தமிழக தேர்தல் விளையாட்டுகள்

This entry is part 1 of 17 in the series 10 ஏப்ரல் 2016

ஐந்து வருடத்துக்கு ஒரு முறை தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க கொடுக்கும் வாய்ப்பை பெரும்பாலான தமிழக மக்கள் இலவசத்துக்கும் இருநூறு ரூபாய்க்கும் போல விற்றுவிடுவதை சமீப காலமாக செய்து வருகிறார்கள். அப்படியிருந்தும் தமிழ்நாட்டில் தோசையை திருப்பி போடுவதை போல ஒரே திராவிட கட்சியின் இரண்டு பக்கங்களை மாறி மாறி தங்களை சுட அனுமதித்துகொண்டிருக்கிறார்கள். கிரிக்கெட் வெறியர்கள் போல தேர்தல் செய்திகள் வெறியர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இது ஐந்து வருடத்துக்கு ஒருமுறை வரும் கிரிக்கட் கோலாகலம் எனலாம். இந்த முறை […]

தினமும் கொஞ்சம் ஜெயகாந்தன்

This entry is part 2 of 17 in the series 10 ஏப்ரல் 2016

2000 ஆம் ஆண்டு. ஜெயகாந்தன் அமெரிக்கப் பயணத்தில் நியூ ஜெர்ஸியில். நண்பர்களுடனான உரையாடல். விழுதுகள் குறுநாவல் குறித்தும் ஓங்கூர்ச் சாமியார் குறித்தும் பேச்சு. ஓங்கூர்ச் சாமியார் இறந்துவிட்டார் என்று தெரிந்ததும் ஜெயகாந்தன் போனாரா என்ற கேள்வி. பொதுவாக யார் சாவுக்கும் போகாத ஜெயகாந்தன் தன் நண்பரும் ஓங்கூர்ச் சாமியாரை அறிந்தவருமான நடிகர் சுப்பையாவுடன் போனதாகச் சொன்னார். ஓங்கூர்ச் சாமியாருக்கு சாவுக்கிரியைகள், அலங்காரம் செய்து வைத்திருந்தார்கள். பார்த்தால் ஓங்கூர்ச் சாமியார் மாதிரியே தெரியவில்லை. உடனே கிளம்பி வந்துவிட்டேன் என்றார். […]

தொடுவானம் 115. சிங்கப்பூர் பயணம்.

This entry is part 3 of 17 in the series 10 ஏப்ரல் 2016

தொடுவானம் டாக்டர் ஜி. ஜான்சன் 115. சிங்கப்பூர் பயணம். இரண்டாம் வருடத் தேர்வுகள் அனைத்தும் முடிந்து விட்டதால் ஒரு மாதம் விடுமுறை விடப்பட்டது.கல்லூரி மீண்டும் தொடங்கும்பொது முடிவுகள் தெரியும். அப்பா என்னை சிங்கப்பூர் வரச் சொல்லி எர் இந்தியாவில் பணம் கட்டிவிட்டார். நான் விடுதியிலிருந்தெ பிரயாணத்துக்குத் தேவையானவற்றை முன்பு சிங்கப்பூரிலிருந்து கொண்டு வந்திருந்த சூட் கேசில் அடுக்கிக்கொண்டு சென்னை புறப்பட்டேன். சம்ருதி, டேவிட் ராஜன், பெஞ்சமின் ஆகியோர் சிங்கப்பூர் சட்டைகள் கொண்டுவரச் சொன்னார்கள். அப்போதெல்லாம் அந்த சட்டைகள் […]

மேல்

This entry is part 4 of 17 in the series 10 ஏப்ரல் 2016

– சேயோன் யாழ்வேந்தன் பிரபஞ்சத்தின் மேல் மிதந்த ஒரு புள்ளியின் மேல் சுழன்ற பூமியின் மேல் அமைந்த ஒரு மலையின் மேல் நின்ற ஒரு மரத்தின் மேல் விரிந்த ஒரு கிளையின் மேல் அமர்ந்த ஒரு பறவையின் மேல் விழுந்த ஒளியின் மேல் வந்தமர்ந்தது ஒரு கவிதை!

’ரிப்ஸ்’

This entry is part 5 of 17 in the series 10 ஏப்ரல் 2016

கே.எஸ்.சுதாகர் ஒன்றை நினைத்து – முற்றுமுழுதாக நம்பி – அதுவே கதியென்று தஞ்சமடைந்து, பின்னர் அது கிடைக்காமல் மனம் புழுங்குகிற கொடுமை இருக்கிறதே அதைச் சொல்லி மாளாது. அந்தக் கதிதான் இப்போ நடேசனுக்கும். வேலை பறிபோய்விட்டது. எந்தவித மின்னலுமில்லாமல் இடி முழங்கிவிட்டது. ‘ஃபரடைஸ்’ ஹோட்டலில் சாப்பிடுகிற அளவுக்கு இப்ப காசுப்புழக்கம் இல்லை. வந்தாயிற்று. சாப்பிட்டாயிற்று. சர்வர் பில்லைக் கொண்டுவந்து வைத்தான். “அட முப்பது ரூபா…” ரிப்ஸ் வைக்கக் காசு காணாத கலவரம். பொக்கற்றுக்குள் துளாவியபோது ஒரு ஐம்பது […]

பேரணைகள் அனைத்தும் வேதனைகள் அளிப்பவையா ? இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள்

This entry is part 6 of 17 in the series 10 ஏப்ரல் 2016

Hoover Dam, USA சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா   https://youtu.be/XnPi3FdNBYc https://youtu.be/mMUzO1b_q1E +++++++++++++ சென்று போன பொய்யெல்லாம் மெய்யாக சிந்தை கொண்டு போற்றுவாய் போ போ போ வென்று நிற்கும் மெய்யெல்லாம் பொய்யாக விழிமயங்கி நோக்குவாய் போ போ போ …. (போகின்ற பாரதத்தைச் சபித்தல்) மகாகவி பாரதியார் ‘பாதுகாப்பான நீர்வளப் பரிமாற்றம், அனைவருக்கும் போதிய சுகாதாரக் கழிவுநீக்க அமைப்புகள் ஆகிய இரண்டைத் தவிர, முன்னேறும் நாடுகளில் மனித உயிர்களைக் காக்கவும், நோய்களைக் […]

ஷாநவாஷின் “சுவை பொருட்டன்று- பரோட்டாவை முன்வைத்து சில கவிதைகள்

This entry is part 7 of 17 in the series 10 ஏப்ரல் 2016

சுப்ரபாரதிமணியன் ஷாநவாஷின் சிறுகதையொன்றில் “ கறிவேப்பிலை “ கடைக்காரர் கறிவேப்பிலைக் கொத்தை சடக்கென்று ஒடித்து கொசுறு போடும்போது “ வேண்டாம் எங்கள் வீட்டில் கருவேப்பிலை கன்று இருக்கிறது “ என்று அம்மா சிரித்தபடி சொல்லும் வார்த்தைகள் இன்னும் வாடாமல் அப்படியே இருக்கிறது என்று ஆரம்பித்திருப்பார்.. நவாஸிடம் இந்த கொசுறு கறுவேப்பிலை வேலையெல்லாம் இல்லை. முழு கருவேப்பிலைக் கன்றையே கையில் எடுத்துத் தந்து விடுவது போலத்தான் அவரின் விஸ்தாரணமான பேச்சு இருக்கு. பரோட்டா, கறி என்று ஓரிரு வார்த்தைகளை […]

செங்கைஆழியான் நினைவுகள்

This entry is part 8 of 17 in the series 10 ஏப்ரல் 2016

செங்கைஆழியான் நினைவுகள் ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு தமது கடின உழைப்பினால் தொண்டாற்றிய செங்கை ஆழியான் கலாநிதி கந்தையா குணராசா விமர்சனங்களுக்குள்ளாகியிருக்கும் மகாவம்சம் வரலாறு பற்றியும் ஆய்வுமேற்கொண்ட பன்னூல் ஆசிரியர். முருகபூபதி – அவுஸ்திரேலியா ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் செங்கை ஆழியானுக்கு முக்கியமான இடம் இருக்கிறது என்பதை எவரும் மறுக்கமுடியாது. இவரும் செ.கணேசலிங்கன் போன்று நிறைய எழுதியவர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் முன்னாள் மாணவராக பேராதனைப் பல்கலைக்கழகம் புகுந்த கந்தையா குணராசா என்ற இயற்பெயர் கொண்டிருந்த செங்கை ஆழியான் […]

ஹலோ நான் பேய் பேசறேன்

This entry is part 9 of 17 in the series 10 ஏப்ரல் 2016

– சிறகு இரவி 0 விபத்தில் இறக்கும் இளம்பெண்ணின் ஆவி, அவள் அலைபேசிக்குள் நுழைந்து பழி வாங்கும் வினோதக் கதை! 3 ஜி என்கிற இந்திப்படத்தின் கதையை ஒற்றியெடுத்து, கொஞ்சம் சுந்தர் சி காமெடி சேர்த்து, இயக்குனர் பாஸ்கர் உருவாக்கிய படம் சோடையில்லை! மரண கானா பாடும் வஞ்சிரத்தின் தங்கை கவிதா. அவளைக் காதலிக்கீறான் சில்லறை திருடன் அமுதன். ஒரு விபத்தில் இறக்கும் வட இந்திய / சேட்டு பெண் ஶ்ரீதேவியின் அலைபேசியை லவட்டி விடுகிறான் அமுதன். […]

support Thangavel Kids Education Fundraiser

This entry is part 10 of 17 in the series 10 ஏப்ரல் 2016

Hi Friends, Thangavel Subbu was native of Paramathi Velur, Namakkal DT, Tamilnadu. He was living with his family in Houston Texas for more than 10 Years. He passed away on April 1st after a very long and tough battling with colon cancer. Requesting you to support his Kids Education Fund Raising Campaign and help the […]