author

என் பெயர்

This entry is part 7 of 8 in the series 4 ஏப்ரல் 2024

அமீதாம்மாள் எனக்குள்இன்னொரு உயிர்பேசுகிறதுபேசுகிறேன்அழுகிறதுஅழுகிறேன்சிரிக்கிறதுசிரிக்கிறேன்மௌனிக்கிறதுமௌனிக்கிறேன்வெளியேஎவர் பேசுவதும்எனக்குப் புரிவதில்லைநான் பேசுவதும்எவர்க்கும் புரிவதில்லைஅந்த இன்னொருஉயிரைத் தவிர

பயணம்

This entry is part 1 of 1 in the series 31 டிசம்பர் 2023

என் பயணத்தில் என்னைக் கடக்கும்  வாகனங்கள் பல நான் கடக்கும்  வாகனங்களும் பல அவரவர்களுக்கு  அவரவர் இலக்கு விதிகள் மீறாதவரை விபத்துகள் இல்லை

முதுமை

நதியின் இறுதி நாள் இதோ நெருக்கத்தில் கடல் அன்று மாட்டுக்கு  விலை இன்று தோலுக்கு   விலை விழுந்த தேங்காய் தென்னையைப் பார்த்து அழுகிறது இனி எல்லா நாளுமே  ஞாயிறுதான் மான்களை  விரட்டிய புலி இன்று  ஈக்களை விரட்டுகிறது குலை தள்ளியது சேய்வாழை சாயத் தயாராய் தாய்வாழை தீர்ப்பு எழுதப்படுகிறது இனி வாதாடி என்ன பயன் இறுதி அத்தியாயத்தின் இறுதி வரி  காத்திருக்கிறது முற்றுப்புள்ளி கொம்புகள் சாய்ந்தன தள்ளாடுகிறது கொடி கனரகக் கப்பல் காகிதக் கப்பலானது வந்துவந்துபோன […]

இரண்டு கவிதைகள்

This entry is part 2 of 3 in the series 10 செப்டம்பர் 2023

வாகன  இரைச்சலில் சாலைகள் காலடி  ஓசையில்  பாதைகள் இடைப்பட்ட புல்வெளியில் ஒரு மைனாவாய் மேய ஆசை ———- அவள் தைரியமாகவே உலா வருகிறாள் உரக்கப் பேசுகிறாள் எவர்தான் என்ன செய்யமுடியும்? அவளுக்கென்று ஒருவன் அவனோடு இருக்கும்வரை அமீதாம்மாள்

க…… விதைகள்

This entry is part 6 of 14 in the series 19 மார்ச் 2023

1 மனிதன் தேடும் ‘சுகம்’ ஒரு நாணயமாகத்தான் தரப்படுகிறது அதன் மறுபக்கம் ‘வலி’ 2 வெறுப்பை விரோதத்தை கோபத்தை பகையை நோக்கி எடுத்துவைக்கும் காலடிகளே ‘விவாதங்கள்’ 3 நான் எப்படிப்பட்டவன் என்று நான் சொல்வதும் பொய் அவன் சொல்வதும் பொய் அவனவன் சொல்வதும்  பொய் 4 சிவப்பு பச்சை விதி வாகனங்களுக்கு மட்டுமல்ல வார்த்தைகளுக்கும்தான் 5 பேச்சால்  யாரையும் துன்புறுத்தாமல் பேசுவது ஓர்  இன்பமான துன்பம் 6 நீ தந்த முதல் தேநீரைச் சுவைக்கையில் ஒரு சொட்டு […]

சுமைகள்

This entry is part 7 of 18 in the series 5 மார்ச் 2023

பருத்து வீங்கிய பணப்பைகையிலும் அடங்கவில்லைபையிலும் அடங்கவில்லைஅதக்கிய குரங்குவாய் மாதிரிசே! ஒரு நாள்சுங்கச்சாவடியாகிபணப்பையை சலித்தேன் காலாவதி பற்றுச்சீட்டுகள்ஒரு காலாவதி சிம்அட்டைசில மாத்திரைகள்பயனற்ற சாவிஒரு ஊக்குஇந்திய ரூபாய்கள்ஒற்றுத்தாள்கள்கடைச்சாமான் பட்டியல்கள்புகைப்படங்கள்பெயர் அட்டைகள்பேசி எண்கள்பல்குச்சிகள்செவிப் பஞ்சுகள்ஒரு பித்தான் இத்தனை சுமைகளோடுதான்நானா அமீதாம்மாள்

வெயிலில்

This entry is part 11 of 15 in the series 26 பெப்ருவரி 2023

வெயிலில் காய்ந்ததைவறட்சி வாட்டியதைவெள்ளம் விரட்டியதைபுயல்கள் புரட்டியதைஎந்தத் தாவரமும் தன்பூவிடம் சொல்வதில்லை அமீதாம்மாள்

நித்தியகல்யாணி

This entry is part 16 of 20 in the series 29 ஜனவரி 2023

அமீதாம்மாள் மகள் வீட்டில் எல்லாருக்கும் கொரொனா விமானத்தைத் தவறவிட்டு தவிக்கிறான் மகன் தைவானில் மனைவி தாலிக்கொடியில் தாயத்தைக் காணோம் இலக்கியப் பரிசுக்கு என் நூல் தேர்வு இணையத் திருட்டில் என் இரண்டாயிரம் காணோம் பள்ளியில் விபத்தாம் மருத்துவமனையில் பேத்தி நன்கொடைக்கான என்நூல் வெளியீட்டில் பத்தாயிரம் திரண்டது மாத்திரை போதாதாம் சர்க்கரைக்கு இனி இன்சுலினாம் கிழிபட்டு கிழிபட்டு தைக்கப்படுகிறது வாழ்க்கை வாசலில் நித்தியகல்யாணி எல்லாநாளுமே புதுப்புதுப் பூக்களால் சிரிக்கிறது