அகாலம் கேட்கிற கேள்வி

ஆழ்வேர் நேச காதலினாலோ
பாசி படர், மாசு தொடர்பினாலோ
பத்து மாதம் காத்திருக்கிற எப்பிறப்பும்,
விநாடியில் மறைக்கிற அகால மரணமும்

அகங்காரமும், வன்மமும் தேவையா ?
அரிதிலும் அரிதான வாழ்க்கையில் என
கேட்கிறது காதோரம் ஓர் கேள்வி.

அகாலத்தின் கூர்முனையின் புரிதலை மையமாக்கி
வாழ்க்கை வட்டத்தை சுற்றி வரையாமல்,
பென்சில் முனையை நடுநாயகமாக்கி சுழற்றுகிறோம்
வாழ்க்கை வட்டத்தை கீறி கிழித்தபடி..

-சித்ரா (k_chithra@yahoo.com)

Series Navigationஒரு வித்தியாசமான குரல்காக்காப்பொண்ணு