Posted inகவிதைகள்
பணம்
பணப்பையைப் பறித்து பறந்தது குரங்கு அறக்கப் பறக்க துரத்தியது மனிதக்கூட்டம் பையைக் கிழித்து பணங்களை எறிந்தது குரங்கு பணம்!பணம்!பணம்! கட்டிச் சேர்த்தது காற்றில் பறக்கிறது பறத்தல் கண்டதும் குரங்குகளாகிப்போன மனுஷப்பயலைப் பார்த்து இளித்தது குரங்கு அமீதாம்மாள்