விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் நூற்றி ரெண்டு

This entry is part 36 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

  1939 ஃபெப்ருவரி 6 வெகுதான்ய தை 24  திங்கள்கிழமை   துர்க்கா, மூட்டையக் கட்டு. பிரயாணம் போற வேளை.   வேதையன் துர்க்கா பட்டனிடம் சொல்லும்போதே மெய் தளர்ந்து தாங்க முடியாத அசதி. குத்திருமல் வேறே. என்ன ஔஷதம் கழிச்சும், தயிரை விட்டொழித்து எடத்வா கேசவன் மூஸ் வைத்தியர் கொடுத்த ஆயுர்வேதப் பொடியை தேனில் குழைச்சு தினசரி நாலு வேளை விழுங்கியும் ஒழிஞ்சு போகாமல் கூடவே வந்து உசிரெடுக்கிறது. இருமித் துப்பினதில் ரத்தம் இருந்ததாக மனது […]

பஞ்சதந்திரம் தொடர் 56

This entry is part 35 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

கல்வி கற்ற முட்டாள்கள் ஒரு ஊரில் நான்கு பிராமணர்கள் நண்பர்களாக இருந்தனர். அதில் மூவர் எல்லா சாஸ்திரங்களையும் நன்கு அறிந்து கரை கண்டவர்கள். ஆனால் புத்தியென்பது கிடையாது. ஒருவன் சாஸ்திரமே அறியாதவன். ஆனால் மிகவும் புத்திசாலி. ஒரு சமயம் அவர்கள் கூடி ஆலோசித்தனர். ‘’வெளிநாட்டிற்குச் சென்று அரசர்களைச் சந்தோஷப்படுத்தி பணம் சம்பாதிக்கா விட்டால் வித்தையால் என்ன பிரயோஜனம்! அதனால் எவ்விதமாகிலும் நாம் யாவரும் வேறு தேசம் செல்வோம்’’ என்று. அவ்விதமே புறப்பட்டுச் சிறிது தூரம் சென்றதும், அவர்களில் […]

பாலஸ்தீனக் கலாசாரமும், இஸ்ரேல் கலாசாரமும் : வளமைக்குக் கலாசாரம் காரணமா?

This entry is part 34 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

  ரிச்சர்ட் லாண்டெஸ் கலாச்சாரத்துக்கும், தேசங்களின் வளமைக்குமான தொடர்பு பற்றி  மிட் ராம்னி சரியாகத்தான் சொன்னார். இஸ்ரேலிய பொருளாதார வளர்ச்சிக்கான கலாச்சார பரிணாமங்களை பற்றி மிட் ராம்னி ஜெருசலத்தில் பேசியது ஒரு புயலை கிளப்பியுள்ளது. பாலஸ்தீன கலாச்சாரத்தை விமர்சித்ததாக சரியாக புரிந்துகொண்ட பாலஸ்தீன அதிகாரப்பூர்வ அறிவிப்பாளர் சாய்ப் எரிகட் (Palestinian spokesman Saeb Erekat), மிட் ராம்னியை ஒரு இனவெறுப்பாளர் (racist) எனவும், பாலஸ்தீனத்து பொருளாதார பிரச்னைகளுக்கு இஸ்ரேலின் ஆக்கிரமிப்பே காரணம் என்றும் கூறினார். எரிகட் அவர்களது […]

அமெரிக்கப் பார்வை – மீண்டும் ஒரு தேர்தல்

This entry is part 33 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

டெக்ஸன்  ரோனால்ட் ரீகன் காலத்திலிருந்து பார்த்து வரும் விளையாட்டு  இது. அமெரிக்கா வந்த புதிதில், தேர்தல் பிரச்சாரங்களும், போட்டியிடுபவர்களிடையே நடைபெறும் வாக்குவாதங்களும், வார்த்தைப் போர்களும், தொலைக்காட்சியில் நிருபர்களின் புத்திசாலித்தனமான நேர்காணல்களும் பிரமிப்பை ஏற்படுத்தும். இன்று இவை எப்போது முடியுமென்று எதிர்பார்க்க வைக்கும் சடங்குகளாகி விட்டன. ரீகனுக்குப் பிறகு அப்பா புஷ், க்ளிண்டன், மகன் புஷ், ஒபாமா என்று பல தலைவர்களைப் பார்த்தாகி விட்டது. நான்கு வருடம் முன்பாவது சற்று உற்சாகம் இருந்தது. இனி எந்த புஷ்ஷையும் பார்க்க […]

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் – அங்கம் -2 பாகம் -7

This entry is part 32 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

  ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல !  ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல !  ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன. பெர்னாட் ஷா (Preface […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 32) மரித்த காதலன் !

This entry is part 31 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை […]

வெந்து முளைத்த விதைகள்:நாவல் குமாரகேசனின் ‘ கோட்டை மொம்மக்கா” சிறுகதைத்தொகுதி

This entry is part 30 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

கொங்கு நாட்டு வட்டார மொழிப்பிரயோகமும், வாழ்க்கையும் கவனிக்கத்தகுந்த அளவில் நாவல்குமாரகேசனின் படைப்புகளில் சமீபத்தில் வெளிப்பட்டிருப்பதால் அவரைக் கூர்ந்து கவனித்து வந்தேன். பெயரில் இருந்த விசித்திரத்தன்மையும் கூட. நாவல் என்பது பழமா, ஊரா, பெண்ணா என்று குழப்பம் தந்த்து..குமாரகேசன் என்ற பெயர் குமரேசனிலிருந்து ஏதோ மருவி யிருப்பது தெரிந்தது. அத்ற்கெல்லாம் விளக்கம் அவரின் நூலில் இருக்கிறது. அதை வெகு தாமதமாகவே தெரிந்து கொண்டேன். அவர் கொங்கு நாட்டு ஆசாமி . கேரளாவில் தொழில் செய்கிறார் என்பதும்,கொங்கு வட்டாரப் பிரயோகம் […]

மொழிவது சுகம்: ஆகஸ்டு10-2012

This entry is part 29 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

1. வாசிப்பு எவரெஸ்டுகள்’ The millions இணைய இதழ் ‘வாசிப்பு எவரெஸ்டுகள்’ என்ற விருதுக்கு தகுதியானவையென 10 இலக்கிய படைப்புகளை பட்டியலிட்டிருக்கிறது. உலகில் இதுவரை எழுதிவெளிவந்த படைப்புகளில் கடுமையானதாகவும், எரிச்சலூட்டும்வகையிலும் இருப்பவையென தேர்வு செய்ததோடு அப்படியொரு நிலைக்கு அப்படைப்புகள் தள்ளப்பட்டதற்கான காரணங்களையும் தெரிவித்திருக்கிறது. 1. Nightwood – Djuna Barnes. 2. A tale of a Tub – Jonathan swift 3. The Phenomenology of the sprit -G.F. Hegel 4. to […]

மரமும், நானும், விட்டுப் போன உரையாடல்களும்

This entry is part 28 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

  (1) ’செளக்கியமா—’ திரும்பிப் பார்ப்பேன். எங்கிருந்து குரல்? தெரியவில்லை. சிறிது நேரம் சென்று துணிகள் காயப்போட வெளிமாடம் வருவேன். ’செளக்கியமா—’ திரும்பிப் பார்ப்பேன். அருகிலிருந்து குரல். ஒரு மரம் விசாரிக்கும். பத்து வருடங்கள் முன் பார்த்த அதே மரம். என் ஞாபகம் இருக்கிறதா? -நான். ஞாபகமா? -மரம். வேலை மாற்றலாகி வந்து விட்டேன் இங்கே. ’வயசாயிருச்சே’? -நான். என்ன சொல்கிறாய்? புரியவில்லை. -மரம். எத்தனை வருடங்கள் இருக்கிறாய் இங்கு? -நான். இந்தக் கணத்தில் இருக்கிறேன். -மரம். […]

2012 ஆகஸ்டு செவ்வாயில் இறங்கிய நாசாவின் தளவூர்தி இயங்கத் துவங்கியது

This entry is part 27 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

  (கட்டுரை : 2) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா செவ்வாய்க் கோள் செம்மண்ணில் ஊர்ந்து போகுது நாசாவின் ஆர்வ நோக்கி ஊர்தி. நூதனத் தளவூர்தி. சாதனை புரியும் வாகனம் ! தாறுமா றான களத்தில் ஆறு சக்கரத் தேர் உலவும் ! நீள மானது ஊர்தி ! கனமானது ! இரண்டாண்டு இயங்கும். இதுவரை ஏவப் படாத புதுமுறை விஞ்ஞான ஆய்வகம் ! கதிரியக்க மின்சக்தியும் பரிதி வெப்ப மின்கலமும் கருவிகளை இயக்கும் […]