செந்தில் இயற்க்கையின் மடியிலமர்ந்து இடைவிடாமல் விகசிக்கிறான் மனிதன், “முழு முதற் காரணம் ஒன்று” உண்டென்றும் இல்லையென்றும்! உண்டு என்பவன் உரைக்கிறான் “அது இங்கே அங்கே இயற்க்கைக்கும் அப்பால்” என! எதிலும் அது இல்லை, இல்லவே இல்லை என்கிறான் அறுதியிட்டு மற்றவனோ! முடிவில்லாத “சத்தியமோ” இயற்க்கையின் இயக்கமாக, ஒன்றாக! பலவாக! உளனாக! இலனாக! ஒன்றும் அற்றதாக! அனைத்துமாக! அல்லவை அனைத்துமாக! இயற்க்கைக்கு அப்பால் ஒரு கடவுள், அதற்க்கும் அப்பால் மற்றுமோர் கடவுளென முடிவற்ற காரண காரணி இயக்கம் தேடலின் மூலம் கண்டடைய இயலாத….சாத்தியமில்லாத ஒன்று! ஆதலின் கடவுளுக்குள் மனிதன், மனிதனுக்குள் கடவுள் என,மடியிலும் மனதிலும் வசிக்கும் மடியாத அந்த ஒன்று சாத்தியம்தான்!
சாந்தி மாரியப்பன். ததும்பும் பேரன்புடன் வலி சொன்னதுநீஎனக்கு அடிமையாயிருஎன்னை ஆராதிதியானித்தாலோ கதி மோட்சம் கிட்டும்முடிந்தால்புண்பட்ட உடலோ மனதோஇன்னுங்கொஞ்சம் கீறிக்கொள்வலி கொண்ட மனதென்றால் எனக்குப்பிரியமதிகம்உனக்கும் பொழுது போகும்சிரங்குற்ற குரங்கின் கதையைகேள்வியுற்றிருப்பாய்தானே நீஆயுதங்களைப்போட்டு விட்டுசரணடைந்து விடுஎதிரிகள் இல்லாவிடத்தில்நாய்க்குட்டியாய்ச் சுருண்டிருப்பேன் நான் ******************ஒவ்வொரு முறையும்ஒரு குளிர் அலையைப்போல்வலி வந்து மூடும்போதுவிதிர்விதிர்த்துத் துடித்தடங்கும் உடம்பில்எங்கோதான் இருக்கிறதுஉடல்நடுக்க மையம்மெல்லெனக்கிளம்பி திடீர்க்கணத்தில்பின்னந்தலையில் சொடுக்கும்குரூர வலியிடம் இறைஞ்சுவதற்கு யாதுளதுகர்மாவோ கடனோஅனுபவித்துக்கழிப்பதொன்றே செய்யக்கூடியது இருப்பையுணர்த்தும் அவசியம் எனக்குஉண்மையில்உன்னை நானென்ன செய்ய வேண்டுமென்றுநீதான் தீர்மானிக்க வேண்டும்கங்கையாய்த் தாங்குவாயாஅல்லதுமுயலகனாய் அடக்கி வைப்பாயாசட்டெனச்சொல்காலம் […]
ஆதியோகி + பிணைப்பில் கொஞ்சம் தளர்வை எப்படியோ அடையாளம் கண்டு உலுக்கி உலுக்கி அசைத்துப் பிரித்தெடுத்துத் தன்னோடு அழைத்துப் போய்க் கொஞ்ச நேரம் அந்தரத்தில் ஆனந்தமாய்ப் பறக்க வைத்துப் பிறகு குப்பையில் சேர்த்து விட்டுப் போயிற்று காற்று…! – ஆதியோகி
பருத்து வீங்கிய பணப்பைகையிலும் அடங்கவில்லைபையிலும் அடங்கவில்லைஅதக்கிய குரங்குவாய் மாதிரிசே! ஒரு நாள்சுங்கச்சாவடியாகிபணப்பையை சலித்தேன் காலாவதி பற்றுச்சீட்டுகள்ஒரு காலாவதி சிம்அட்டைசில மாத்திரைகள்பயனற்ற சாவிஒரு ஊக்குஇந்திய ரூபாய்கள்ஒற்றுத்தாள்கள்கடைச்சாமான் பட்டியல்கள்புகைப்படங்கள்பெயர் அட்டைகள்பேசி எண்கள்பல்குச்சிகள்செவிப் பஞ்சுகள்ஒரு பித்தான் இத்தனை சுமைகளோடுதான்நானா அமீதாம்மாள்
அக்கம்பக்கத்தில்தற்கொலையின் நெடி அல்லது வாடை அல்லது வீச்சம்கிளர்ந்தெழுந்து பரவிக்கொண்டிருப்பதாக உணரும் மனதில்விலகிய பார்வையாய் வலிபோல் ஒன்று…..அவ்வளவுதான்ஏதும் செய்யவியலாது.இடைத்தூரத்திற்கு அப்பாலானது இயலாமை.தற்கொலை செய்யத் துணிந்தவர்கோழையா தைரியசாலியாஎன்ற பட்டிமன்றம் காலங்காலமாய் நடந்துகொண்டிருக்கிறது.பிறர் தன்னைக் கொலைசெய்யாமலிருக்கும் பொருட்டோதான் பிறரைக் கொலைசெய்யாமலிருக்கும்பொருட்டோநடக்கின்றன தற்கொலைகள் என்று எந்த உளவியலாளரேனும் சொல்லியிருக்கிறார்களோ, தெரியவில்லை.அரை மயக்க நிலை அல்லது ஜன்னிகண்ட நிலைஅல்லது முழுவிழிப்பு நிலையில் எதற்கென்றே தெரியாதஅரைகுறை நம்பிக்கையில்…..நடுக்காட்டில் நள்ளிரவில் நின்றுபோன வண்டியில்இல்லாத பெட்ரோல், அல்லதுஇருந்தாற்போலிருந்து மறந்துபோன வண்டியோட்டல்,அல்லது செயலிழந்துபோய்விட்ட கைகால்கள்,மங்கலாகிவிட்ட பார்வை,எங்கும் மூடிக்கொண்டுவிட்ட திசைகள்…..கற்பனையாய் குழந்தைகள் […]
கு. அழகர்சாமி அசதியாயிருக்கும் அந்திவானில் சுறுசுறுப்பாய்த் திரியும் தட்டான் பூச்சிகள் கண்டு சிறு வயதில் நான் குறும்பாய் வாலில் நூலை முடிச்சிட்டு வேடிக்கை பார்த்த ஒரு தட்டான் பூச்சியின் நினைவு உயிர்த்தது. உயிர்த்த என் நினைவில் உயிர்த்துப் படபடத்த தட்டான் பூச்சி பறக்கும் மற்ற தட்டான் பூச்சிகளோடு சேர்ந்து என் நினைவின் பிடியிலிருந்து தப்பித்துப் பறந்து போக ஆசைப்பட்டது. ஆசையாய் அது பறந்து போக, என் நினைவுள் நான் நுழைந்து நான் முடிச்சிட்ட நூலை நானே அவிழ்த்து […]
சொற்கீரன் வெண்குடைத் திங்கள் பசலை பூத்து பகலழித் தோற்றம் நோன்ற தகைமையில் வட்டில் சோறு பாலொடு வழிய விரல் அளைக்கோடுகள் வரிய வரிய சிதர்சிதர்ந்து பசி இறந்து கண்கள் என்னும் மைஆர் வெஞ்சுரம் அத்தம் நீள் அழுவத்து கசிநீர் விசும்பில் கனவின் எரிந்தாள். கடையல குரலம் கழையூடு கஞல அடர்வெங்கானம் நடைபயில் உழுவை பைந்நிணம் கிழிக்க பாய்தந்தன்ன பிரிதுயர் பிய்த்த உயிர்நைந்தாள் என்னே. யா மரத்துச் சாமரத்தன்ன அணிநிரல் பூக்களின் படுநிழல் ஆங்கு வேழம் கிடந்த உருசெத்து […]
ருத்ரா பழைய நாட்களை சுமந்து திரிபவன்எனும் பிணம் தூக்கியா நீ?வரும் நாட்களை வருடும் பீலிகளாய்அதன் அழகை உச்சிமோந்துபார்ப்பவனா நீ?எப்படியானாலும் அதுவாழ்க்கை தான்.அதன் முதுகு உனக்கு அரிக்கிறது.அதன் முகமோ முழுநிலவாகவேஎப்போதும் உனக்குபால் வார்க்கிறது வெளிச்சத்தில்.வாழ்க்கைப் புத்தகம்புத்தக திருவிழாக்களில்அகப்படுவது இல்லை.மகிழ்ச்சியும் துயரமுமேஅச்சுக்கூடங்கள்.அந்த புத்தகத்தைபுரட்டிக்கொண்டிருக்கத்தான்உன்னால் முடியும்.எழுத்துக்கூட்டி வாசித்துப்பார்.உயிர் எழுத்துக்கு மெய் எழுத்துஒட்ட வருவதில்லை.உயிர் மெய் எழுத்துக்கூட்டங்களும்கூடவெறும் உணர்ச்சிகளின்கூட்டாஞ்சோறு மட்டுமே.பசியும் சோறும்பந்திவிரிக்கும் நாட்களில்உன் புத்தகம் காற்றில்படபடக்கிறதுவெற்றுப்பக்கங்களாய்!
ஒரு கையில் கிட்டாரும் மறு கையில் கோடரியுமாக இருக்கும் கண்களுக்குத் தெரிந்தும் தெரியாமலுமாய் தெருக்களில் திரிந்துகொண்டிருக்கும் அவர்கள் ஒரு தலையை வெட்டிவிட்ட பிறகு கிட்டாரை வாசிக்கிறார்கள். அல்லது கிட்டார் வாசித்த கையோடு காணக்கிடைத்த தலையை அல்லது தலைகளை கனகச்சிதமாகக் கொய்துவிடுகிறார்கள். தன்னிசையாகக் கிளர்ந்தெழும் கோபம் பெரிதா தருவிக்கப்பட்ட கோபம் பெரிதா என்ற பட்டிமன்றங்கள் நடத்தப்படுவதேயில்லை. தேவைப்படும்போதெல்லாம் சில அன்னாடங்காய்ச்சிகளின் சிரசுகளில் கிரீடங்களைப் பொருத்துகிறார்கள் கையோடு கரும்புள்ளி செம்புள்ளிகளையும் குத்திவைக்கிறார்கள் கிட்டாரின் இனிமையான இசையின் பின்னணியில் அவர்களைத் தெருவோரமாக […]
வெயிலில் காய்ந்ததைவறட்சி வாட்டியதைவெள்ளம் விரட்டியதைபுயல்கள் புரட்டியதைஎந்தத் தாவரமும் தன்பூவிடம் சொல்வதில்லை அமீதாம்மாள்