தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Year: 2014

  • ஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 4 பாரதியுள் ஷெல்லி

        ராஜேஷ் ஜெயராமன் [ஹாங்காங் இலக்கிய வட்டம் டிசம்பர் 2001இல் துவங்கப்பட்டது. தமிழ் இலக்கியம் தொடர்பான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதே வட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். மேலும் பிற மொழி இலக்கியங்களைக் குறித்தும், வாழ்வனுபவங்களைக் குறித்தும் பல கூட்டங்கள் நடந்துள்ளன. சமயம் வாய்க்கிற போது கூடுவதும், படித்ததை ரசித்ததை அனுபவித்ததைப் பகிர்ந்து கொள்வதும் வட்டத்தின் எளிய செயல் திட்டம் ஆகும்.கூட்டங்களில் நிகழ்த்தப்பட்ட சில முக்கியமான உரைகள் இந்த வரிசையில் இடம் பெறுகின்றன.] ஆங்கிலப் புலவர்களுள் ஷெல்லி பாரதியுள்…

  • சூரியனைச் சுற்றிவரும் புதிய குள்ளக் கோள் “ஏரிஸ்” புறக்கோள் புளுடோவுக்கு அப்பால் கண்டுபிடிப்பு

        சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=FKui0MtFc2k https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Ho5FEyftFss https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=l1sAp-Qk16g https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=_LBJz4TxG0I +++++++++++++ புளுடோவின் நிகழ் காலம் இறந்த காலமானது ! பரிதியைச் சுற்றும் கோள்கள் ஒன்பது என்பது மாறி விட்டது ! புதன் முதல் புளுட்டோ வரை விதவித மான கோள்களில் நீக்கப் பட்டது குள்ளக் கோள் புளுடோ ! நெப்டியூன் இறுதிக் கோளானது இப்போது ! எட்டுக் கோள்கள் பரிதிக் கென்று பட்டியல் சிறுத்தது ! புளுடோவை விடக்…

  • அழிக்கப்படும் நீர்நிலைக்கல்வெட்டுக்களும்-நீர்நிலைகளும்

    வைகை அனிஷ் மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காக வரும் என ஆரூடம் கூறிக்கொண்டிருக்கிறோம். அதே வேளையில் நீர் பராமரிப்பு நீர் மேலான்மையில் முன்னோடியாக தமிழன் இருந்தான் என்பதற்கு ஆதாரமாக பல செப்பேடுகள், கல்வெட்டுக்கள் அதிகமாக உள்ளன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தண்ணீரின்; அவசியத்தை உணர்ந்து ஏரிகள் உருவாக்கப்பட்டது. அவ்வாறு ஏரிகள் உருவாக்கிய பின்னர் ஏரிகளில் உள்ள கல்வெட்டு சாசனப் பொறிப்;புகளும், அரசர்களின் ஆணைகளையும் இன்றும் காணலாம். அரசனின் ஆணைப்படி அது  அமையப்பெற்றது. அதைப் பராமரிப்பதற்காக அளிக்கப்பட்ட கொடைகள், அந்த…

  • செட்டியூர் ‘ பசுந்திரா சசி ‘ யின் ” கட்டடக்காடு ” நாவல் அறிமுக விழா

    தமிழ்ஆதர்ஸ்.காம் வெளியிடும் செட்டியூர் ‘ பசுந்திரா சசி ‘ யின் ” கட்டடக்காடு ” நாவல் அறிமுக விழா அழைப்பிதழ்   நிகழ்ச்சி நிரல்: மங்கல விளக்கேற்றல்: தமிழ்த்தாய் வாழ்த்து: வரவேற்புரை:​​ புலவர் திரு சோம சச்சிதானந்தன் . சைவத் தமிழ் ஆன்மீக சேவையாளர். ஆசியுரை: ​ எஸ்.சிவநாயகமூர்த்தி தலைவர் (கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்) வாழ்த்துரை: ​​ கவிஞர் அ. பகீரதன் தலைமையுரை: வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ் நூல் ஆசிரியர் அறிமுகம்: எழுத்தாளர் அகில் திறனாய்வு:…

  • ஆனந்த பவன் ( நாடகம் ) காட்சி-16

          இடம்: ஒய்.எம்.சி.ஏ. ஹாஸ்டல்   காலம்: பிற்பகல் ஐந்து மணி.   உறுப்பினர்: ரங்கையர், ஜான்ஸன், மோனிகா மில்லர்   (சூழ்நிலை: ரங்கையர் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டு ஜான்ஸன் (வயது 55) மாடியிலிருந்த கீழே இறங்கி வருகிறார். ரங்கையர் படிக்கட்டின் கீழே நின்று கொண்டிருக்கிறார். ஜான்ஸனின் பேச்சில் ஆங்கிலேயர் தமிழ் பேசும் அன்னிய வாடை)       ஜான்ஸன்: ஹலோ ரங்கையர் சௌக்யமா?   ரங்கையர்: சௌக்கியம். என்னமோ நீங்க வரச் சொன்னதா…

  • டோனி மொரிசனின் பிலவ்ட் (Beloved By Toni Morrison)  அயல்மொழி இலக்கியம்

    டோனி மொரிசனின் பிலவ்ட் (Beloved By Toni Morrison) அயல்மொழி இலக்கியம்

      பெண் இலக்கியம் என்றால் என்ன? பலகாலமாக என் மனதில் அரித்துக்கொண்டிருந்த கேள்வி. இலக்கியத்தில் ஆண்கள் சொல்லும் விடயங்கள் பெண்கள் சொல்வதாக  இருந்தால் அது பெண் இலக்கியமாகுமா?. அதுக்கு மேல் அர்த்தம் உள்ளதா? பெண்கள் இலக்கியமாக எழுதும் கருத்து மொழியை ஆண்களும் சொல்லமுடியும். பல பெண்கள் சொல்லும் கவிதைகள் கதைகளும் அப்படித்தான். ஆனால் படைக்கப்பட்ட இலக்கியமே பெண்மைக்கு மட்டும் உரியதாகவும்,அதை ஆணால் நினைத்தும் பார்க்கமுடியாததாக இருக்கும்போது மட்டுமே அது பெண்ணிலக்கியமாகிறது. அங்கே உடலில் -அதனது உணர்வுகள் எனும்போது…

  • திருக்குறட் செல்வர் திரு மேலை பழனியப்பன் அவர்களின் ஏற்புரை

      திரு மேலை பழனிப்பன் மேலைச் சிவபுரியைச் சேர்ந்தவர். கரூரில் பல்லாண்டு காலமாய் வசித்து வருகிறார். அவருக்கு இந்தத் திருக்குறள் விழாவில் ( காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் நிகழ்ந்த 61 ஆம் ஆண்டு குறள் விழாவில் ) திருக்குறள் செல்வர் என்ற பட்டமும் விருதும் வழங்கப்பட்டது.   {முதலில் முனைவர் குமரப்பன் பற்றிக் கூறி இவர் நகரத்தார்களின் முதல்வர் என்று சிறப்பித்துக் கூறினார்.கருத்தரங்கமும் கவியரங்கமும் காலையிலேயே நடைபெற்றிருந்தன. அதில் பழ கருப்பையா, பேராசிரியை விசாலாட்சி ஆகியோர் உரையாற்றி…

  • வீட்டுச் சுவர்களுக்குள் அடங்கிய உலகம்

    வீட்டுச் சுவர்களுக்குள் அடங்கிய உலகம்

      உமா மஹேஸ்வரியின் அஞ்சாங்கல் காலம் முழுக்க முழுக்க வீட்டுச் சுவர்களுக்குள் அடங்கிய, சிறைப்பட்ட, சில சமயம் சுவர்களில் பதிந்த ஜன்னல் வழி வெளியே எட்டியும் பார்க்கும் பெண்களின் உலகம் தான். அனேகமாக, அவர் எழுதும் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் எல்லாமே இம்மாதிரி அடைபட்ட பெண்களின் உலகத்தைத் தான் நமக்குச் சொல்கிறது. அவர்களின் யதார்த்த உலகம் தான் சம்பிரதாய, சமூக கட்டுப்பாடுகளில் கட்டுப் பட்டதே ஒழிய, அவர்களில் சிலரது மனஉலக வியாபகம் அப்படி சிறைப்பட்டதில்லை. அந்த ஜன்னல்…

  • தினம் என் பயணங்கள் : 38 கடலும் நானும் -2

      சென்னையில் மழை! மேம்பாலத்தின் வழியே வழிந்து தரை எங்கும் பொட்டு பொட்டுகளாக தெரிந்து கொண்டிருந்த மழைத் துளிகள் கண்களுக்கு ரம்மியக் காட்சியை ஏற்படுத்தினாலும், மனதிற்குள் ஒரு திகில் உணர்வு. சென்னையிலிருந்து எடுத்து வரப் புறப்பாடு செய்தது புத்தகமும் கம்பியூட்டரும் பெற்றுக் கொள்ள. இரண்டிற்கும் மழை என்றால் அலர்ஜி அல்லவா ? கார் ஜன்னலின் வழியே காட்சியாக்கப்பட்டது மாற்றுத்திறனாளி ஒருவரின் மூன்றுச் சக்கர மோட்டார் வாகன பயணம். அது போன்றதொரு வாகனத்தை நானும் வாங்க வேண்டும் என்ற…

  • வரலாற்றில் வளவனூர் [ஆவணங்களால் அறியப்படும் அரிய வரலாறு]

    முனைவர் க. நாகராசன் ”வரலாற்றில் வளவனூர்” எனப்படும் அரிய நூலை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. லட்சுமி மூர்த்தி அவர்களால் எழுதப்பட்டு 1922- இல் சேகர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு கலை விளக்கப் பெட்டமாக அது காட்சி அளித்தது. விழுப்புரத்தை அடுத்த பிரௌட தேச மகரஜபுரம் என்னும் வளவனூரில் பல கோயில்கள் நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்துள்ளன. ஜகன்னாத ஈஸ்வரர் கோயிலையும், லட்சுமிநாராயணப் பெருமாள் கோயிலையும் ஆய்வுப் பொருள்களாக இந்நூல் எடுத்துக் கொள்கிறது. இவ்விரு கோயில்களும் சோழர் காலம் முதலே…