தனித்திரு !

This entry is part 1 of 2 in the series 19 மே 2024

சோம. அழகு             கோவிட் காலம், அதுவல்லாத காலம், இளமை, முதுமை என எல்லா நிலைகளிலும் எனக்கு மட்டும்தான் ‘தனித்திரு’ என்னும் இச்சொல் இன்பத்தேனாகப் பாய்கிறதா? “‘கொடிது கொடிது தனிமை கொடிது; அதனினும் கொடிது முதுமையில் தனிமை’. வயசானாதான் அதுலாம் தெரியும். இப்போ அதுபற்றி உனக்குப் புரியாது” – இதைத்தானே சொல்லப் போகிறீர்கள்? ஒப்புக்கொள்கிறேன். முதல் வரியில் ‘முதுமை’யைச் சேர்த்துக் கொள்ள எனக்குத் தகுதி இல்லைதான். ஆனால் ‘முதுமையில் நாம் தனித்திருக்க இயலாது’ என்னும் ஒற்றைக் காரணத்திற்காக […]

கனடா, ரொறன்ரோவில் நூல் வெளியீட்டு விழா

This entry is part 1 of 3 in the series 5 மே 2024

. சுலோச்சனா அருண் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தால் சென்ற சனிக்கிழமை ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி தமிழகக் கவிஞர் மு. முருகேஸ் அவர்களால் தொகுக்கப் பெற்ற ‘மனதைத் தொட்ட எழுத்தின் பக்கங்கள்’ என்ற நூலும், எழுத்தாளர் குரு அரவிந்தனின் ‘சாக்லட் பெண்ணும் பண்ணைவீடும்,’ ‘யாதுமாகி நின்றவள்’ என்ற சிறுகதைத் தொகுப்பும், மாலினி அரவிந்தனை இணையாசிரியராகக் கொண்ட ‘தமிழ் ஆரம் – 2024’ சிறுவர்களுக்கான சிறப்பு மலரும் வெளியிட்டு வைக்கப் பெற்றன. கனடா தமிழ் எழுத்தாளர் […]

ரொறன்ரோவில் நூல்களின் சங்கமம்

This entry is part 4 of 8 in the series 21 ஏப்ரல் 2024

குரு அரவிந்தன் கனடாவில் கடந்த 30 வருடங்களாக இயங்கி வரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவுடன் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி சனிக்கிழமை ‘நூல்களின் சங்கமம்’ என்ற புத்தகக் கண்காட்சி ஒன்று 635 மிடில்பீல்ட் வீதியில் உள்ள கனடா இந்து ஐயப்பன் ஆலய அரங்கில் நடைபெற இருக்கின்றது. இந்த நிகழ்வில் கட்டணம் எதுவுமின்றி இலவசமாகப் பார்வையாளர்கள் கலந்து கொள்ளமுடியும். காலை 10 மணிக்குத் தொடங்கி மலை 5 மணிவரையும் இந்தக் கண்காட்சி நடைபெற இருக்கின்றது. […]

ஜோதிர்லதா கிரிஜா

This entry is part 5 of 8 in the series 21 ஏப்ரல் 2024

ஆர்வி ஆசிரியராய் இருந்த கண்ணன் சிறுவர் இதழில் எழுதத் தொடங்கி ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் எழுத்துலகில் செயல் பட்டவர் ஜோதிர்லதா கிரிஜா.  திண்ணை இதழில் தொடர்ந்து பங்களிப்பு செய்தவர். பெண்களின் பார்வையைப் பிரதிபலித்து தம் கருத்துகளை புனைவாகவும், கட்டுரைகளாகவும் முன்வைத்தவர். அவர் எம்போன்றோர் நினைவில் வாழ்ந்திருப்பார்.

மகிழ் !

This entry is part 4 of 6 in the series 14 ஏப்ரல் 2024

சோம. அழகு உவன் பணிக்குச் சென்ற பின் சுடச்சுட போர்ன்விட்டாவுடன்(உவள் ஒரு ‘tea’totaller! ஏன்? தேநீர் என்று எழுதினால்தான் எழுத்துக்குரிய இலக்கணமும் உணர்வும் பெறுமா? தேநீரின் ஒவ்வொரு மிடறுக்கும் சற்றும் சளைத்ததல்ல இது!) வந்து மெத்திருக்கையில் கால் நீட்டி அமர்ந்தாள் உவனது உவள். தரையில் விரவியும் சிதறியும் கிடந்த சாமான்களுக்கு நடுவில் உவர்களது இரண்டரை வயதுக் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. குழந்தையைப் பார்த்துக் கொண்டே தனது கோப்பையைக் காலி செய்தாள். முந்தைய நாள் உவனுக்கும் தனக்கும் இடையில் […]

நாடகம் – ஸ்தீரி பருவம்-   அ. மங்கை.

This entry is part 1 of 8 in the series 4 ஏப்ரல் 2024

ஜெயானந்தன். அ.மங்கையின் புதிய நாடகப் படைப்பாக “ ஸ்தீரி பருவம், மலர்ந்துள்ளது. போரின் கொடூரத்தையும், பேரழிவையும் பெண்களின் பார்வையில் பார்க்கப் படுகின்றது. மகாபாரத்தின், ஸ்தீரி பருவத்தின் காட்சிகளை மேடையின் பின்புறத்தில் டிரஸ்கி மருதுவின் கைவண்ணத்தில் ஓவியங்களாக அமைத்து, நாடக நடிகர்கள் உடைகள் வெண்மையில் கொடுத்துள்ளனர். அமைதிக்கான நிறமாக வெண்மையே ஓளிரட்டும் என்ற எண்ணம் மேலோங்க வேண்டும் என்பதே , மங்கையின் எண்ணமாக தெரிகின்றது. மகாபாரதப்போர், இன்னும் முடியவில்லை. அது ஈழப்போராக, உக்ரைன்-ரஷ்யப் போராக, இஸ்ரேல்- காஸா போராக தொடர்கின்றது என்று சொல்லும், […]

நெடுநல்வாடை

This entry is part 4 of 4 in the series 31 மார்ச் 2024

நெடுநல்வாடை பத்துப் பாட்டு நூல்களில் ஏழாம் இடத்தில் வைத்து எண்ணப்படுவது நெடுநல்வாடை ஆகும். இதனைப் பாடியவர்  மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் எனும் புலவர் ஆவார். இந்நூலின் பாட்டுடைத் தலவனாக  தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் திகழ்கிறார். இந்நூல் அகவற்பாவால் இயற்றப்பட்டதாகும். மொத்தம் 188 அடிகள்கொண்டு இது விளங்குகிறது. இந்நூலை இயற்றியவரின் இயற்பெயர் கீரன் என்பதாகும். ந என்னும் சிறப்புப் பொருளைத்தரும் இடைச்சொல் சேர்த்து நக்கீரன் என வழங்கப்படுகிறது. திருமுருகாற்றுப்படையை இயற்றியவரும் இவரே.  இவர் […]

தமிழ் ஒலிபரப்பில் பொற்காலப் பதிவு

This entry is part 2 of 4 in the series 31 மார்ச் 2024

குரு அரவிந்தன் சென்ற சனிக்கிழமை மார்ச் மாதம் 23 ஆம் திகதி 2024 அன்று சொற்கோ வி. என். மதிஅழகன் அவர்களின் ‘தமிழ் ஒலிபரப்பில் பொற்காலப் பதிவு’ என்ற நூல் ஸ்காபரோ சிவிக் சென்ரரில் அறிமுகம் செய்து வைக்கப்பெற்றது. இந்த நிகழ்வுக்கு கனடா தமிழ் எழுத்தாளர் இணையத் தலைவர் அகணி சுரேஸ் அவர்கள் தலைமை தாங்கினார். சுமார் 2:00 மணியளவில் இந்த நிகழ்வு ஆரம்பமானபோது, திரு. சோம சச்சிதானந்தன் தமிழ்த்தாய் வாழ்தும், செல்வி கிஸோரி ராஜ்குமார் கனடாப் […]

என்ன யோசிச்சுட்டு இருக்க?

This entry is part 4 of 4 in the series 24 மார்ச் 2024

சோம. அழகு             Rocket Scienceஐ காட்டிலும் கடினமான கேள்வி இது. உண்மையில் நமது எண்ணவோட்டங்களின் சங்கிலித் தொடரை விவரிக்கவே இயலாது. அந்தக் கட்டற்ற காட்டாற்றின் வழிப் பாதைகள் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டிருக்க வேண்டியதில்லை. சம்பந்தப்பட்டிருப்பினும் அந்த இடையிணைப்பிற்குச் சமயத்தில் பெரிய பொருளோ காரணமோ இருக்காது. அதுதான் பிரச்சனையே. அதுதான் அதன் அழகும் கூட! உச்சகட்டமாக ஒன்றுமே யோசிக்காமல் வெறுமனே எதையோ பார்த்துக் கொண்டே கூட இருந்திருப்பேன் சில சமயம். இது புரியாமல் இக்கேள்வியை அடிக்கடி கேட்பதில் என்னதான் […]

இலக்கிய முத்துகள்

This entry is part 1 of 4 in the series 24 மார்ச் 2024

                                    பாச்சுடர் வளவ. துரையன் [திருமங்கை ஆழ்வார் அருளிய ‘பெரிய திருமொழி” இலக்கிய நோக்கில் எளிய உரை”-நூலாசிரியர் முனைவர் ஏ.வி. ரங்காச்சரியார்—வெளியீடு:அருள்மாரி அருளிச்செயல்  ஆய்வகம், ஸ்ரீ வேங்கடார்ய குருகுலம், 151, மேல வீதி, சிதம்பரம், ஸ்ரீமந் நாதமுனிகள் 1200 அவதார ஆண்டு திருநக்ஷத்திர வைபவ வெளியீடு—பக்-409—விலை குறிப்பிடப்படவில்லை]  இந்நூலின் தோரண வாயிலில் திருமங்கையாழ்வார் பாடியுள்ள பல்வகை இலக்கணத்துறைகளை முனைவர் ஏ.வி. ரங்காச்சாரியார் அவர்கள் விரிவாக எடுத்து வியந்தோதி இருக்கிறார். மாலை, பிள்ளைத் தமிழ், ஊடல், சாழல். அந்தாதி, […]