தனித்திரு !

This entry is part 1 of 2 in the series 19 மே 2024

சோம. அழகு             கோவிட் காலம், அதுவல்லாத காலம், இளமை, முதுமை என எல்லா நிலைகளிலும் எனக்கு மட்டும்தான் ‘தனித்திரு’ என்னும் இச்சொல் இன்பத்தேனாகப் பாய்கிறதா? “‘கொடிது கொடிது தனிமை கொடிது; அதனினும் கொடிது முதுமையில் தனிமை’. வயசானாதான் அதுலாம் தெரியும். இப்போ அதுபற்றி உனக்குப் புரியாது” – இதைத்தானே சொல்லப் போகிறீர்கள்? ஒப்புக்கொள்கிறேன். முதல் வரியில் ‘முதுமை’யைச் சேர்த்துக் கொள்ள எனக்குத் தகுதி இல்லைதான். ஆனால் ‘முதுமையில் நாம் தனித்திருக்க இயலாது’ என்னும் ஒற்றைக் காரணத்திற்காக […]

ஜோதிர்லதா கிரிஜா

This entry is part 5 of 8 in the series 21 ஏப்ரல் 2024

ஆர்வி ஆசிரியராய் இருந்த கண்ணன் சிறுவர் இதழில் எழுதத் தொடங்கி ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் எழுத்துலகில் செயல் பட்டவர் ஜோதிர்லதா கிரிஜா.  திண்ணை இதழில் தொடர்ந்து பங்களிப்பு செய்தவர். பெண்களின் பார்வையைப் பிரதிபலித்து தம் கருத்துகளை புனைவாகவும், கட்டுரைகளாகவும் முன்வைத்தவர். அவர் எம்போன்றோர் நினைவில் வாழ்ந்திருப்பார்.

மகிழ் !

This entry is part 4 of 6 in the series 14 ஏப்ரல் 2024

சோம. அழகு உவன் பணிக்குச் சென்ற பின் சுடச்சுட போர்ன்விட்டாவுடன்(உவள் ஒரு ‘tea’totaller! ஏன்? தேநீர் என்று எழுதினால்தான் எழுத்துக்குரிய இலக்கணமும் உணர்வும் பெறுமா? தேநீரின் ஒவ்வொரு மிடறுக்கும் சற்றும் சளைத்ததல்ல இது!) வந்து மெத்திருக்கையில் கால் நீட்டி அமர்ந்தாள் உவனது உவள். தரையில் விரவியும் சிதறியும் கிடந்த சாமான்களுக்கு நடுவில் உவர்களது இரண்டரை வயதுக் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. குழந்தையைப் பார்த்துக் கொண்டே தனது கோப்பையைக் காலி செய்தாள். முந்தைய நாள் உவனுக்கும் தனக்கும் இடையில் […]

என்ன யோசிச்சுட்டு இருக்க?

This entry is part 4 of 4 in the series 24 மார்ச் 2024

சோம. அழகு             Rocket Scienceஐ காட்டிலும் கடினமான கேள்வி இது. உண்மையில் நமது எண்ணவோட்டங்களின் சங்கிலித் தொடரை விவரிக்கவே இயலாது. அந்தக் கட்டற்ற காட்டாற்றின் வழிப் பாதைகள் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டிருக்க வேண்டியதில்லை. சம்பந்தப்பட்டிருப்பினும் அந்த இடையிணைப்பிற்குச் சமயத்தில் பெரிய பொருளோ காரணமோ இருக்காது. அதுதான் பிரச்சனையே. அதுதான் அதன் அழகும் கூட! உச்சகட்டமாக ஒன்றுமே யோசிக்காமல் வெறுமனே எதையோ பார்த்துக் கொண்டே கூட இருந்திருப்பேன் சில சமயம். இது புரியாமல் இக்கேள்வியை அடிக்கடி கேட்பதில் என்னதான் […]

கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை

This entry is part 1 of 4 in the series 17 மார்ச் 2024

சோம. அழகு பிற உயிரின் துயருக்கு நெக்குருகும் கண்ணோட்டம் வாய்க்கப் பெற்ற மனங்களெல்லாம் ஆசீர்வதிக்கப் பெற்றவையா? அல்லது கொடுஞ்சாபத்திற்கு உள்ளானவையா? மிகச் சாதாரண காட்சிகளே போதுமானவையாக இருக்கின்றன, நம்மை மொத்தமாக உருக்குலையச் செய்ய. பரவலான பொருளில் பயன்படுத்தியிருக்கிறேன் எனினும் ‘சாதாரணம்’ என்பதற்கு இங்கு அளவுகோல் என்ன? உங்கள் சாதாரணங்கள் எனக்குப் பெரும்பாலும் ‘ரணங்கள்’. உதாரணமாக, நம் தாத்தா பிறப்பதற்கு முன்பிருந்தே நிற்கும் மரம் ஒன்று ‘சாலை விரிவாக்கம்’, ‘மின்கம்பிக்கு இடைஞ்சல்’… போன்ற அற்பக் காரணங்களுக்காக வெட்டப்படுவதை யாரேனும் […]

தமராகித் தற்றுறந்தார் வாழி!    

This entry is part 2 of 4 in the series 25 பிப்ரவரி 2024

                                       சோம. அழகு       வயதாக வயதாக (ரொம்ப ஒண்ணும் இல்ல… ஒரு 32 தான்!) வாழ்க்கை பற்றிய… அதாவது மனிதர்களைப் பற்றிய கண்ணோட்டமே மாறுகிறது. மகிழ்ச்சி, நிறைவு, நிம்மதி போன்றவை புதிய இலக்கண மாற்றம் பெறுகின்றன. யாருக்கெல்லாம் நம்மைப் பிடிக்கிறது என்பதை விட யாருக்கெல்லாம் நம்மைப் பிடிக்கவில்லை அல்லது யாரையெல்லாம் நமக்குப் பிடிக்கவில்லை என்பது நம்மை இன்னும் தெளிவுற வரையறுப்பதாக அவதானிக்கிறேன். ஏனெனில் நம் மீது உமிழப்படும் வெறுப்பிற்கான காரணங்களும் அக்காரணங்களை நமக்கெதிரான பதாகைகளாக உயர்த்திப் […]

கனடா கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பின் தைப்பொங்கல் விழா

This entry is part 3 of 3 in the series 4 பிப்ரவரி 2024

குரு அரவிந்தன் கனடாவில் இந்த வருடத் தமிழ் மரபுக் கொண்டாட்டங்கள் முடிவுக்கு வந்திருக்கின்றன. சென்ற ஞாயிற்றுக்கிழமை 28-1-2024 அன்று ‘கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பின்’ பொங்கல் விழாவும் மரபுத்திங்களும் மிகவும் சிறப்பாக ஒன்ராறியோ, எத்தோபிக்கோவில் கொண்டாடப்பட்டது. மங்கள விளக்கேற்றிக் கனடா தேசிய கீதம் தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு மொழிகள் கலந்து பாடப்பெற்றது. தொடர்ந்து தமிழ்வாழ்த்தும் அகவணக்கமும் இடம் பெற்றன. தமிழர்களின் பாரம்பரியத்திற்கு அமைய பொங்கல் பற்றிய உரையும், மற்றும் மொழி, கலாச்சார, பண்பாட்டு நிகழ்வுகளும் இடம் பெற்றன. […]