BAT MAN & BAD MAN பேட் மேனும், பேட்ட் மேனும்

This entry is part 7 of 37 in the series 22 ஜூலை 2012

கோவிந்த கோச்சா
“ நான் இருளில் பிறந்தவன், நீயோ இருளாய் இருப்பவன்” இதற்கு மேல் அழகாக இரு எதிர்நிலை கதாபாத்திரங்களைச் சொல்ல முடியாது.
இது BAT MAN படத்தின் வரும் உன்னத வசனம்.
மாண்ரெக், முகமூடி ஃபேண்டம்” மாயாவி, சூப்பர்மேன், விக்ரமாதித்யன், போன்ற கதாபாத்திரங்களில், நம்ம ஊர் படைப்பு என்பதாலோ என்னவோ விக்ரமாதித்யன் தோளில் போட்டுக்கொண்டு ஒரே டயலாக் டயலாக்… அப்புறம் வேதாளம் போய் மரத்தில் மீண்டும் தொங்கி கொள்ளும். அதனால் தானோ என்னவோ இன்றும் நாம் நம்மை குண்டு வைப்பவர்களையும், நம் நாட்டிற்கு எதிராக அநீதி இழைப்பவர்களையும் தோளில் போட்டுக் கொண்டு பேசிக்கின்னே இருக்கோம்….
ஆனால், அவர்கள் மாண்ரெக், முகமூடி ஃபேண்டம்” மாயாவி, சூப்பர்மேன்,… என தீயவனை துவம்சம் செய்ய ”பாதகம் செய்பவரை கண்டு பயப்படாமல் மோதி மிதித்து விடும்” கதாபாத்திரங்கள்..
இதில் திரை வடிவிற்கு மிக திணறியது, BATMAN. இருள் ஏற்கனவே பலருக்கு மன அழுத்தம் அதிகரிக்கச் செய்யும்… அதனால் பலரும் மிகச் சோர்வு தரும் படங்களாக BATMAN ஐ கருதினார்கள். DEPRESSION உணர்வு அதிகமாக்கிய அந்த வௌவால் மனிதன் கதைகளை பார்ப்பவருக்கு ஒரு புத்துணர்ச்சி வரச் செய்தவர், கிறிஸ்டோபர் நோலன்…
IMDB.com ( Internet Movie Data Base ) ல் ஒரு தேடல் செய்தால் இவரின் பட்ங்கள் வரும். அதிலும் முதல் படம் The Doodle Bug (http://www.youtube.com/watch?v=-WhKt_CkXD0 ) அவரின் வீரிய வெளிப்பாட்டிற்குச் சான்று,.
அவரின் அத்துனை படங்களும் ஆழமான , மூளை இதயம் இரண்டையும் கட்டிப்போட்டு உங்களை முழுதாய் தன் படத்திற்குள் இழுக்கச் செய்யும் வித்தகம் புரியும். Hooking the audience என்பதன் அர்த்தம் முழுதாய் நாம் உணரும் படியான படங்களின் படைப்பாளிகள் அவரும் தலையாய ஒருவர் என்பதைச் சொல்லும்.
andrei rublev ஃபதேர் பாஞ்சாலி ரோஷமன் லா ஸ்ட்ரடா என்று அந்த காலத்து படங்களை பற்றி சிலாகித்த விமர்சகர்களை தன் படங்களால் உலுக்கி எடுத்தவர். சிரத்தையும், வடிவமைப்பு வித்தையும் இன்றும் இருக்கிறது என்று அந்த விமர்சகர்களுக்கு சந்தோஷம் கொடுத்தவர்.
அவரின் தி பிரஸ்டீஜ் படம் சித்து விளையாட்டு என்றே சொல்ல வேண்டும். காட்சி வடிவத்தின் திரையில் இருக்கும் அத்துனை புள்ளிகளும் இவரின் கட்டுப்பாட்டில் மேன்மையாக வந்தன.
BATMAN TRILOGY முடிவுக்கு வந்துள்ளது, http://www.voanews.com/content/batman-trilogy-ends-with-a-bang/1442398.html
நமது ஊரில் சத்ய்ஜித்ரே, அப்பு டிரைலாஜி எடுத்துள்ளார்.
மூன்று காலகட்டங்கள், மூன்று தளங்கள், என ஒரு கதாபாத்திரத்தையோ கருத்தையோ மையமாக வைத்து மூன்று படங்களில் கதை புனையப்படும்.
கிறிஸ்டோபர் நோலனுக்கு மட்டுமே இருள் கைக்குள் அடங்கி வெண் திரையில் வெளிச்சத்துடன் நர்த்தனமாடியது.
மூன்று படங்களையும் பாருங்கள்..
Batman Begins (2005) http://www.imdb.com/title/tt0372784/
The Dark Knight (2008) http://www.imdb.com/title/tt0468569/
The Dark Knight Rises (2012) http://www.imdb.com/title/tt1345836/

நம்ம ஊரில் நல்ல தியேட்டர்களில் இந்த படத்தைப் பாருங்கள். கிறிஸ்டோபர் நோலன் வசனம், காட்சியமைப்பு, ஒளி ஒலி வடிவங்கள் என அனைத்திலும் முழு ஈடுபாட்டுடன் தன்னை பிணைத்து வடிப்பவர். அவர் ஒரு தேர்ந்த கலைச் சிற்பி… பிக்காஸாவின் ஓவியங்களை கலையின் ஒரு உன்னத மைல்கல் எனில் அது ஆரம்பத்தின் ஒரு மைல்கல்,,,,, கிறிஸ்டோபர் நோலன் தற்காலத்தின் மிக முக்கிய மைல்கல்.
உலகத்தின் சினமாக்கள் பாதையில் இது ஒரு நின்று நிதானித்து பயணம் தொடர வேண்டிய அற்புத மைல்கல்…
அனுபவம் வார்த்தைகளில் கட்டுப்பட்டால் அது விமர்சனம் ஆகும்.. தமிழில் சில விமர்சனங்கள் BATMAN படம் பற்றி படித்தேன்… வேண்டாம்.. அவற்றைப் புறந்தள்ளுங்கள்… அசடுகளின் அம்மாஞ்சித்தனம் அது…
பட விவரம் அறிய http://www.rottentomatoes.com/m/the_dark_knight_rises/
நல்ல தியேட்டர் போய் அனுபவியுங்கள்…. இல்லை தரமான டிவிடியில் தரமான் ஹோம் தியேட்டம் அமைப்பிலோ பாருங்கள்… அது முக்கியம்…
வந்தனம் கிறிஸ்டோபர் நோலன்.
இவர் ஒருவருக்குத்தான் மகாபாரதத்தை படமாக எடுக்கும் திறமையும், ஆற்றலும், இருக்கிறது. முடிந்தால் இவருக்கு அதுபற்றிச் சொல்லலாம்..?
யாராலாவது முடியுமா..?
முடியும்…
தற்போதைய கிறிஸ்டோபர் நோலன் படத்தில் The Dark Knight Rises (2012) , கிண்டி பொறியியற் கல்லூரியின் 2008 முடித்த மாணவர் விஷுவல் எஃபக்ட்ஸ் டீமில் வேலைபார்த்திருக்கிறார். பெயர்: பிரவின் இளங்கோவன்.
அவருக்கு பாராட்டுக்கள். டைட்டிலில் பேர் வருகிறதய்யா… சந்தோஷமான விடயம்.
அதனால் நம் ஊர்க்காரர்கள் சிலரும் அவர் அருகே தான்…
நோலன், மகாபாரதம் எடுங்கள். நாங்கள் ஒரு அனுபவத்திற்கு காத்திருக்கிறோம்.
பி.கு:
இந்த பட முதற்காட்சியின் போது நடந்த சம்பவத்திற்கு நோலனின் அஞ்சலி
The mass shooting at an Aurora, Colorado —
Christopher Nolan, director of “The Dark Knight Rises,” condemned the shooting as “savage” and “appalling.”

“The movie theatre is my home, and the idea that someone would violate that innocent and hopeful place in such an unbearably savage way is devastating to me,” Nolan said in a statement on behalf of the cast and crew of the film. “Nothing any of us can say could ever adequately express our feelings for the innocent victims of this appalling crime, but our thoughts are with them and their families.”அச் சம்பவம் பற்றி முழுதாய் அறியhttp://www.dailymail.co.uk/news/article-2176933/Aurora-Dark-Knight-shootings-Batman-star-Christian-Bale-tells-horrified-shooting-Batman-star-Christian-Bale-tells-horrified-shooting-massacre-hits-ticket-sales.html

Series Navigationகல்வியில் அரசியல் பகுதி – 2பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பெரு வெடிப்புக்கு முன்பே பிரபஞ்சத்தில் கருந்துளைகள் சில இருந்துள்ளன (கட்டுரை 81)
author

கோவிந்த் கோச்சா

Similar Posts

Comments

  1. Avatar
    govindgocha says:

    படத்தை பற்றி முழுதாய் அறிந்து கொள்ள நினைப்பவர்கள், http://batman.wikia.com/wiki/The_Dark_Knight_Rises சுட்டவும். மேலும், அதில் இருக்கும் கதைச் சுருக்கத்தை படிக்கலாம். அதில் அற்புத நடிப்புடன் வரும் கதாபாத்திர பின்புலம் பற்றி அறிய http://en.wikipedia.org/wiki/Talia_al_Ghul சுட்டவும். இந்தியாவில் ஜோத்பூரில் முக்கிய காட்சி எடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *