படித்தோம் சொல்கின்றோம்: நூலகர் என். செல்வராஜா ஆவணப்படுத்தியிருக்கும் வீரகேசரியின் பதிப்புலகம்

This entry is part 4 of 14 in the series 19 மார்ச் 2023

முருகபூபதி மலர்ந்துள்ள 2023 ஆம் ஆண்டில் ஓகஸ்ட் மாதம் 06 ஆம் திகதி வந்தால், இலங்கையின் தமிழ்த்தேசிய தினசரியான வீரகேசரி பத்திரிகைக்கு 93 வயது பிறந்துவிடும்.இலங்கைத் தமிழ் இதழியலில் காத்திரமான சேவையை மேற்கொண்டுவந்திருக்கும் வீரகேசரி சமூக, அரசியல் செய்தி ஏடாக மாத்திரம் துலங்காமல், கலை, இலக்கியத்துறையின் வளர்ச்சிக்கும் காத்திரமான பணிகளை தொடர்ச்சியாக வழங்கியது. வீரகேசரி பாசறையில் வளர்ந்த பலர், பின்னாளில் சிறந்த ஊடகவியலாளர்களாகவும், படைப்பிலக்கியவாதிகளாகவும் உருமாறினர்.எண்ணிலடங்கா சிறுகதைகள், தொடர்கதைகள் , அரசியல் ஆய்வுகளை வெளியிட்டு வந்திருக்கும் வீரகேசரி […]

60 ஆண்டுகால “வடக்கன்” அரிப்பு

This entry is part 13 of 13 in the series 12 மார்ச் 2023

திராவிடப்புண்ணாக்கன் வடக்கத்தியானை விரட்டப் புறப்பட்டிருப்பது ஏறக்குறைய அண்டர்வேருக்குள் நெருப்பை அள்ளிக் கொட்டிக்கொள்வதற்குச் சமமானது. இங்கே வடக்கத்தியானை விரட்டியடித்தால், வடக்கே தமிழனை விரட்டியடிப்பார்கள். அதன் மூலமாக அரசியல் லாபம் பார்க்கலாம் என்று நினைப்பது பேராபத்தில் முடியும் என்பதினை திராவிடப்புண்ணாக்கன் உணருவது நல்லது. இல்லாவிட்டால் சிக்கல்தான். தமிழகத்திற்கு வெளியே, இந்தியாவெங்கும் ஏறக்குறைய இரண்டு கோடித் தமிழர்கள் வசிக்கிறார்கள். தோராயமாக பெங்களூரில் பத்து இலட்சம், மும்பையில் முப்பது இலட்சம், தில்லியில் பதினைந்து, பீகாரில் ஐந்து எனப் பரவலாக தமிழர்கள் வசிக்காத இடமே […]

சிலிக்கான்வேலி வங்கி திவால்

This entry is part 12 of 13 in the series 12 மார்ச் 2023

சென்ற வெள்ளிக்கிழமையன்று அமெரிக்காவின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான சிலிக்கான்வேலி வங்கி திவாலாகியிருக்கிறது. அதில் ஆச்சரியமூட்டும் விஷயம் என்னவென்றால் மொத்த வங்கியும் நான்கே மணி நேரங்களில் ஊற்றி மூடியதுதான். 2008-ஆம் வருடம் வாஷிங்டன் ம்யூச்சுவல் வங்கி திவாலானதுடன் அமெரிக்கப் பங்குச் சந்தை பெரும் சரிவினைச் சந்தித்தது. அதுபோன்றதொரு சரிவு திங்கட்கிழமையன்று ஆரம்பமாகலாம் என அஞ்சப்படுகிறது. 2008-ஆம் வருடச் சரிவினை டாலரை அச்சடித்துத் தள்ளிச் சரிக்கட்டினார்கள். இந்தமுறை அப்படிச் செய்வது சிரமம்தான். சிலிக்கான்வேலி வங்கியில் என்ன நடந்தது என்பதனைக் […]

ஆப்பிரிக்காவில் இந்தியா: தெற்கு-தெற்கு ஒத்துழைப்பின் மாறிவரும் முகம்

This entry is part 11 of 13 in the series 12 மார்ச் 2023

மீரா வெங்கடாசலம் மற்றும் டான் பானிக் உலக விவகாரங்களில் அதிக செல்வாக்குமிக்க பாத்திரத்தை வகிக்கும் குறிக்கோளுடன் செயல்படும் புது தில்லியின் வெளியுறவுக் கொள்கை, அதன் உத்தியாக வெளிநாடுகளில் உதவி மற்றும் முதலீட்டுக் கொள்கைகளை வகுக்கிறது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பெறுவதற்கான இந்தியாவின் நீண்டகால பிரச்சாரத்திற்கு ஆப்பிரிக்க நாடுகளின் ஆதரவு முக்கியமானது என்பதால், இந்தியாவின் திட்டங்களில் ஆப்பிரிக்க கண்டம் எப்போதும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது . அதிகமான இந்திய நிறுவனங்கள் உலகளாவிய இருப்பை நிறுவ முயல்வதால், […]

ஒரு பூச்சி மூளையின் முழுமையான வரைபடம்

This entry is part 10 of 13 in the series 12 மார்ச் 2023

வில் சல்லிவன் ஒரு பழ ஈயின் லார்வா ஒரு அங்குலத்தின் ஒரு பகுதி மட்டுமே நீளமானது, அதன் மூளை தூளான உப்பின் அளவேதான். ஆனால், அந்த சிறிய உறுப்புக்குள் என்ன இருக்கிறது என்பதைப் பற்றிய முழுமையான படத்தைப் பெற விஞ்ஞானிகளின் முயற்சி தற்போது வெற்றியடைந்துள்ளது. இப்போது, ​​ஆராய்ச்சியாளர்கள் ஒரு லார்வா பழ ஈவின் மூளையில் நியூரான்கள் மற்றும் அவற்றுக்கிடையேயான தொடர்புகளின் விரிவான வரைபடத்தை உருவாக்கியுள்ளனர். 3,016 நியூரான்கள் மற்றும் 548,000 இணைப்புகள், சினாப்சஸ் என்று அழைக்கப்படுகின்றன, இதன் […]

வாங்க ” டீ” சாப்பிடலாம்.!!!

This entry is part 16 of 18 in the series 5 மார்ச் 2023

ரா. செல்வராஜ் டீ ‘ சாப்பிடும் போது ஏற்படும் ஒரு சில சாகசங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். “டீ ” என்பது ஒரு ‘குடிநீர்’ என்பதைத் தாண்டி , அது ஒரு ஊக்க சத்தியாக, உந்து சக்தியாக, சிந்தனைப் பெருக்காக, சிறகடிக்கும் எண்ணங்களை சீர் செய்யும் ஒரு யாகமாக, சமூக உரையாடல்களின் ஒரு அங்கமாக, மேலும் சொல்லப் போனால் ஏழைகளின் பங்காளியாக , ஒரு விருந்துக்கு ஒப்பான ஒரு மனநிறைவை ஏற்படுத்தித் தரும் ஆன்ம பலமாக ….( […]

புகை உயிருக்கு பகை

This entry is part 15 of 18 in the series 5 மார்ச் 2023

முனைவர் என்.பத்ரி            இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின், கனடா உட்பட உலகம் முழுவதும் இளைஞர்கள் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி வருவது வேதனைக்குரியது.புகைபிடிக்கும் ஒருவர், ஒருமுறை புகைபிடிக்கும்போது தன்னுடைய வாழ்நாளில் ஐந்து நிமிடத்தை இழக்கிறார். ’வாழ்நாள் முழுவதும் புகைபிடித்துக் கொண்டே இருப்பவர் தன்னுடைய ஆயுட்காலத்தில் 10 முதல் 11 ஆண்டுகள்  வரை  இழந்து விடுகிறார்’ என்கிறது உலக சுகாதார அமைப்பு. உலகம் முழுவதும் புகையிலையால் ஒவ்வொரு 8 வினாடிக்கும் ஒருவர் உயிரிழக்கிறார்’ என்கிறது அந்த அமைப்பின் […]

கசக்கும் உண்மை

This entry is part 4 of 15 in the series 26 பெப்ருவரி 2023

லதா ராமகிருஷ்ணன் தமிழ் மாணவர்கள் தங்கள் தாய்மொழியறிவிலும் தேர்ச்சியிலும் மிகவும் பின்தங்கியிருக்கிறார்கள் என்று சமீபத்தில் INSTITUTE FOR COMPETITIVENESS, STANFORD நடத்திய சுற்றாய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. பிப்ரவரி 25, 2023 தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளிதழில் கல்வி தொடர்பாக INSTITUTE FOR COMPETITIVENESS, STANFORD நடத்திய சுற்றாய்வு ஒன்றின் முடிவுகள் தரப்பட்டுள்ளன. இந்தியாவில் 10000 பள்ளிக ளில் 20 தாய்மொழிகளில் பயிலும் 86000 மூன்றாம் வகுப்பு மாணாக்கர் களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் தமிழ்மொழித்திறன் தமிழ் […]

பேராசிரியர் எஸ். பசுபதி அவர்களின் பிரிவுத்துயர் பகிர்வு

This entry is part 9 of 11 in the series 19 பெப்ருவரி 2023

குரு அரவிந்தன். பேராசிரியர் பசுபதி அவர்களை கனடாவில் தான் முதன் முதலாகச் சந்தித்தேன். அமைதியான, சிரித்த முகத்தோடு எல்லோரோடும் அன்பாகப் பழக்ககூடிய ஆழ்ந்த இலக்கிய அறிவு கொண்ட மனிதராக அவரை என்னால் இனம் காணமுடிந்தது. அதன்பின் அவரை அடிக்கடி ரொறன்ரோ தமிழ் சங்கத்தில் சந்திப்பதுண்டு, அவரது உரைகளையும் கேட்டிருக்கின்றேன். அதுமட்டுமல்ல, அவரோடு ஒருநாள் உரையாடியபோது, அவர் தன்னை எனது வாசகன் என்று சொல்லி என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்திருந்தார். ரொறன்ரோவில் நடந்த ஒரு நிகழ்வில், சிந்தனைப்பூக்கள் எஸ். பத்மநாதன் […]

வரிதான் நாட்டின் வருமானம்

This entry is part 3 of 11 in the series 19 பெப்ருவரி 2023

முனைவர் என்.பத்ரி                ஒரு அரசுக்கு வருமானம் என்பது அந்நாட்டின் மக்கள் செலுத்தும் பல்வேறு வரிகள் மூலம் கிடைக்க கூடிய வருவாயை குறிக்கிறது. அதை கொண்டு தான் அரசு தன்னுடைய மக்களுக்கான நலத்திட்ட பணிகளை சிறப்பாக செயல்படுத்த முடியும்.இந்நிலையில், ஒரு நாட்டின் வரி வருவாய் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒரு நாட்டின் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் உத்தேச வருவாய் எவ்வளவு இருக்கும் என்பது மிகவும் தெளிவாக குறிப்பிடப்படும். அதில் குறைவு ஏற்படின் மக்களுக்கான நலத்திட்டங்கள் […]