகு பிறந்ததா…? அல்லது அழகியலைச் சொல்வதற்காக கதையை உருவாக்கினாரா? என்னதான் கலாரசனையோடு, காதல் மொழியை, காம உணர்வுகளை விவரித்தாலும்…. ஒழுக்க சீலங்களை விட்டுக் கொடுப்பதில்லை. காலத்திற்கும் அழியா கலாசார சம்பிரதாயங்களை இகழ்வதில்லை. மனித மேன்மைக்கு உதவும் நல்லியல்புகளைப் புறந்தள்ளுவதில்லை. மனித உணர்ச்சிகளின்பாற்பட்ட தடுமாற்றங்களுக்காக, அடிப்படை […]
எதற்கும் இருக்கட்டுமென்று அந்த சூரிக் கத்தியை உள் டவுசருக்குள் ஒளித்து வைத்துக் கொண்டான் திப்பிலி. வேட்டி டப்பாக்கட்டுக்கும் மீறி மேலே அது துருத்திக் கொண்டு தெரிகிறதா என்று கவனமாய்ப் பார்த்தான். மெயின் ரோடிலிருந்து விலகிச் செல்லும் மண் சாலையிலிருந்து குறைந்தது ஐநூறடி தூரத்தில் உள் வாங்கி இருந்தது அந்த மயானம். அடிக்கும் காற்றில் புகை பூராவும் மேலும் உள் வாங்கிப் பறந்து சற்றுத் தள்ளியிருந்த புது நகர் வீடுகளை நோக்கி வேகமாய்ச் சென்று கொண்டிருந்தது. […]
உஷாதீபன், வெளியீடு=’ந.பிச்சமூர்த்தியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – சாகித்ய அகாதெமி வெளியீடு. தொகுப்பு – வெங்கட் சாமிநாதன் லௌகீக வாழ்க்கையில் உழல்பவர்கள் ஞானம் பெறுவது எப்போது? எப்படி? அந்த வாழ்க்கையை முழுவதும் முறையாக வாழ்ந்து கழித்தலே அதற்கான வழிமுறை. மன முதிர்ச்சி என்பது அந்த அனுபவங்களிலிருந்தே கிட்டுகிறது. எல்லோருக்குமா கிட்டி விடுகிறது? முறையான நியமங்களோடு, கடமையைச் செய்-பலனை எதிர்பாராதே என்கிற தாத்பர்யத்தேயாடு வாழ்ந்து கழித்தவனுக்கு அது ஓரளவு சாத்தியமாகிறது. […]
மனசுக்குள் தப்பாகத்தான் தோன்றியது பூபதி சாருக்கு. அந்தளவுக்கு எரிச்சல் வந்தது என்பதுதான் உண்மை. தன் வயதுக்கு இப்படியெல்லாம் தோன்றலாமா என்றால் தோன்றத்தான் வேண்டும்…ஒரு விஷயத்தின் எல்லாக் கூறுகளையும் நினைத்து ஆராயத்தான் வேண்டும் என்றே எண்ணினார். நடந்தாலும் நடக்கும்…யார் கண்டது? என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டார். இப்டிக் கேட்பாரில்லாமக் கிடந்தா?எதுவும் நடக்கலாமே! என்ன…ஏது என்று யாரேனும் கண்டு கொண்டால்தானே…?. அதான் ஒரு பெரிசு இருக்கே…எல்லாத்தையும் கண்காணிக்கிறதுக்கு…! -அப்படித்தானே கிடக்கானுங்க எல்லாரும்…? சரி…சரின்னு இருந்ததுதான் தப்பாப் […]
என்ன தப்பு நான் சொல்றதுல…? – அழுத்தமாய்க் கேட்டார் சந்திரசேகரன். அவரின் கேள்விக்கு வேறு எந்தவிதமான பதிலும் ஒப்புடையதாக அவருக்குத் தோன்றவில்லை. ஆனால் அதை இவளிடம் போய்ச் சொல்கிறோமே என்பதுதான். தான் ஒரு கருத்தில் ஊன்றிவிட்டதைப் போல, அவளும் ஒன்றில் நிலைத்து நிற்பவள். உலகமே தலைகீழாய்ப் போனாலும் அதை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. கொக்குக்கு ஒண்ணே மதி…! யாராவது அப்படி இருப்பாங்களா? நீங்க பேசுறது அதிசயமா இருக்கு…எதுக்கு அனாவசியத்துக்கு மனசைப் போட்டுக் குழப்பிக்கிட்டு…? சிவனேன்னு […]