author

சூரியப்ரபை சந்திரப்ரபை

This entry is part 8 of 8 in the series 6 ஜனவரி 2019

விவசாயம் பொய்த்துக் கொண்டிருந்தது. தண்ணீர் வரத்து இல்லாமல் கொள்ளிடம் கருவாட்டு மணலாய்ச் சுருண்டிருந்தது. கால்வாயும் வாய்க்காலும் வெள்ளமாய்ப் பொங்கி மடைதிறந்து முப்போகம் விளைந்த பூமியில் இன்று போர் போட்டு ஒரு போக விவசாயம். வந்தால் வெள்ளமும் புயலும் வந்து கெடுக்கிறது. இல்லாவிட்டால் பாயிவரப்பான்கள் அணையைத் திறக்க மாட்டேன் என்கிறான்கள். ”கோபாலா காப்பாத்து.” கவலையோடு பட்டாலையில் குறிச்சியில் சாய்ந்திருந்தார்கள் ஆவுடையப்பன் செட்டியார். ”அப்பச்சி” என்று அழைத்தாள் லெச்சுமி. மாசமான வயிறு சொலிந்து இருந்தது. லேசான சோகையோடு கால் மாற்றிக் […]

சாந்தா தத்தின் “வாழ்க்கைக் காடு” ஒரு பார்வை

This entry is part 12 of 26 in the series 26 ஏப்ரல் 2015

புலம்பெயர் வாழ்வின் இருப்பையும் இருப்பின்மையையும் ஈழத்து எழுத்தாளர்கள் வலிமையுடன் பதிவு செய்திருப்பார்கள். நம் தேசத்தில் இருக்கும் ஒரு மாநிலத்தில் பிரிவு ஏற்படும்போது வர்க்கபேதம் ஜாதிபேதமின்றி மக்களுக்குள்ளே ஏற்படும் பிரிவையும் வேறுவழியின்றி யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளும் வலியையும் அப்படியே தன்னுடைய எழுத்துக்களில் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர் சாந்தாதத் தன்னுடைய வாழ்க்கைக்காடு என்ற சிறுகதைத் தொகுப்பில் 35 ஆண்டுகள் ஆந்திராவிலேயே வசித்து வருவதால் ஆந்திரா தெலுங்கானா பிரிவினை பற்றியும் அதன் பின்னான வாழ்க்கை பற்றியும் கதைகளில் கூறியுள்ளார். ஐந்து மொழிகளில் […]

கூடு

This entry is part 16 of 32 in the series 29 மார்ச் 2015

ஆரத் தழுவி அநேக நாட்களிருக்கும் தினம் நூறு முட்டையிட்ட கூடு சிதிலமடைந்திருக்கிறது சுள்ளிகள் தெறிக்கப் பறந்துவிட்டன முத்தப் பறவைகள். குஞ்சுகளின் கீச்சொலியும் வாய் வாசமும் பதுங்கிக்கிடக்கின்றன சலசலக்கும் இலைகளில். உதிரும் ஒவ்வொரு வைக்கோலிலும் ஊட்டப்பட்ட துணுக்கைப் போல அன்பும் சிதறுகிறது. குஞ்சுகளுக்குக் கால் முளைத்ததும் எங்கே காணாமல் போயின தந்தைதாய்ப் பறவைகளுமென யோசித்துக் கொண்டிருக்கிறது மரம்.

நாதாங்கி

This entry is part 13 of 25 in the series 15 மார்ச் 2015

தாளிடப்பட்ட கதவின் பின் பயந்து ஒளிந்திருக்கும் ஒருவரை எத்தனை முறைதான் அழைப்பது ? தட்டத் தட்ட அதிர்கிறது நாதாங்கி. உள் அலையும் சுவாசம் வெப்பமாக்குகிறது அறைக்கதவை சண்டையிட அல்ல சமாதானத்துக்கே அந்த அழைப்பென்பதை கதவு திறவாத ஒருவரிடம் கத்தாமல் தெரிவிப்பதெப்படி மீன்முள்ளாய் மாட்டிய செய்தியை துப்பவும் விழுங்கவுமியலாது தினம் வாசல் வரை வந்து திரும்பும் சூரியனைப் போல மீள்கிறேன். புறத்திருந்து உழிந்த எச்சிலாய் முதுகில் குளிர்கிறது காற்று சாளரங்கள் திறந்திருக்கக்கூடும் சுதந்திரமாய். திரும்பிப்பார்க்க விழையும்மனதை இழுத்து விரைகிறேன். […]

வெட்கச் செடியும் சன்யாசி மரமும்

This entry is part 9 of 15 in the series 1 மார்ச் 2015

மழைவரும்போல் தெரிகிறது பாதையோர குறுநீலப் பூக்கள் பாவாடைப் பச்சையில் விரிகின்றன. ஆழ்ந்த குளிருக்குள் தோய்கிறது வனம். தினத்தீர்வை முடித்து நீலப்பகலைச் சுருட்டிச்செல்கிறது செங்காந்தள் அந்தி வானம். இறுக்க மூடிவரும் இரவில் மோதிப் போதவிழக்காத்திருக்கிறது ஒற்றை மொக்கு. தொடப்போகும் மரவிரல் பார்த்து சிணுங்கிச் சலிக்கிறது சர்க்கரைத் தீர்வு. காதல் சீண்டலில் வெட்கித் தலைகுனிகிறது காணாமலே உணரும் காமவர்த்தினி. பரஸ்பரத் தொடுகையில் பூத்து விரிகின்றன குறுஞ்சாமரங்களாய் இளஞ்சிவப்புப் பூக்கள் உறங்கப் போகும் பறவைகள் தாலாட்டில் மோனத்தில் ஆழ்கிறது மழை மரம். […]

சி. சரவணகார்த்திகேயனின் நூல் பரத்தைக்கூற்று

This entry is part 4 of 31 in the series 11 ஜனவரி 2015

  சிறிது அதிர்ச்சியை உண்டாக்கிய தலைப்புதான். படித்த பல கணங்களுக்குப் பின்னும் கூட அது நீடித்தது என்று சொல்லலாம். சரவண கார்த்திகேயன் தனது முதல் தொகுதிக்கு இப்படி ஒரு தலைப்பை வைத்திருப்பது ஆச்சர்யம்தான். பெங்களூருவில் கணிப் பொறியியல் வல்லுநராகப் பணியாற்றி வரும் இவர் இந்திய நிலவாராய்ச்சித் திட்டம் பற்றி சந்திராயன் என்று ஒரு புத்தகமும் சாருவுடனான விவாதங்கள் தாந்தேயின் சிறுத்தை என்று இரண்டாம் நூலாகவும் வந்திருக்கின்றன. மூன்றாம் நூலான இக்கவிதைத் தொகுதி இவரது முதல் கவிதைத் தொகுதி. […]

உங்கள் குழந்தையை சூப்பர் ஸ்டார் ஆக்குங்கள் – ஜி ராஜேந்திரன்

This entry is part 6 of 31 in the series 11 ஜனவரி 2015

:-   கிழக்குப் பதிப்பகத்தின் மிக அருமையான நூல் உங்கள் குழந்தையை சூப்பர் ஸ்டார் ஆக்குங்கள். நம் குழந்தைகளிடம் என்னமாதிரியான திறமைகள் ஒளிந்திருக்கின்றன. அவற்றை நாம் இனங்கண்டு அவர்களை எப்படி வழி நடத்தலாம் என்பதை ஜி ராஜேந்திரன் தகுந்த விளக்கங்களுடன் அளித்துள்ளார்கள்.   Constructive Pedagogy பற்றி ( ஆக்கப்பூர்வமான கற்பித்தல் முறை ) கோட்பாட்டில் ஆர்வமுள்ள இவர் ஒரு ஆசிரியர், எழுத்தாளர், கற்பிக்கும் முறைகளிலும் கற்றுக்கொள்ளும் முறைகளிலும் ஏற்படும் பிரச்சனைகளை ஆராய்ந்து வருகிறார்.   அறிவு […]

மு. கோபி சரபோஜியின் இரு நூல்கள்: வின்ஸ்டன் சர்ச்சில் 100 மற்றும் மௌன அழுகை

This entry is part 7 of 31 in the series 11 ஜனவரி 2015

.   2015 சென்னை புத்தகத் திருவிழாவை ஒட்டி சில நூல்களை சுருக்கமாக அறிமுகப்படுத்த எண்ணியுள்ளேன்.   முதலில் வின்ஸ்டன் சர்ச்சில் 100.:- *******************************************************   வின்ஸ்டன் சர்ச்சில் பற்றிய தகவல்களைத் தொகுத்து தமிழில் வழங்கி இருக்கிறார் கோபி. மிக அரிய முயற்சி. இதில் நான் ஆச்சர்யப்பட்டது சர்ச்சிலின் மொழி வளம் பற்றி. மிகப் பெரும் அரசியல்வாதி என்பதைத் தவிர ஆற்றலுள்ள பேச்சாளரும் கூட என்பதையும் அரிய முடிந்தது. பலமுறை இறப்பின் விளிம்புகளைத் தொட்டவர். அரசியல் சதுரங்கத்தில் […]

ஷான் கருப்பசாமியின் விரல்முனைக் கடவுள்

This entry is part 8 of 31 in the series 11 ஜனவரி 2015

2015 சென்னை புத்தகத் திருவிழாவை ஒட்டி சில நூல்களை சுருக்கமாக அறிமுகப்படுத்த எண்ணியுள்ளேன். கவிதைகளை என்றுமே விமர்சிக்க முடியாது. ஒவ்வொரு கவிதையும் கவிஞனின் எண்ணப் போக்கின் வெளிப்பாடு. மனம் மலரும்போது மலர்ந்தும் , சுருங்கும்போது கசங்கியும் விழும் பூக்களைப் போலத்தான் கவிதைகளும்.எனவே நான் ரசித்த சிலரின் கவிதைகள் இங்கே . முதலில் ஷான் கவிதைகள்.   ஷானின் கவிதைகள் ஒரு குழந்தைகள் , மழை, வாழ்க்கைத்துணை பற்றிப் பேசினாலும் இணையத்தாலும் தொலைக்காட்சி போன்ற நவீனசாதனங்களாலும் நாம் அடிமைப்பட்டுப்போனதைப் […]

மு கோபி சரபோஜியின் ஆன்மீக சாண்ட்விச்

This entry is part 5 of 23 in the series 21 டிசம்பர் 2014

உலகமயமாக்கலில் ஆன்மீகத்தையும் இணைத்து கோபி தந்திருக்கும் கட்டுரைகளின் தொகுப்பே ஆன்மீக சாண்ட்விச். ஃபாஸ்ட்புட் கலாச்சாரத்தில் வாழும் நமக்கு பெரும்பாலான ஆன்மீக விஷயங்களும் புராண கதைகளுக்குமான தெளிவு கிடைப்பதில்லை.   பன் பட்டர் ஜாம், ப்ரெட் சாண்ட்விச் என்று கிடைத்ததை கையில் எடுத்துக்கொண்டு விரையும் அவசர உலகில் ஆன்மீகத்தையும் ஒரு சாண்விச் போல அழகாகச் சுற்றிக் கையில் கொடுத்திருக்கிறார் கோபி. சாண்ட்விச்சில் வைக்கப்படும் உணவுப் பொருட்கள் சக்தியைத் தருவது போல இந்த ஆன்மீக சாண்ட்விச்சுக்குள் வைக்கப்படும் பொருட்கள் நமக்கு […]