அந்தப் பதினெட்டு நாட்கள்..! 1 – காட்டுப் பன்றிகள்

This entry is part 4 of 11 in the series 19 பெப்ருவரி 2023

குரு அரவிந்தன் 1 – காட்டுப் பன்றிகள் யூன் மாதம் 23 ஆம் திகதி சனிக்கிழமை, காலை நேரம் வானம் வெளித்திருந்தது. பாடசாலை விடுமுறையாகையால், வழமைபோல அவர்கள் தங்கள் துவிச்சக்கர வண்டியை எடுத்துக் கொண்டு பெற்றோரிடம் சொல்லி விடை பெற்றுக் கொண்டு கிளம்பினார்கள். சிறுவர்களாக இருந்தாலும், அன்று பயிற்சி நாள் என்பதால் உதைபந்தாட்டக் குழுவினரான அவர்களின் பயிற்றுநரின் வீட்டிற்குச் சென்றார்கள். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விளையாட்டுப் பிடிக்கும், அதுமாதிரி இவர்களுக்குக் உதைபந்தாட்டம் பிடித்திருந்தது, பிடித்திருந்தது என்று சொல்வதைவிட உதைபந்தாட்டத்தில் […]

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -1 காட்சி -2 பாகம் : 8

This entry is part 2 of 11 in the series 19 பெப்ருவரி 2023

மூர் தளபதி ஒத்தல்லோ & பணியாள் புருனோ  நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன]  ஒத்தல்லோ : வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி] [45 வயது]  மோனிகா : செனட்டர் சிசாரோவின் மகள். ஒத்தல்லோவின் மனைவி [25 வயது]  புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன் [30 வயது]  காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது]  ஷைலக் : செல்வந்தச் சீமான் மகன்  சிசாரோ : மோனிகாவின் தந்தை.வெனிஸ் செனட்டர் [60 […]

நாவல்  தினை             அத்தியாயம் இரண்டு    CE 300

This entry is part 15 of 16 in the series 12 பெப்ருவரி 2023

இரா முருகன் அந்தியோடு மிழவும் உயிர்த்தது மலையில். கடல்கோள் துயரம் பாடிக் கேட்க கணியனைச் சுற்றி பத்து பேர் அமர்ந்திருந்தார்கள்.  நாகன் கணியன் கடல்கோளின்    பதினெட்டாம் ஆண்டு   நிறைவாகி,  சூரிய மண்டல கிரகங்கள் திரும்ப நிலைக்கும் தினம் இன்று எனக் கணித்திருந்தான். கடல்கோள் தினத்தன்று சமவெளியில்    கடல் பொங்கி உயர்ந்து உள்ளே புகுந்து எல்லாவற்றையும் எல்லாரையும் அலைகளில் பொதிந்து அடித்துப்போய் கடலில் உயிர் நீக்கச் செய்தது. மலைப் பிரதேச மக்கள் எந்த உதவியும் செய்ய இயலாமல் மலை […]

இல்லாத இடம் தேடி

This entry is part 13 of 16 in the series 12 பெப்ருவரி 2023

மீனாட்சி சுந்தரமூர்த்தி நாங்கள் இரயில் நிலையம் வந்தபோது  மணி  12.45 ஆகிவிட்டிருந்தது. அவசர அவசரமாக உடைமைகளை வண்டியிலிருந்து எடுத்துக் கொண்டு மூன்றாம் நடைமேடைக்கு விரைந்தோம்.பெண்கள் நாங்கள் கைப்பைகளை மட்டும் எடுத்துக் கொண்டு படியேறுவதற்கே  சிரமப்பட்டோம். ஆடவர்கள் இரண்டு கைகளிலும் சூட்கேஸ்களை எடுத்துக் கொண்டு ஏறினார்கள். ஒரு வழியாக இரண்டாம் வகுப்பு  ஏ.சி கோச்சில் ஏறி  இருக்கைகளில் அமர்ந்த பத்து நிமிடத்தில் சரியாக. 1.20 க்கு இந்த ஜெஸித் -சென்னை விரைவு வண்டி  புறப்பட்டு விட்டது.. 11 மணிக்கே […]

காதல் ரேகை கையில் இல்லை!

This entry is part 12 of 16 in the series 12 பெப்ருவரி 2023

குரு அரவிந்தன் (சேராவிடினும் நான் துன்புற மாட்டேன் இந்த அணையை நான் என்று எண்ணிடுவாய்..!) எனக்கு என்ன ஆச்சு, எதுவும் புரியவில்லை. ஒரு பெண்ணைக் கண்டவுடன் ஏற்படும் ஈர்ப்பு இவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருக்குமா என்று நினைத்துப் பார்த்தேன். திரும்பத் திரும்ப அவளையே பார்க்கத் தூண்டிய மனசு அவளைச் சுற்றிச் சுற்றியே வந்தது. மனசும் ஒரு தேனீ போலத்தான் இருக்குமோ என்ற நினைத்தேன். மொட்டாக இருந்தால் உதாசீனம் செய்வதும், மலரப் போகிறது என்று தெரிந்தல் சுற்றிச் சுற்றி […]

பாடம்

This entry is part 4 of 16 in the series 12 பெப்ருவரி 2023

கே.எஸ்.சுதாகர் சூரியகுமாருக்கு நாளை காலை பத்திற்கும் பன்னிரண்டுக்கும் இடைப்பட்ட சுப வேளையில் திருமண எழுத்து நடைபெற இருந்தது. சூரியகுமாரின் அக்காவும் அத்தானும் மகள் ஆரபியும் நான்கு நாட்கள் முன்பதாகவே வீட்டிற்கு வந்துவிட்டார்கள். அக்கா தான் வீட்டிற்கு மூத்தவள். அதற்கடுத்து வரிசைக்கிரமமாக ஐந்து ஆண்கள். சூரியகுமார் கடைக்குட்டி. அப்பா துரை சாய்வனைக்கதிரைக்குள் ஒருக்களித்துச் சரிந்தபடி எல்லாவற்றையும் அவதானித்தபடி இருக்கின்றார். அவரால் முன்னையைப்போல ஓடியாடி வேலைகள் செய்ய முடிவதில்லை. அவர் தனது மகளுக்கும், மூத்த மருமகளுக்கும் துரோகம் இழைத்துவிட்டதாக நினைத்து […]

ஷேக்ஸ்பியர் நாடகம் ஒத்தல்லோ அங்கம் -1 காட்சி -2 பாகம் -7

This entry is part 1 of 16 in the series 12 பெப்ருவரி 2023

[ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்]தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++ [ வெனிஸ் கருமூர்க்கன் ] அங்கம் -1 காட்சி -2 பாகம் : 7 ++++++++++++++++ நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன] ஒத்தல்லோ : வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி] [45 வயது] மோனிகா : செனட்டர் சிசாரோவின் மகள். ஒத்தல்லோவின் மனைவி [25 வயது] புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன் [30 வயது] காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் […]

தினை – நாவல் ( பூர்வாங்கம் )

This entry is part 5 of 8 in the series 5 பெப்ருவரி 2023

இரா முருகன் சில குறிப்புகள்  1) தினை என்பது சிறு தானியம் -foxtail millet. இந்த 2023-ஆம் ஆண்டு உலகச் சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. தினை நாவல் அந்தக் கொண்டாட்டத்தில் பங்குபெறும் 2) தினை நாவல் எழுதப்பட்டுக் கொண்டிருக்கும்போதே திண்ணையில் பிரசுரமாக இருக்கிறது.  நாவல் ஆசிரியர் என்ற முறையில் எனக்கும் வாசகர்களுக்கும் புது அனுபவமாக இது இருக்கலாம் 3)நாவலின் மொழிநடை பண்டிதத் தமிழிலிருந்து பாமர மொழிப் பயன்பாடு வரை பரவியிருக்கும் 4)தினை ஃபாண்டஸி, மாய யதார்த்தம், சர்ரியலிசம், அறிவியல் […]

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் 

This entry is part 4 of 8 in the series 5 பெப்ருவரி 2023

அங்கம் –1 காட்சி –2 பாகம் : 5 [ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்]தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++ [ வெனிஸ் கருமூர்க்கன் ] ++++++++++++++++ நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன] ஒத்தல்லோ : வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி] [45 வயது] மோனிகா : செனட்டர் சிசாரோவின் மகள். ஒத்தல்லோவின் மனைவி [25 வயது] புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன் [30 வயது] காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது] ஷைலக் : செல்வந்தச் சீமான் மகன் […]

வேரில் பழுத்த பலா

This entry is part 19 of 20 in the series 29 ஜனவரி 2023

குரு அரவிந்தன் வீடு வெறிச்சிட்டுக் கிடந்தது. காலையில் எழுந்து நிலானி பள்ளிக்குச் சென்று விட்டாள். செல்லும்போது ஓடி வந்து வழமைபோல கட்டி அணைத்து முத்தம் தந்துவிட்டுச் சென்றாள். உடம்பு வளர்ந்து விட்டதே தவிர மனசளவில் எந்தவொரு கவலையும் இல்லாத குழந்தையாகவே இருந்தாள். தெளிந்த நீரோடையாய் நகர்ந்த எங்கள் குடும்ப வாழ்க்கையில் சிறு தடுமாற்றம், காரணம் சென்ற வாரம் மகள் வயதிற்கு வந்து விட்டாள் என்ற உண்மைதான். கற்பனை உலகிலிருந்த என்னை நிஜவாழ்க்கைக்கு இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தியிருந்ததும் […]