லாவண்யா சத்யநாதன் பம்பரமாய் சுழலும்தலையுடனிருந்த ஒருவன்உதார்கள் கப்சாக்கள் சவடால்கள்மற்றும் மாயங்களைநாற்சந்திக் கூட்டத்தில்எருமைக்குரலில் பரப்பிக் கொண்டிருந்தான்.பாதி உண்மைகளை, மெய்போலும் பொய்களைவரலாறாக்கும் ஒருவன்பிரசங்கியின் கப்சாக்களில் ஒன்றின் மீதானபுகாரை நிரப்பினான் தினசரியில்.காகிதம் தினம் தின்று கழிசடையான ஒருவன்ஊர்தின்னி மாசிலாமணியை உசுப்பிவிட்டான்.கடலின் உப்புக்கும் காற்றின் நச்சுக்கும்ஆண்மலடுக்கும் ஆன்லைன் ரம்மியாடிகளின் தற்கொலைக்கும்எருமைக்குரல் காரணமென்று தீக்குச்சியைக் கொளுத்திவேலாயுதம் தண்டாயுதம் இருவரிடம் தந்தான் ஊர்தின்னி.நகர்நடுவில் தடியர் கூட்டம் கூடலாச்சு.போக்குவரத்து நின்னு போச்சுகடைகள் சேதமாச்சு. கார்கள் எரிஞ்சு போச்சு.அப்பிராணிகள் இரண்டு சவமாச்சுஉடலில் பாதி தெரியும் உடையில்கடைவீதிக்குச் சென்ற ஆண்டிக்கு […]
லாவண்யா சத்யநாதன் தாய் மகள் உறவிலும்தாவணிப் பரவும் மாறியபின் திரைகளுண்டு.வடிவும் வனப்பும்கூடதந்தை மகள் உறவில் திரைகளுண்டுசெழிப்புகூடி சேலையுடுத்தசகோதர உறவில் திரைகளுண்டு.ரத்த உறவுகளென்றாலும் அவைமனதளவிலான உறவுகளாய் மாறும்.நம் உறவு உடலும் உள்ளமும் இணைந்த உறவு.உயிருள்ளவரை மாறா உறவு.திரைகளில்லா உறவு.எச்சிலும் வேர்வையும் இன்னபிறவும் கலந்த உறவு.உன் ஒவ்வொரு மயிர்க்காலின் நினைப்பும்என்னாலறியமுடியும் உறவு.எவளைப் பார்க்கினும் ரம்பையாய் தெரியும்கிளியைவிட்டுக் குரங்கைத் தேடும்நடுவயதுக் கிறுக்கு உன்னைப் பிடித்திருப்பதைநானறியும் உறவு.மோரில் நனைத்த கரண்டியைபாலில் கலக்கமுடியாதென்றுஉன் காதைத் திருகிஉன்னைக் கட்டிப்போடும் உறவு.—-லாவண்யா சத்யநாதன்
1 மனிதன் தேடும் ‘சுகம்’ ஒரு நாணயமாகத்தான் தரப்படுகிறது அதன் மறுபக்கம் ‘வலி’ 2 வெறுப்பை விரோதத்தை கோபத்தை பகையை நோக்கி எடுத்துவைக்கும் காலடிகளே ‘விவாதங்கள்’ 3 நான் எப்படிப்பட்டவன் என்று நான் சொல்வதும் பொய் அவன் சொல்வதும் பொய் அவனவன் சொல்வதும் பொய் 4 சிவப்பு பச்சை விதி வாகனங்களுக்கு மட்டுமல்ல வார்த்தைகளுக்கும்தான் 5 பேச்சால் யாரையும் துன்புறுத்தாமல் பேசுவது ஓர் இன்பமான துன்பம் 6 நீ தந்த முதல் தேநீரைச் சுவைக்கையில் ஒரு சொட்டு […]
சொற்கீரன். எருத்தத்து இரீஇ வன் தொடை மணிவில் ஏந்து அலைஞர் வெறிகொள் வன்சுரம் கடவு எறி செலவின் நுழைபடுத்தாங்கு பொருள்சேர் உலகம் புகுவதுள்ளி நற்றிழை நலிய இறை ஊர்பு அறுவளை வளையின் நெகிழ நோதல் நன்றோ? குளவிப்புதற் கண் அரவுஎறி அஞ்சி பூவின் வள்ளிணர் விடுப்ப விழையா அந்தொகை அவிர்க்குரல் அகவல் வரித்து விரித்த பூவுள் நின் முகன் நோக்கும். கறிமுறி இவரிய கழைமுனை ஓடி கடுவன் வேர்க்கும் மந்தி நகை ஊட அஃதே ஒக்க அவனும் […]
எப்படி அகம் மலர்ந்துமுகமெல்லாம் சிரிக்கும்கைக்குழந்தையைத் தன்இடுப்பிலேந்தி அவள்கையேந்தும் முன்,குறிப்புணர்ந்து அவன்,குலையிலோர் ’இளநி’யைச் சீவிஅவள் இரவாதது போல் ஏற்கஅவன் ஈயாதது போல் அளிக்கிறான்ஈதலும் இரத்தலுமின்றிஉயர்ந்தென்றும் இழிந்தென்றுமின்றி?ஆச்சரியமாய் அதை நான்கண்டபோது தான் கண்டேன்அவ்வளவு அது ஆச்சரியமில்லையென்று,எவ்வளவு அழகாய்அவள் குழந்தை தன்அமுதமெனும் கொள்ளைச் சிரிப்பைபிறர் இரந்து தான் ஈயாததாயும்தான் ஈந்து பிறர் ஏற்காததாயும்யாவருக்கும் –ஒருவருக்கல்ல-வாரி வழங்குதலைக் கண்டு-ஒருவேளை எனக்கு முன்னமேயேஅவன் குழந்தையை நான்கண்டது போல் கண்டுஆச்சரியமாகி ஒரு கணம்தானே குழந்தையாகிக்குழந்தையைப் போல்யாவருக்கும் இல்லையாயினும்குழந்தையின் தாய்க்குஅப்படிஇளநியை நல்கினானோ?ஆனால்வெறுமனே குழந்தையைக்கொஞ்சுவதை விடஎவ்வளவு இயல்பாய்எவ்வளவு மேலானது […]
சாந்தி மாரியப்பன். ************ விழித்திருக்கும் கைக்குழந்தைக்குத் துணையாய் கொட்டக்கொட்ட தானும் விழித்திருக்கிறார் நோய்மை கிழித்துப்போட்ட ஒருவர் புறப்புலன் மங்கி அகப்புலன் தெளிவின்றி சுய கட்டுப்பாடுமற்ற உடலர் இருவரில் வந்த பாதை நினைவில்லை ஒருவருக்கு போகும் பாதையோ தெரியவில்லை இன்னொருவருக்கு அகமும் புலனுமற்ற ஏதோவொரு மாயவெளியில் அளவளாவும் இரு ஆன்மாக்களும் தத்தம் ரேகைகளை அங்கே பரிமாறிக்கொண்டு பிரிகின்றன ரேகையைப் பத்திரப்படுத்தும் பொருட்டு கால் கட்டைவிரலை வாயில் வைத்துக்கொள்கிறது குழந்தை கையை இறுக்கிக்கொள்கிறார் வயதானவர் ஒருவரையொருவர் அர்த்தத்துடன் நோக்கி பொக்கைச்சிரிப்பைச் […]
சொற்கீரன் கண்பொரி கவலைய வெஞ்சுர நீளிடை நில்லா செலவின் நீடுபயில் ஆறு கடந்து உழலும் கதழ்பரி செல்வ! கூர் உளி குயின்ற பலகை நெடுங்கல் வரி ஊர்பு நவின்ற வன்படு செருவின் குருதி கொடிய நெளிகால் ஓடி காட்சிகள் காட்டும் முரசுகள் முரலும். இறந்தவை இறந்தபோல் நடந்தவை நடந்தபோல் நளி இரு துன்வெளி அழல் ஊழ்க்காற்றின் இடைபோழ்ந்து இயலிய காட்டும் ஆங்கண். மள்ளற் களியர் மணிநிறக் காட்டில் மரைகொல் அம்பின் வெறிஅயர் கூட்டும். ஆறுபடுவோர் உயிரும் பறிக்கும் […]
ருத்ரா வாழ்வது போல் அல்லது வாழ்ந்தது போல் ஒன்றை வாழ்ந்து விட்டோம். மீதி? முழுவதுமே மீதி. தொடங்கவே இல்லை. மூளைச்செதில்களில் மட்டும் காலப்பரிமாணத்தின் வேகம் கூட்டி… வேகம் என்றால் சாதாரண வேகம் இல்லை சூப்பர் லுமினஸ்… ஒளியை விட கோடி மடங்கு கூட இருக்கலாம். இந்த பிரபஞ்சத்தின் இந்த அடுக்கு தாண்டிய இன்னொரு அடுக்கில் நீ எட்டு எடுத்து வைத்திருக்கிறாய். இன்னும் சில பத்து ஆண்டுகளில் புதிதாக பிரபஞ்சப்பூக்களை உன் கோட் பித்தான் துளைகளில் கூட பதியம் […]
ருத்ரா. இருட்டையும் கூடஇலக்கியம் ஆக்கி விடமுடியுமா?அப்படித்தான்அந்த ரெண்டா கால் நிமிடதுண்டுப்படம் பார்த்தேன்.ஆனால்இரண்டு சொச்சம் நிமிடங்களுக்கும்இருட்டைப்பூசிக்கொண்டுஒலி இசை அதிர்ந்தது.பிறகுபுள்ளி பூஜ்யம் பூஜ்யம்..செகண்டுக்குஒரு ஒளிக்கீற்று.அவ்வளவு தான்படம் முடிந்துவரிசை வரிசையாய்எழுத்துக்கள் ஓடிக்கொண்டிருந்தனஐந்தாறு நிமிடங்களாய்.அது என்ன தலைப்பு…மறந்து விட்டதே…மறக்காமல் அதையும் போட்டு விட்டார்கள்.“தேடு”எதை என்று தான் போடவில்லை.இருட்டையா?வெளிச்சத்தையா?ஒரு ஆழமான ஆழமாகியஎனக்குள்அந்த நங்கூரத்தைவீசி எறிந்தார்களே!அது ஒருபில்லியன் டாலர் இலக்கியம் தான்.
மௌனம் சம்மதமல்லமந்திரக்கோல்மாயாஜால மொழிமனதின் அரூபச் சித்திரம்மேற்தோலின் உள்ளூறும் காற்றின் ருசிமகோன்னத நறுமணம்மரித்தார் உயிர்த்தெழல்மாகடலின் அடியாழ வெளிமையிருட்டிலான ஒளிமாமாங்க ஏக்கம்மீள் பயணம்மருகும் இதயத்தின் முனகல்மனசாட்சியின் குரல்மிதமிஞ்சிய துக்கம்மகா அதிர்ச்சிமுறிக்கும் புயலுக்கு முந்தைய அமைதிவழிமறந்தொழியும் சூன்யவெளிமொழியிழந்தழியும் எழுத்துக் கலைமரணமனைய உறைநிலை…….. சிலருடைய கவிதைகளில் நிலவு கறைபடிந்ததாய்சிலருடைய கவிதைகளில் நிலவு களங்கமற்றதாய்சிலருடைய கவிதைகளில் நிலவு சந்திரனாய்சிலருடைய கவிதைகளில் நிலவு அம்புலிமாமாவாய்சிலருடைய கவிதைகளில் நிலவு கொஞ்சிக்குலவும் காதலியாய்சிலருடைய கவிதைகளில் நிலவு அஞ்சிப் பதுங்கும் குழந்தையாய்சிலருடைய கவிதைகளில் நிலவு உலவிக்கொண்டி ருப்பதாய்சிலருடைய கவிதைகளில் நிலவு […]