author

வருவேன் பிறகு!

This entry is part 16 of 42 in the series 25 நவம்பர் 2012

-பா.சத்தியமோகன் நெஞ்சில் யாருமில்லாத போது நுழைகிறேன் இருக்கின்ற சிலரும் உறக்கத்தில் இருக்கின்றனர் காற்று இன்று அமைதியாய் இல்லை எவருக்கும் அமைதி பற்றி தெரியவில்லை நன்கு அறிய முடிகிறது ஒருவன் சந்தேகிக்க எனக்கு வரும் காற்றின் முன்நின்று அதையும் தடுக்கும்போட்டியில் உள்ளான்! விலகி எழுந்துபோக நினைக்கிறேன் இருக்கின்ற சிலரின் கால்கள் உறக்கத்தில் மட்டுமே நடக்கப்பழகியுள்ளதையும் அறிகிறேன் இதற்கு மேல் நான் எழுத எண்ணிய காகிதமும் குத்துகிறது யாருமில்லாதபோது வருகிறேன் பிறகு! *****

அருந்தும் கலை

This entry is part 19 of 31 in the series 4 நவம்பர் 2012

அந்த எலுமிச்சம் பழங்களை வாங்கிவந்தேன் மொத்தம் மூன்று தந்தார்கள் தீராச் சண்டைக்கும் கசப்புக்கும் முகம்திருப்பி தெருவில் போனதற்கும் இன்னும் என்னென்னவோ பொருமல்களுக்கும் பிறகு அவர்கள் கொடுத்தவை இவை மேசையில் உள்ள அந்தப் பழங்களை இன்னும் வீட்டில் யாருமே தொடவில்லை அப்பழங்களுக்குள்ளிருக்கும் சாறு பற்றி கூசும்படி ஒரு சந்தேகம் அவர்கள் வீட்டுப் பழங்களுமா குற்றவாளி? பார்த்துக் கொண்டேயிருக்கும்போது பழங்களும் பார்த்தபடியே இருப்பதாக எண்ணம் குறுக்கிட சட்டென எதிரி வீட்டுக்காரன் முகத்தை மஞ்சளாய் பழத்தோலில் மனம் வரைகிறது. கொஞ்சம்சர்க்கரை கலந்து […]

பா. சத்தியமோகன் கவிதைகள்

This entry is part 33 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

என் சொற்கள் எனக்குப்போதும் கொஞ்ச காலமல்ல — நீண்ட வருடமாய் நான் ஒரு மெல்லிய இறகு வைத்திருந்தேன் அதன் எடை மிகவும் இலகுவானது காற்றைவிடவும் மெலிசானதால் ஊதித் தள்ளப்பட்டு பள்ளத்தாக்கில் போய் ஆழத்தில் பறந்து விழுந்தது என்றாலும் பாருங்கள் அதன் எடையை இந்த உலகம் இழந்தபோது உலகத்தால் தாங்கமுடியவில்லை பறக்க என் சிறகைத் தேடுகிறது அது! நிச்சயமாய் எனக்குத்தெரியும் – மீண்டும் என் இறகு கிடைத்த பிறகுதான் உலகம் உருண்டையாகி தன் இயல்பில் இயங்குகிறது1 . ***** […]

அறியான்

This entry is part 2 of 30 in the series 22 ஜனவரி 2012

எல்லாம் எல்லாம் என்னால் என்னால் என்றான் எதற்கும் எதிலும் தானேதான் என்றான் அடக்கிப்பார்ப்பதில் அளவிலாமல் போனான் தானே தானே என்றவனை தாக்கிபோட்டதுவோர் “தானே” புயல் தேதி அறிந்தான் நேரம் அறிந்தான் இட எல்லை குறித்தான் என்றாலும் தடுக்க இயலாமல் னான் இப்போது அடங்கிக் கிடப்பான் இவன் மின்சாரமும் வீடும் நிவாரணமும் உப்பும் சோறும் உறவும் மீண்டும் கிட்டியதும் மீண்டும் “தானே” என்பான் தன்னை மீறிய இயற்கை அறியான்!

எப்போதும் புத்தாண்டே! என்றும் புத்தாண்டே!

This entry is part 16 of 29 in the series 25 டிசம்பர் 2011

கண்ணே என் கண்மணி மனிதனே வாழ்வை அனுசரி இயற்கையைக் கொண்டு! குளிர்ந்து கொண்டே விடியும் பொழுதில் வெப்பம் தேடுவது இயற்கையை மறுப்பதாகும்! வெயில் மொண்டு வரும் பகலில் நீ குளிர் பருக நினைப்பது இயற்கையை எதிர்ப்பதாகும்! மூடிய அறையில் வாடிடும் உடல் கொண்டு தளர்ந்திட நீ பிறக்கவில்லை இருப்பதின் ரகசியம் , இருப்பதிலேயே சிறந்த சொல்லைக் கண்டிடும் மனதுடன் வாழ்தலைக் கண்டிடல்! இறந்தவர் சொல்படி இழந்திடும் கணங்களை – துடித்திடும் நிகழ்வினில் பொருந்தித் தவிப்பதை தவிர்த்திடு ! […]

வேறு ஒரு தளத்தில்…

This entry is part 29 of 39 in the series 18 டிசம்பர் 2011

– பா.சத்தியமோகன் வானில் பறக்கும் பறவையிடம் இரும்புப் பூட்டு ஒன்றைக் காட்டினேன் அது சிரித்துக் கொண்டே பறந்து விட்டது. தவழும் மழலையிடம் கூர் கத்தி ஒன்றை நீட்டினேன் மேலும் கலகலப்பானது. அப்போதுதான் பனியில் துளிர்த்த மலர்க்கொத்து ஒன்றிடம் என் துக்கக் கம்பியை விவரித்தேன் அதுவோ மலர்ச்சியை நிறுத்தவேயில்லை. எனது குளியலால் சிதறப்போகும் எறும்புகளிடம் அச்சத்தை விளக்கினேன் அவையோ சுறுசுறுப்புடன் உள்ளன நாளைய உலகம் நீருக்குத் தவிக்கும் எனும் மிரட்டலை ஓடிச்சென்று தாமரை ததும்பும் குளத்திடம் சொன்னால் அதன் […]

எவரும் அறியாமல் விடியும் உலகம்

This entry is part 21 of 48 in the series 11 டிசம்பர் 2011

பா. சத்தியமோகன். விற்காமல் வீசப்பட்ட சுருங்கல் மாலைகள் அதிகாலைத் தெருவில் வதங்கிக் கிடக்கும் கீரை மூட்டை இறக்கிப்போடுவதற்கு கல்யாணிக் கிழவி பேருந்து முன் நின்று இன்றும் கூவுகிறாள் விடை பெற்றுக் கொண்டிருக்கிறது கோடைகாலத்தின் மார்பில் ஒட்டியிருக்கும் குளிர் புலரப் போகும் இந்த உலகம் இன்னும் சற்று நேரத்தில் விரைந்து இயங்கத் துவங்கும் எவர் அறியக்கூடும் – விடிந்து கொண்டிருக்கும் இந்த உலகம் இன்று எதில் எதில் ஆழ்ந்து போகும்? எத்தனை இலட்சம் குழந்தைகளுடன் நகரப்பேருந்து நெரிசல் இயங்கத் […]

இரண்டு வகை வெளவால்கள்

This entry is part 17 of 39 in the series 4 டிசம்பர் 2011

அளவில் பெரியதான பட்டாம் பூச்சியோ என நான் கருதிய கருப்பு வெளவால் ஒன்று அலுவலகம் புகுந்தது மேசையின் இரும்புக் கால்கள் நடுவே நின்றது பிறகு இன்னொருவர் மேசைக்கு கீழே சென்றது “மேசை மேலே வா எழும்பு ஜன்னலைப் பார் ஆகாயம் தெரியும் வெளிச்சம் தேடு” என்றெல்லாம் நினைக்கத் தான் முடிகிறது சொல்ல முடிவதில்லை மன வெளவாலிடம். *****

வா

This entry is part 20 of 37 in the series 27 நவம்பர் 2011

உலக மக்கள் தொகை அனைவருக்கும் செல்போன் கையில் இருந்தாலும் மன இணைப்பில்லாமல் தன்னுள் சுழல்கிறது தனி உலகம் “தான்” எனும் செருக்குடன் சதா செருமிக் கனைக்கும் உலகம் பக்கத்து மனிதரை அக்கறையின்றிப் பார்க்கிறது அடுத்தவர் வலியை அறிய மறுக்கிறது நிலாவைப் பற்றி அரசியல் பற்றி முல்லையாறு பங்கீடு பற்றி இன்னும்பலப்பல கோடி வெளிஉலகச்சங்கதிகள் பேசி தன் உள்சத்தம் மறைக்க வெளிச்சத்தம் போட்டு அலைகிறது! –