அழகர்சாமி சக்திவேல் சில மாதங்களுக்கு முன்னால், நான் ஜெர்மனியின் தலைநகர் பெர்லினுக்குச் சென்று இருந்தேன். பெர்லின் நகரின் முக்கியப்பகுதிகளைச் சுற்றிப் பார்க்க, ஜெர்மன் வழிகாட்டிகள் நடத்தும் இலவச நடைப்பயணம் ஒன்றை நான் தேர்ந்தெடுத்து, நடைப்பயணம் தொடங்கும் இடத்திற்கு, அந்தக் கடுங்குளிரில் நான் முதல் ஆளாகப் போய்ச் சேர்ந்தேன். பல்வேறு நாடுகளில் இருந்து, என்னைப்போல் வந்து இருந்த சுற்றுலாப்பயணிகளின் கூட்டம், கொஞ்சம் கொஞ்சமாய்க் கூடத் தொடங்க, நடைப்பயணம் ஆரம்பமாகியது. ஆகா.. கிட்டத்தட்ட, நான்கு மணிநேரம் நடந்த அந்த […]
முல்லைஅமுதன் அம்மா நகைகள் மீது ஆசைகொண்டவளல்ல.மாதகலிலிருந்து அப்பாவைத் திருமணம் திருமணம் முடித்திருந்தபோதும் சீதனம் நகை எனப் பிரச்சினைகள் வரவில்லை..அப்பாவும் எதிர்பார்க்கவில்லை.அம்மாவிற்கென வயல் காணி இருந்ததாம்.அதுவும் அம்மாவின் அண்ணர் பராமரித்துவந்தது தெரியும்..அப்பாவும் கேட்டதில்லை.நமக்கும் தெரியாது. நானும் வளர்ந்த பிறகு சனி ஞாயிறு விடுமுறையில் மாமா அழைத்துச் செல்வார்.அப்போது பெரியப்பாவின் வீட்டில் இருந்து படித்து வந்ததினால் நான் தனியாள் என்று நினைத்து கூட்டிச்சென்று நிறைய சாப்பிடத்தருவார். மாமாவிற்கு அதீத பாசம் என் மீதிருந்தது.ஒவ்வொரு வாரமும் அழைத்துப்போவார்.திங்கள் அதிகாலையிலேயே எழுப்பி,அழைத்துவந்துவிடுவார்.அவர் […]
அழகியசிங்கர் நான் புத்தகங்களைச் சேகரிப்பவன். புத்தகங்களைப் படிப்பதை விடச் சேகரிப்பதே விரும்புவேன். 20 புத்தகங்களை நான் வாங்கி சேகரிக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள், அதில் ஒரு புத்தகம் எடுத்துப் படிப்பது என்பது பெரிய விஷயமாக இருக்கும். இதில் அட்டையில்லாத புத்தகங்களைச் சேகரிப்பது எனக்கு விருப்பமாக இருக்கும். பெரும்பாலும் பிளாட்பாரத்தில் வாங்குகிற புத்தகங்களை சேகரிப்பவன். என்னைப்போல் பிளாட்பாரங்களிருந்து புத்தகங்களை வாங்கிச் சேகரிப்பவர்களில் இரண்டு முக்கிய எழுத்தாளர்களை நான் குறிப்பிட்டே ஆக வேண்டும். ஒருவர் […]
அகில உலகில் அணு ஆயுதப் போர்களின் அச்சமும், அணு ஆயுதக் குறைப்பிலே அகில தேச உடன்பாடுகளும் சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=d3oSS_FP-cA https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=1MSKoSbqHq0 https://www.youtube.com/watch?feature=player_embedded&v=sgFYApuxZ0E https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=lKcwYViygf8 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=sXwCRVtidZ4 Gorbachev and Reagan பேரழிவுப் போராயுதம்உருவாக்கிமனித இனத்தின்வேரறுந்துவிழுதுகள் அற்றுப் போக,விதைகளும் பழுதாகஹிரோஷிமா நகரைத் தாக்கிநரக மாக்கிநிர்மூல மாக்கியது,முற்போக்கு நாடு !நாகசாகியும்நாச மாக்கப் பட்டது !புத்தர் பிறந்த நாட்டிலேபுனிதர் காந்தி வீட்டிலேமனித நேயம்வரண்டு போனவல்லரசுகள் பின் சென்றுபாரத அன்னைக்குப்பேரழிவுப்போரா […]
திண்ணை இணைய இதழில்17.1.2021ல் வெளியான எனது சிறுகதை”புதியன புகுதல்” க்கு புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவில் இணையப்படைப்பு பிரிவில் ₹5000/மும் பட்டயத்துடன் வழங்கி மாண்பமை நீதியரசர் சந்துரு(பநி ) பாராட்டவுள்ளார்.தங்களுக்கு தகவலுக்கு மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பின்னூட்டங்கள்