author

ஜானி

This entry is part 2 of 4 in the series 24 மார்ச் 2024

‘மாப்பிள்ளைக்கு அமெரிக்காவில் வேலையாம். திருமணத்துக்குப்பின் மீராவும் அமெரிக்கா போய்விடுவாளாம்.’ என்று மற்றவர்கள் பேசும்போதும் சரி, தன் நெருங்கிய தோழிகள் ‘நீ கொடுத்துவச்சவடீ’ என்று சொல்லும்போதும் சரி, முன்னைவிட, தன் முகம் மிக அழகாக இருப்பதுபோல் உணர்ந்தாள் மீரா. ‘முகம் மட்டுமா இனி முகவரியும் அழகாக இருக்கலாம். மாப்பிள்ளை குரு என்கிற குருராஜ், கணினி மென்பொருள் பொறியாளர். இரண்டு ஆண்டுகளாக அவன் இருப்பது அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில். தனி வீடு. தனியாகவே இரண்டு ஆண்டுகள் வாழ்ந்தவன். இப்போது மீராவோடு […]

பயணமா? பாடமா?

This entry is part 2 of 2 in the series 24 டிசம்பர் 2023

நாளை பாலி பயணத்திற்கு கயல்விழி  தயாராகிக் கொண்டிருக்கிறார். மகள் கலையரசி வெற்றிகரமாக உயர்நிலை   3ஐத் தொடர விருக்கிறார்.  மகன் காவியன் இரண்டு மாதங்களில்   தேசிய   சேவையில் சேரவேண்டும். விடுமுறை மாதம். டிசம்பர். இரண்டு மாதமாகவே கலை ‘பாலி, பாலி’ என்று புலம்பிக்கொண்டிருக்கிறார். கயல்விழி இந்தப் பயணத்தை  ஏற்பாடு செய்வது முக்கியமாக கலையரசிக்காகத்தான்.  கயல்விழிக்கு முத்தையா என்பவர்தான் பயணமுகவர். புள்ளி வைத்தால் போதும். கோலம் அவர் பொறுப்பு. எங்கே   தங்குவது? போக்குவரத்து ஏற்பாடுகள்  […]

ஊருக்குப் போகவேண்டும்

This entry is part 4 of 5 in the series 29 அக்டோபர் 2023

பிடுங்கி நடப்பட்ட செடி, நட்ட இடத்திலேயே பூத்து, காய்த்து, கனிந்து வாழ்க்கையை முடித்துக் கொள்கிறது. ஒரு மரத்தில் பிறந்து, சிறகு முளைத்த குருவி, எங்கெங்கோ பறந்து திரிந்தாலும், ‘இந்த  மரத்தில்தான் நான் சிறகுகள் பெற்றேன்’ என்று தேடி வருவதில்லை. ஆனால்   மனிதன்? பிறந்த உடனேயே புலம்பெயர்ந்தாலும்கூட பிறந்தமண்ணைத் தேடிவந்து பார்த்துவிட்டுப்போக ஆசைப்படுகிறான். நான் 70ஐக் கடந்துவிட்டேன். என்னோடு பட்டம் விட்டவர்கள், பம்பரம் குத்தியவர்கள், கிட்டிப்புல்லு ஆடியவர்கள், கோலிக்குண்டு அடித்தவர்கள், குட்டையில் மீன் பிடித்தவர்கள், உதைத்தவர்கள், உதைபட்டவர்கள் […]

சன்மானம்

This entry is part 4 of 10 in the series 30 ஏப்ரல் 2023

அது ஒரு மழை  மாதம்.  பல இடங்களில் வெள்ளமென்று 96.8 அறிவித்தது. அடுத்தநாள் செய்தித்தாளில் முதல் பக்கச் செய்தி ‘சாலையைக் கடக்கையில் மரக்கிளை முறிந்து விழுந்ததில்  முதியவர் மரணம்’. அரசு சும்மா  இருக்குமா? சுற்றுச்சூழல் ஆணையத்தை முடுக்கிவிட்டது. தளதளவென்று கிளைகளைப் பரப்பி  அழகு காண்பித்த மரங்களின் கிளைகள் கழிக்கப்பட்டன. நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் பட்டுச்சேலை உடுத்திய பெண்கள்போல் நின்ற மரங்கள் நீச்சல் உடையில் காட்சியளித்தன.  நான் தங்கியிருக்கும் பஃபலோ சாலையில் சிறுவர்கள் பூங்காவுக்கு நிழல் தந்தபடி குடை விரித்திருந்த […]