அசிங்கம்..

This entry is part 41 of 41 in the series 23 செப்டம்பர் 2012

ஜே.பிரோஸ்கான்- நேற்று ஒரு நாள் நானும் அவனும் நண்பர்கள் அசுசியான வார்த்தை அறுத்தல்கள் என்றும் எமக்குள் இருந்ததில்லை நட்பாகிய பொழுதுகளில். என் வெளியில் விஸ்த்தீரணம் பிரபஞ்சம் தாண்டி பேசப்படுவதாய் அவனுக்குள்ளாடிய சலசலப்பில் தானே தோற்றுப் போனதாய் கவலையாகி கண்கள் கசக்கி உறவுகள் உடைத்தெரிந்து வெட்கித்து தவிக்கிறான். எனக்கு கிஞ்சித்தும் கவலையில்லை இன்று அவனது உறவுழப்பதில். –

பஞ்சதந்திரம் தொடர் 57

This entry is part 40 of 41 in the series 23 செப்டம்பர் 2012

பிராமணனின் மனக்கோட்டை ‘’ஓர் ஊரில் சுபாவக்ருபணன் என்ற பெயருடைய பிராம்மணன் இருந்தான். அவன் பிச்சையெடுத்து வந்த மாவில் ஒரு பகுதியைச் சாப்பிட்டு மிகுதியை ஒரு பாத்திரத்தில் நிரப்பி வந்தான். அந்தப் பாத்திரத்தை ஒரு முனையில் தொங்கவிட்டு அதன் அடியில் கட்டிலைப் போட்டுக்கொண்டு எப்பொழுதும் ஒரு கண்ணால் அதைப் பார்த்துக்கொண்டே இரவில் யோசனை செய்தான்: ‘’இந்தக் குடமோ நிறைந்திருக்கிறது. எப்பொழுதாவது மாவுக்குப் பஞ்சம் ஏற்பட்டால் இதிலிருந்து நூறு ரூபாய் கிடைக்கும். பிறகு அதன்மூலம் இரண்டு ஆடுகளை வாங்குவேன். பிறகு […]

முன்குரானிய சமயப்பிரதிகளில் ஏகம்

This entry is part 39 of 41 in the series 23 செப்டம்பர் 2012

  ஹெச்.ஜி.ரசூல் 1) இஸ்லாம் முன்வைக்கும் ஏகத்துவக் கொள்கையான ஓரிறை அரசியல் நபிகள் நாயகத்தின் காலமான கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் இஸ்லாமியர்களுக்கு புதிய உண்மைகளை உருவாக்கித் தருகின்றன.  வணக்கத்திற்குரியவன் அல்லாவைத் தவிர வேறுயாருமில்லை (லாயிலாஹா இல்லல்லாஹு) அவன் தனித்தவன் (வஹ்தஹு) அவனுக்கு யாதொரு இணையுமில்லை (லாஷரீக்கலஹு) அல்லாஹ் ஒருவன் எனக் கூறுவீராக.  அல்லாஹ் தேவையற்றவன், யாரையும் அவன் பெறவுமில்லை, யாருக்கும் அவன் பிறக்கவுமில்லை.  அவனுக்கு நிகராக யாருமில்லை. (குல்ஹுவல்லாஹுஅஹது, அல்லாஹுஸமது. லம் யலித், வலம் யூலது வலம் யக்குன்லஹு, குஃபுவன் அஹது) […]

பூதக்கோள் வியாழனின் வளையத்தைச் சிதைத்த வால்மீன் முறிவு

This entry is part 38 of 41 in the series 23 செப்டம்பர் 2012

 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.youtube.com/watch?v=6j3w3G0Dttk [Comet Shoemaker Levy colliding with Jupiter]       பூதக்கோள் வியாழன் பரிதியின் புறக்கோள் களில் ஒன்று ! விண்மீனாய் ஒளிவீச  முடியாமல் கண்ணிழந்து போனது ! சனிக்கோளின் பருத்த இடுப்பில் அசுரச் சுழல்வீச்சில் சுற்றும் ஆயிரம் ஆயிரம் வளையங்கள்  ! பூதக்கோள் இடுப்பில் சுற்றுவது ஒற்றை ஒட்டி யாணம்  ! வியாழக் கோள் ஈர்ப்புத் தளத்தில் விழுந்த வால்மீன் தூளாகி கலக்கி முறித்தது […]

அக்னிப்பிரவேசம் 2 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

This entry is part 37 of 41 in the series 23 செப்டம்பர் 2012

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com விஸ்வத்தை கிராமப் பள்ளிக்கூடத்திற்கு டிரான்ஸ்பர் பண்ணி விட்டதால் குடும்பம் சொந்தக் கிராமத்திற்கு வந்து சேர்ந்தது. சிறிய ஓட்டுவீடுதான் என்றாலும் துப்புரவாய் இருந்தது. சுற்றிலும் நாலாபக்கமும் காலி இடம் இருந்தது. முன் பக்கம் முழுவதும் பூச்செடிகள். அருந்ததி கடந்த ஒரு வருடமாய் ரொம்ப பலவீனமாய் போய்க் கொண்டிருந்ததால் டாக்டரிடம் காட்டினார்கள். கேன்சர் என்று சந்தேகப்பட்டு உடனே கருப்பையை நீக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். பதினைந்து நாட்களுக்கு முன்பு […]

ஜென்ம சாபல்யம்….!!!

This entry is part 36 of 41 in the series 23 செப்டம்பர் 2012

ஏழேழு ஜென்மத்தின் இனிய இல்லறம்…!. இளையவளாய்….பொலிவுடன் புக்ககம் நுழைந்தவள்…! பிழையேதும் அறியாதவள்.. வேரோடு அறுத்து வேறிடத்தில் நட்டாலும்…ஆணிவேர் இல்லாமல் ஆழம்வரை வேர் விடுபவள்..! உறவுகள்…ஊர்வாய்…என.. வகைக்கொரு விமர்சனம்…. புதைகுழியாம் மனக்குழிக்குள்.. மாயமில்லை…தந்திரமில்லை..! மௌனத்தை…மௌனமாய்.. முழுங்கும் வித்தை கற்றவள் கற்ற வித்தை ஏதும்.. துளியும் துணை கொள்ளாதவள்…! குள்ள நரிக் கூட்டத்தின் கூடவே வாழ்ந்தவள்… நச்சுப்பாம்புக் கூடைக்குள் .. மண்ணுள்ளிப் பாம்பு இவள்….! வரமாய் வரவேண்டியதெல்லாம் வினையாய் வந்த வலி ஓங்க…! தாழ் போட்டவள்..இதயத்தை இரும்புச் சிறைக்குள்..! பாலானவள்…மாலையால்.. […]

சுறாக்கள்

This entry is part 35 of 41 in the series 23 செப்டம்பர் 2012

  எதுவோ கொடுத்த தைரியத்தில் தொடங்கி விட்டேன்.   யோசித்த பிறகே புரிந்தது தொடங்க வேண்டும் என்ற எத்தனிப்பு மட்டுமே போதுமானதாக இருந்தது தொடங்குவதற்கு.   எல்லோரும் சுற்றி வளைத்தனர் என்ன செய்யப் போகிறேன் என்பதைப் பார்க்க   அவர்களின் கேள்விப் பார்வைகள் மெள்ள மெள்ள மீன் குஞ்சுகளாய் நெளியத் தொடங்க எல்லாவற்றையும் விழுங்கியபடி முன்னேறின எனது எத்தனிப்பு சுறாக்கள். –    நிஷாந்தன்

நாள்தோறும் நல்லன செய்வோம்.

This entry is part 34 of 41 in the series 23 செப்டம்பர் 2012

முனைவர் மு.பழனியப்பன், தமிழ்த்துறைத் தலைவர், மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி, சிவகங்கை உயிரினங்கள் நாள்தோறும் செய்ய வேண்டிய கடமைகள், செயல்கள் பற்பலவாகும். காலை எழுவது, பல் துலக்குவது, உடல் சுத்தம் செய்வது, உண்பது, அலுவலகப் பணிகள் ஆற்றுவது,  மின்சாரக் கட்டணம் கட்டுவது, தொலைபேசிக் கட்டணம் கட்டுவது, குழந்தைகளின் கல்வியில் நாட்டம் செலுத்துவது, உறங்குவது என்பது போன்ற பணிகள் நாள்தோறும் வந்து குவிந்து கொண்டே இருக்கின்றன. விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் கூட இதுபோன்றே பற்பல பணிகள் உண்டு.  இப்பணிகளைக் குறைவின்றிச் […]

அடுத்தவரை நோக்கி இலக்கியத்தினூடாகத் திறக்கும் சாளரமும், சுதாராஜின் கதை சொல்லும் கலையும்

This entry is part 33 of 41 in the series 23 செப்டம்பர் 2012

  தற்போது யுத்தம் முடிவுற்றிருக்கிறது. எப்படி முடிவுற்றதாயினும் அது நல்லதே. யுத்தம் எனப்படுவது தீவிரமாகத் தொந்தரவு தரும் செயற்பாடொன்றென்பதால் அவ்வாறான ஒன்று இல்லாமலிருப்பதே நல்லது. எனினும் அண்மைக்கால அரசின் நிலைப்பாட்டையும் பேரம் பேசும் சக்தியையும் அடையாளத்தையும் தொடர்ந்தும் கொண்டு செல்வது நியாயமான பலத்தினாலல்ல. பொருளாதார பலத்தினாலும் மட்டுமல்ல. ஆயுத சக்தி எனப்படுவது உலக பலத்தைச் சமப்படுத்துவதில் பங்குகொள்ளும் ஒன்றென்பது பூகோள அரசியல் யதார்த்தத்தின் மூலமாகத் தெளிவாகும் ஒன்று. அதி நவீன ஆயுத பலங்களைக் கொண்டிருக்கும் அமெரிக்காவானது, எக் […]

அவர்கள்……

This entry is part 32 of 41 in the series 23 செப்டம்பர் 2012

– மா.சித்திவினாயகம் – இன்னமும் மணற் கிடங்குகளிலும், சுடு சாம்பலுள்ளும், காலைக்குத்தும் கற்பார்மீதும் என் வாழ்வு சந்தோசமாயிருக்கிறது.   வந்துவிழுந்த செல் துண்டுகளால் என்னைவிட்டு என் உயிர் போகாத மகிழ்ச்சி என்னுள் தாண்டவமாடுகிறது.   நான் நடந்த பாதை யெங்கும் என் இரத்தத்தைச் சந்தோசமாகப் பீச்சியடிக்கிறேன்.   வரும் சந்ததி, என் நிறமூர்த்த அலகுகளை இந்த இரத்தத் திவலைகளிலிருந்து பின்னிக்கொள்ளட்டும்.   நந்தவனமுள்ள பூஞ்சோலையில் சுதந்திர மலர் பூத்திருக்கும் என்று பூப்பறிக்க முற்பட்டவரின் சதைகள் பிய்த்துப் பிய்த்து நந்திக்கடலெங்கும் வீசிக்கிடக்கிறது.   எடுத்து மாலை தொடுங்கள் உலகக் கனவான்களே!   சாட்சியைத் தேடியும்… காட்சியைத் தேடியும்…. ஓடுவதாகச் சொல்பவர்கள் விருந்து சாப்பிடுகிறார்கள். தங்களின் விறைத்த குறிகளை எம்முள் புதைக்கத் துடிக்கிற வீராப்பில்……     நான் இன்னமும்… மணிக்கூட்டுமுள்ளைப் போல் இதே பாழும் மணல் வெளியைச் சுற்றி ஓடிக் கொண்டிருக்கிறேன்.   என்ன மாறுதலுக்கு  காத்திருக்கிறேன்- என்றோ நான் இல்லாவிட்டால் இங்கு என்ன மாறுதல் நடந்து விடப்போகிறதென்றோ எதுவும் புரியவில்லை.   இந்த எலும்புக்கூடுகளால் இனி இங்கு எதை எழுதுதல் முடியுமெனக் காலம்காலமாய் நானிருந்த மண்ணில் மறுபடி என்னைக் குடியேற்றுகின்றார்கள்.   இதுவே யதார்த்தம் போல் எங்கும் மௌனம். […]