தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Year: 2013

  • மானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே [மீள் பதிப்பு] [பாரதி பிறந்த தினம் : டிசம்பர் 11]

        சுதந்திரக் கவி பாரதி சி. ஜெயபாரதன், கனடா     இதந்திரு மனையின் நீங்கி, இடர்மிகு சிறைப்பட்டாலும், பதந்திரு இரண்டும் மாறி, பழிமிகுந்து இழிவுற்றாலும், விதந்தரு கோடி இன்னல் விளைந்தெனை அழித்திட்டாலும், சுதந்திர தேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே. தேசியக் கவி சுப்ரமணிய பாரதி   பாரதியால் தமிழ் உயர்ந்ததும், தமிழால் பாரதி உயர்ந்ததும் இன்று யாவரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும். பாரதி மக்கள் கவி. மானுடம் பாட வந்த மாக்கவி. புது நெறி…

  • டௌரி தராத கௌரி கல்யாணம் – 29

    ஜெயஸ்ரீ ஷங்கர் காவேரி மாமியாத்துக்குப் போயி சாப்பிட்டுட்டு தானே அங்கேர்ந்து கயா போக வண்டி ஏறணம். ஆனா இவாத்துல முதல் பந்தில வேற கோஷ்டி சாப்டுண்டு இருக்கா. அவா சாப்பிட்டு எழும் வரைக்கும் என்னவாக்கும் பண்றது? பேசாமே பக்கத்து ரூம்ல இருங்கோன்னு காவேரி மாமி சொல்லிட்டா. இன்னும் எத்தனை மணியாகுமோ ? சரி…இந்த கௌரி ரொம்ப நேரமா யாரோடையோ ஃபோன்ல பேசிண்டு இருக்கா. இந்த பிரசாத்தும் மங்களமும் என்னவோ மும்முரமா பேசிண்டு இருக்காளே… அவா என்னதான் பேசிக்கறான்னு…

  • மனம் போனபடி .. மரம் போனபடி

    மனம் போனபடி .. மரம் போனபடி

    இரா.முருகன் நெட்டிலிங்க மரம் தெரியுமா? உசரமாக, பனை மரத்தை விட உசரமாக, ஓங்கு தாங்காக வளர்ந்து நிற்கும். ஒண்ணு ரெண்டு இல்லை. வரிசையாக எட்டு நெட்டிலிங்க மரம். பள்ளிக்கூடத்தில் உள்ளே நுழைந்ததுமே அவைதான் வாவா என்று வரவேற்கிற பாவனையில் அணிவகுப்பு மரியாதை செய்தபடி நெட்டக் குத்தலாக கண்ணில் படும். இதெல்லாம் பூப்பூத்து காய்க்குமா? டிராயிங் மாஸ்டரைக் கேட்டேன். அவரை ஏன் கேட்கணும்னு தெரியலை. ஆனால் வேறே யாரும் பதில் சொல்ல மாட்டார்கள். காய்க்குமே. சாப்பிடலாமா? அவர் யோசித்தார்….

  • நிஜம் நிழலான போது…

      விஜயலஷ்மி சுஷீல்குமார் நெஞ்சம் படபடவென்று அடித்துக்கொண்டு, உடம்பில் ஒருவித நடுக்கம் வந்து, என்னால் வார்த்தைகளை வெளியிடமுடியாது தொண்டைக்குழியை அழுத்தியது. மனமோ நேர்மாறாக “என்ன? ஏன்? எதற்கு? எப்படி? எப்போ? நிஜம்மாவா?” இப்படி எல்லாவிதமான கேள்விகளும்; அகராதியில் உள்ள அத்தனைக் கேள்விகளும் ஒன்றையொன்று பற்றிப் பிணைந்து, என்னைச் சூழ்ந்தது, ஆனால் விடைதான்… கிடைக்கவில்லை. இன்று, இப்போது கோமதி இவ்வுலகில் இல்லை என்று கேட்டதில் இருந்து என் நிலையைச் சொல்லமுடியவில்லை.. இந்த மூன்று மாதமாக வேலை காரணமாக வெளியூருக்குச்…

  • ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம்  அத்தியாயம் 12  ஜராசந்த வதம்

    ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம் 12 ஜராசந்த வதம்

    அத்தியாயம் 12 ஜராசந்த வதம் கானடவப்ரஸ்தத்தில் யுதிர்ஷ்டிரரின் சபை கூடியது. அந்த சபையில் குடும்ப அங்கத்தினர், நண்பர்கள் மற்றும் மகரிஷிகளான தௌமியரும் த்வைபாயனரும் கூட இருந்தனர். அவர்களுடைய ஒருமனதான தீர்மானம் என்னவென்றால் தன்னை சக்கரவர்தியாக பிரகடனப் படுத்திக் கொள்ள யுதிஷ்டிரர் ராஜசூய யாகத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதாகும்.   ஸ்ரீ கிருஷ்ணரின் அனுமதி இன்றி மிகுந்த பொருட் செலவில் அத்துனை பெரிய யாகத்தை புரிய யுதிஷ்டிரர் தயங்கினார். ஸ்ரீ கிருஷ்ணரை அழைத்து வர ஆள் அனுப்புகிறார். ஸ்ரீ கிருஷ்ணரும்…

  • மருமகளின் மர்மம் – 6

    மருமகளின் மர்மம் – 6

    6 ஜோதிர்லதா கிரிஜா   மாலையில் கோவிலுக்குப் போகலாம் என்று தான் சொன்னதற்கு நிர்மலாவிடமிருந்து உற்சாகமான பதில் வரவில்லை என்று கண்ட சாரதா ஒருகால் தான் சொன்னது அவள் காதில் விழவில்லையோ என்கிற ஐயத்துடன், “என்ன, நிர்மலா? பதில் சொல்லாம இருக்கே?” என்றாள். “என்ன அத்தை கேட்டீங்க?” சாரதா சிரித்தாள் : “ஏற்கெனவே ஒரு மாதிரியா இருந்தே. அவன் கிட்டேருந்து •போன் வேற வந்திடிச்சு. கோவிலுக்குப் போலாம்னு சொன்னேன்.” இன்று ஏதேனும் காரணம் சொல்லிக் கோவிலுக்குப் போவதை…

  • திண்ணையின் இலக்கியத்தடம் -12

    திண்ணையின் இலக்கியத்தடம் -12

    சத்யானந்தன் ஜூலை1 2001 இதழ்: கதைகள்: செக்குமாடு – குறுநாவலின் முதல் பகுதி- வ.ஐ.ச.ஜெயபாலன் ஜூலை 7,2001 இதழ்: ஜெயமோகனின் கன்னியாகுமரி- வ.ந.கிரிதரன்- ஒரு நாவலைப் படித்து முடித்தபின் அது வாசகர் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே ஒரு நாவலின் வெற்றியின் அளவுகோல். கற்பு என்பது பற்றிய விழுமியங்களை மு.வ., விந்தன், புதுமைப்பித்தன் , ஜெயகாந்தன் அனைவருமே கேள்விக்கு ஆளாக்கியிருக்கின்றனர். ஜெயமோகன் நாவலில் அவரது முன்னுரையைக் கருத்திற் கொள்ளாமல் பார்த்தால், நாவலை ஆபாச இலக்கியம் என்னும்…

  • ஜாக்கி சான் 19. ஆஸ்திரேலிய வாழ்க்கை

    ஜாக்கி சான் 19. ஆஸ்திரேலிய வாழ்க்கை

    19. ஆஸ்திரேலிய வாழ்க்கை   19. ஆஸ்திரேலிய வாழ்க்கை Jackie-Chan-jackie-chan-5468506-553-800ஆஸ்திரேலியா திரும்பிய மகனைக் கண்டதும் தாய் பெரிதும் மகிழ்ந்தார். வெற்றிக்காக வாழ்த்துத் தெரிவித்தார். பரிசாகத் தந்த கடிகாரத்தைக் கண்டதும், ஆனந்தக் கண்ணீர் வடித்து மகனின்திறமையைக் கண்டு மகிழ்ந்தார். தந்தை பரிசைப் பார்த்து விட்டு அத்தனை மகிழ்ச்சி கொள்ளவில்லை. எப்படி இந்தக் குறைவான காலத்தில் இத்தனைப் பணம் சம்பாதித்திருப்பான் என்று ஐயம்கொண்டரோ என்னவோ. “அப்பா.. என்னுடைய ஒப்பந்தம் மூன்று படங்களில் நடிக்க இருந்தது. அதை மிகவும் சிறப்பாகவும் வேகமாகவும் முடித்ததால், எனக்கு…

  • 4 கேங்ஸ்டர்ஸ்

    நான் கண்ணீர் விட்டதை யாருமே கவனிக்கவில்லை. இனிமேல் இந்த மலைகளை, மரங்களை, மனிதர்களை எப்பொழுது பார்க்கப்போகிறோம். இந்தக் காற்றை, இந்த ஊரின் சுவாசத்தை எப்போது சுவாசிக்கப் போகிறோம். இந்த சாலைகளையும், தெருக்களையும் எப்பொழுது தரிசிக்கப் போகிறோம். வீட்டில் இருந்ததைவிட இந்த ஊர் கோயில்களில்தான் நான் அதிக நாட்கள் தங்கியிருக்கிறேன். அதனாலேயே நான் நாத்திகன் என்பது பலபேருக்கு தெரியாமல் போய்விட்டது. கோவிலில் உட்கார்ந்துகொண்டு கடவுளை கிண்டல் செய்ததால் யாருக்கும் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. அவ்வளவு சுதந்திரத்தைக் கொடுத்த ஊர்…

  • உனக்காக மலரும் தாமரை

    ஜி.ஜே. தமிழ்ச்செல்வி நீ எழுதவென எழுதாமல் வைத்திருந்த என் மனக் காகிதத்தில் ​எழுந்த​ உணர்வுகளின்​ நிறத்திற்கு ஒரு வண்ணம் ​பூ​சுவாய் என்றிருந்தேன். ​ என் எதிர்பார்ப்புகளை புறந்தள்ளி அன்பியலை படைத்துச் சென்றாய் ​அழைக்காமலே !​ அழகானதொரு தருணத்தில் காமம் இல்லாது காதலைப் பிறப்பித்துப் போதை ஊட்டினாய் !​ காதலுக் ​​கான காமத்தைப் புதுப்பித்துக்​ ​கொண்டாய் ஆழ் மன உலகில் ​கால் தடம் பதியாமலே !​ நாள் தோறும் கதிரவனுக்காக மலரும் தாமரை போல உனக்காகவே மலர்கிறது இவளின்…