சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 55

This entry is part 36 of 36 in the series 18 மார்ச் 2012

சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 55 இந்த வாரம் படங்கள் இருப்பதால் பிடிஎப் கோப்பு இணைக்கப்பட்டுள்ளது. அதனை தரவிறக்கம் செய்து படித்துகொள்ளவும்   பிடிஎப் கோப்பு Samaskritam kaRRukkoLvom 55 (1)   ஒலிப்பதிவு Samskritam 55          

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 15

This entry is part 35 of 36 in the series 18 மார்ச் 2012

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ஏழு கொடூரப் பாபங்கள் ! அவை என்ன தெரியமா ?  உணவு, உடை, எரிசக்தி, வரி, வாடகை, மானிட மதிப்பு, குழந்தைகள் ஆகியவை ஏழு கொடூரப் பாபங்கள் என் நோக்கப்படி.  அத்தனை மானிடப் பாபங்களுக்கும் விமோச்சனம் அளிப்பது ஒன்றே ஒன்றுதான் !  அதுதான் பணம்.  உலகில் அனைவரும் தேடும், தொழும், ஏங்கும் பணம் !  அதை நம் தொழிற்சாலைகள் விளைவிக்க […]

நவீன புத்தன்

This entry is part 34 of 36 in the series 18 மார்ச் 2012

ஆயிரமாயிரம் உயிர்களைக் கொன்று குவித்த கர்வத்தை குடையாய்க் கொண்ட இரதமொன்றை பூட்டி நான்கு மாடவீதியில் உலா வந்தேன். தெருவின் முனையில் இடைம‌றித்த‌ ஒருவ‌ன் த‌ன்னை புத்த‌னென‌ சுய‌ அறிமுக‌ம் செய்து கொண்டு இர‌தத்தில் ஏறிக்கொண்டான். யுத்த‌ க‌ள‌த்தின் மொத்த‌ச் செந்நீர் நாற்ற‌மும் என் உட‌லில் அப்பியிருப்ப‌தாய்ச் சொல்லி அவ‌ன் வெண் ஆடை துறந்து என் மேனியில் ப‌டிந்திருந்த‌ க‌றையைத் துடைத்து தன‌தாக்கினான். ஒரு சேவ‌க‌னின் செய‌லெனக்‌ க‌ருதி அமைதி காத்தேன். அன்பு ஆசையுறாமை ஜீவ‌காருண்ய‌மென‌ ஒரு நீண்ட‌ […]

அன்பளிப்பு

This entry is part 33 of 36 in the series 18 மார்ச் 2012

அந்தக் கவிஞனின் உறுப் பெல்லாம் யாப்பு நரம்பெல்லாம் மரபு அசையும் சீரும் அடி தொழும் துடிக்கும் அவன் எழுத்தில் அந்த வெல்லக் கவிஞனுக்கு பிள்ளைத் தமிழ் எழுத கொள்ளை ஆசை தமிழையே தண்ணீராய்ப் பருகும் தன் தலைவன் மீதே பிள்ளைத் தமிழ் பாடினான் தன் பொன்விழாவில் தந்தான் ஐநூறு பேரை அழைத்தான் மூந்நூறு பேரே வந்தனர் நூலை வாங்கியோர் நூறு பேர் நூலுக்குத் தந்த சில காகித உரைகளில் காசே இல்லை இடுக்கண் களைபவனே உடுக்கை பறிப்பதா? […]

நாடகத்தில் சொதப்பாதிருப்பது எப்படி ?

This entry is part 32 of 36 in the series 18 மார்ச் 2012

ஜான் பீட்டர் தமயோன் எங்கள் வீட்டிற்குக் கொஞ்சம் தள்ளி இருக்கிற பெரிய கிணற்றிற்கு எதிர்த்தாற்போலுள்ள வீட்டில் இருப்பவன். ரயில்வே பள்ளியில் இல்லாமல் பக்கத்திலுள்ள சாமியார் ஸ்கூல் என்னும் கிறிஸ்துவப் பள்ளிக்கூடத்தில் படிப்பவன். எஸ்.எஸ். எல். சியில் அதிக மார்க் வாங்கவேண்டுமென்றால் எல்லோரும் அங்குதான் படிப்பார்கள். ரயில்வேமீது பாசம் வைத்தவர்களும் பள்ளிக்குப் பணம் கட்டமுடியாதவர்களும் ” படிக்கிற பையனாயிருந்தா எந்தப் பள்ளிக்கூடத்திலும் படிப்பான் ! ஸ்கூலும் வாத்தியார்களும் என்ன பண்ணுவார்கள்? ” என்று சொல்லி தங்கள் பிள்ளைகளை ரயில்வே […]

இலக்குமி குமாரன் ஞானதிரவியம் படைப்புகளில் கிராம சமுதாயம்

This entry is part 31 of 36 in the series 18 மார்ச் 2012

சி. இளஞ்சேரன் முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் பள்ளி தமிழ்ப்பல்கலைக் கழகம் தஞ்சாவூர் கிராம சமுதாயம் என்பது இயற்கையோடு இயைந்த சமுதாயமாகவும், மனிதர்களின் மகிழ்ச்சிக்கும், அமைதிக்கும் குறைவில்லாத சமுதாயமாகவும் விளங்குவதாக இலக்குமி குமாரன் ஞானதிரவியம் தன் படைப்புகளில் கண்டுள்ளார். இளமைக்காலத்தில் இவருக்குக் கிராம வாழ்க்கை வாய்த்திருக்கிறது. இதன்காரணமாக தன் இளமைக்கால கிராம வாழ்க்கை நினைவுகளை அவர் தன் படைப்புகளில் அசைபோட்டுப் பார்க்கிறார். “காட்டுத்தரிசில் ஆட்டை மடக்கிவிட்டு நாவல், இலந்தை, பலா, ஈச்சை, கலாக்காய், பாலா எனக் […]

சத்யசிவாவின் ‘ கழுகு ‘

This entry is part 30 of 36 in the series 18 மார்ச் 2012

வித்தியாசமான கதைக் களத்தைத் தேர்வு செய்ததற்காக, இயக்குனரைப் பாராட்ட வேண்டும். இன்னொரு மைனாவாக வேண்டிய படம். மலைப்பாதைகளில் எடுக்கப் பட்டதால், கொஞ்சம் சறுக்கி விட்டது. படத்தில் இன்னொரு வருடும் அம்சம், பிஜ்லி பட்டாசுகள் போல் ஆங்காங்கே தெறித்து விழும் மெல்லிய நகைச்சுவை. இளைஞர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்கிறார்கள். ஒரு சாதாரண மெட்டை, ஆர்கெஸ்ட்ரேஷனில், இன்னொரு தளத்திற்குக் கொண்டு போக முடியும் என்று, ஏற்கனவே இளையராஜா நிரூபித்து விட்டார் பல பாடல்களில், அவரே பாடி. வாரிசு இன்னொரு முறை […]

பஞ்சதந்திரம் தொடர் 35- பேராசை பெருநஷ்டம்

This entry is part 29 of 36 in the series 18 மார்ச் 2012

ஒரு ஊரில் வேடன் ஒருவன் இருந்தான். பாவ மூட்டையைப் பெருக்கிக் கொள்ள அவன் விரும்பினான் போலிருக்கிறது. எனவே வேட்டையாடப் புறப்பட்டான். போகிற வழியில் ஒரு காட்டுப் பன்றியைச் சந்தித்தான். அதன் உருவம் கறுத்த மலையின் உச்சிபோல் காணப்பட்டது. அதைப் பார்த்தவுடனே, அவன் வில்லில் அம்பு தொடுத்து காதுவரை நாணை இழுத்து, பின்வரும் செய்யுளைச் சொன்னான். எனது வில்லையும் அதில் தொடுத்துள்ள அம்பையும் கண்டபிறகும் அது பயமில்லாமல் என்னை நெருங்குகிறது. நிச்சயமாக அதை யமன் என்னருகில் அனுப்பி வைத்திருக்கிறான் […]

விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தொன்று

This entry is part 28 of 36 in the series 18 மார்ச் 2012

1927 January 30 அக்ஷய வருஷம் மார்கழி 17 ஞாயிற்றுக்கிழமை அறையில் மொத்தம் நாலு பேர் இருந்தார்கள். நீள்சதுரமாக ஒரு மரமேஜை. நிறம் மங்கிய ஆனால் அழுக்கோ கறையோ இல்லாத நீலத் துணி விரித்து வைத்த அந்த மேஜை மேல் நாலைந்து பேர் வசதியாகச் சாப்பிடத் தகுந்த விதத்தில் ரொட்டித் துண்டுகள், ஆப்பிள் பழம், வார்த்து அடுக்கி வைத்த கல் தோசைகள், விழுதாக இஞ்சியும் கொத்தமல்லியும் சேர்த்து நைய்ய அரைத்த துவையல், ஆரஞ்சுப் பழச் சாறு, ஓரமாக […]

மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -18

This entry is part 27 of 36 in the series 18 மார்ச் 2012

போர்ச்சுகல்லில்கூட இதுபோன்றதொரு நகரை பார்த்ததில்லைதான். ஒருவேளை லிஸ்பன் நகரை வேண்டுமானால் கிருஷ்ணபுரத்துடன் ஒப்பிட்டுபேசலாம். கீழை நாடுகளின் ‘ட்ராய்’ என்று வர்ணிக்கவும் எனக்குத் தயக்கமில்லை. 19. இதே நாட்களில் மக்களை வாட்டிவதைத்த வெயிற் காலங்களுமுண்டு. அப்போதெல்லாம் சிங்கவரம் ஸ்ரீ ரங்கநாதரை தரிசித்துவிட்டு, கிருஷ்னபுரத்தையும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறை மிதித்திடவேண்டுமென்று நான்கு திசைகளிலிருந்து கால் நடையாகவும், வண்டிகட்டிக்கொண்டும் வந்துபோகும் ஆயிரக்கணக்கான மக்கட் கூட்டத்தினராலும், மன்னரின் ஆயிரத்துக்கு மேற்பட்ட படைவீரர்ககளின் குதிரைகளின் குளம்படிபட்டும், முன்னூறுக்கு மேற்பட்ட யானைகள் அவ்வபோது வீதிகளில் […]