Articles Posted in the " கதைகள் " Category

 • சிமோன் அப்பா

  சிமோன் அப்பா

            கி தெ மொப்பசான்                            தமிழில் நா. கிருஷ்ணா (1er décembre 1879  பிரசுரமான் இச்சிறுகதையில் ஆற்றங்கரை யில் ஒரு சிறுதவளை மீதான படைப்புப் பார்வையும்,  மொப்பசானுக்கே உரிய வகையில் இக்கதையில் ஒளிந்துள்ள மெலிதான நுட்பமும் என்னை மொழிபெயர்க்கத் தூண்டியது. )  நண்பகல், காலை நேர வகுப்புகள் முடிவுக்குவந்ததை தெரிவிக்கும் வகையில் பள்ளி மணி அடித்து ஓய்ந்தது.  பள்ளிக் கதவு திறக்கப்பட்டது, பையன்கள் முந்தி அடித்துக்கொண்டு வகுப்பிலிருந்து வெளியேறினார்கள். வழக்கமாக வகுப்பிலிருந்து வெளியேறிய அடுத்தநொடி உணவுக்காக கலைந்து […]


 • மெட்ராஸ்  டூ  தில்லி

  மெட்ராஸ்  டூ  தில்லி

                                                                                 சிவபிரகாஷ் வருடம் : 1992  இடம் : மெட்ராஸ் சென்டரல் ரயில் நிலையம், நேரம் : இரவு  10:00மணி வண்டி எண் […]


 • பூவம்மா 

  பூவம்மா 

    சியாமளா கோபு “என்ன பூவு, உம்மவளைப் பார்க்க டுபாய் போறியாமே” என்று அவசரமாக வாயில் அதக்கிக் கொண்டிருந்த வெற்றிலையை துப்பி விட்டு கேட்டாள்.  எதுக்காகவும் யாருக்காகவும் அதை அவ்வளவு சீக்கிரமாக துப்புவதில்லை. அவளுக்கு வாங்கிக் கொடுக்க யாரு இருக்கா? வெத்தலை அதக்கிய வாயோடு இவள் பேசுவதை புரிந்து கொள்வது கேக்கறவங்க பாடு. ஆனால் இப்போது அப்படியில்லை. மென்னு மென்னு சாரற்ற வெத்திலையை விட இந்த சங்கதி அதி முக்கியம். ஆட்டைப் பிடித்துக் கொண்டு போகும் பூவம்மாவை […]


 • கூந்தல் உள்ளவர்கள்   அள்ளி முடிகிறார்கள்

  கூந்தல் உள்ளவர்கள்   அள்ளி முடிகிறார்கள்

    எஸ்ஸார்சி   இந்த   காளையார்குடி வாசு அய்யருக்கு நல்ல சாவே வாய்க்காது. ஊரில் ஜனங்கள் பேசிக்கொள்வார்கள்.  ஊர் மக்கள் அவரோடு  அனுபவித்தது அப்படி. அது என்னப்பா  நல்ல சாவு என்றா கேட்கிறீர்கள்.  அதற்கும்  ஒரு பதில் சொல்லத்தான் வேண்டும். இப்படி ஒரு சொல்லாடல்  வழக்கத்தில் இருக்கிறதுதான். யார் யார் நோய் நொடி என்று  படுக்கையில், கிடக்காமல், யாரும் தூக்காமல்  கொள்ளாமல் இந்தப் பூ உலகினின்று விடைபெற்றுக்கொண்டு  நரகம் இல்லை  அந்த  சொர்க்கம் போகிறார்களோ அவர்களுக்கு வாய்ப்பது […]


 • படிக்க வா

  படிக்க வா

                                             ஆ.மீனாட்சி சுந்தரமூர்த்தி.        அன்று பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போது கல்யாணிக்குச் சோர்வாக இருந்தது. தனியார் பள்ளி என்றால் சும்மாவா, நம்முடைய பணியைச் சரியாகச் செய்தால் மட்டும் போதாது. நிர்வாகம், மற்றும் தலைமையின் நல்லெண்ணமும் பெறுதல் அவசியம். அதே சமயத்தில் திறமைக்கான அங்கீகாரமும் கிடைக்காமல் போகாது. இந்தப் பள்ளியைப் பொறுத்த வரையில் தாளாளர் நல்ல பண்பாளர். கட்டணம் கூட மற்றப் பள்ளிகளை விடவும் குறைவுதான். அதனால்தான் குறைந்த வருமானம் உள்ளவர்களும் பிள்ளைகளை அனுப்புகின்றனர்.அவர்களுக்கு நம்பிக்கை தந்து ஆசிரியர்களைத் […]


 • வீடு

  வீடு

      ஒரு வேலைத்திறன் பயிற்சி வகுப்பில்தான் அலியைச் சந்தித்தேன். முழங்கால் வரையிலான ஜிப்பா தொளதொள கால்சட்டை அணிந்திருந்தார். பாகிஸ்தானியாக இருக்கலாம். எனக்குப் பக்கத்தில்தான் அமர்ந்தார். ‘நல்லாயிருக்கீங்களாண்ணே’ என்றபோது நெஞ்சில் ‘பசக்’ கென்று அப்பிக்கொண்டார். தமிழர்தான். வகுப்பு முழுக்க மென்மையாகப் பேசிக்கொண்டோம். ஊர் தென்காசி என்றார். வகுப்பு முடிந்ததும் சாப்பிடப்போவோம் என்று சொல்லி அல்ஜுனிடில் இருக்கும் அந்த கோபிதியாம் கடைக்குக் கூட்டிச் சென்றார். ஒரு மலாய்க் கடையில் வாழைப்பழ பஜ்ஜி அருமையாக இருக்கும் என்றார். சென்றோம். உட்காரவைத்தார். […]


 • சிவப்புச்சட்டை….

  சிவப்புச்சட்டை….

      ச.சிவபிரகாஷ்   சென்னையின் முக்கியமான அடையாளங்களில்  ஒன்றாக காணப்படுவது ‘கூவம் ஆறு – .’இது பிரதான பல சாலைகளை கடந்தாலும், ரயில் நிலையம் அருகில்  ஒடும் ஒரு பகுதி இடத்தின் தெரு பெயர் “முல்லை நகர்.”கூவம் ஆற்றின் அதன் இருகரையிலும் , வரிசைப்பட்டு அமைந்திருப்பது குடிசைகள் தான். இது பெரும்பாலும் ஆக்கிரமிக்கப்பட்ட இடமே, ஆட்டோ, ரிக்க்ஷா, ஓட்டுநர்கள், தினகூலிகள், இப்படி பலக்குடும்பத்தினர் வாழ்ந்திருக்க, ரயில் நிலையத்தில் தின கூலியாக இருப்பவர்  “போர்டர் குப்பன்”இவரும், இரயில்வே […]


 • மெல்லச் சிரித்தாள்

  மெல்லச் சிரித்தாள்

    மீனாட்சி சுந்தரமூர்த்தி வாங்க சித்தி, வா தம்பி, சித்தப்பா வரலையா?  அவருக்கு திடீர்னு ஒரு வேல வந்திடுச்சி,ராத்திரி இராமேஸ்வரத்துல வந்திடுவாரு ஜமுனா. சித்தியையும் , தம்பியையும் அழைத்துக் கொண்டு மாடிப்படி ஏறினாள். அடடே சம்மந்தியம்மா வாங்க என்று வரவேற்றாள் முகமெல்லாம் மத்தாப்பூவாக மகளுக்கு வீட்டைச் சுற்றிக் காட்டிக் கொண்டிருந்த வைரம். பழைய ஓட்டு வீடு இரண்டடுக்கு மாடியாக தாராளமாக மூன்று குடும்பங்கள் வசிக்குமளவு  வசதிகளோடு நிமிர்ந்து நின்றது. மறுநாள் காலையில் புதுமனைப் புகுவிழா.  ஜமுனாவின் அம்மா […]


 • மாட்டுப் பிரச்சனை

  மாட்டுப் பிரச்சனை

    கடல்புத்திரன்   சலீம்மைத் தேடி சிற்ரரஞ்சன்,பாபு,இன்னும் இருவர் வந்திருந்தார்கள்.”தோழர் இவர்கள் மாட்டுப் பிரச்சனையைக் கொண்டு வாரார்கள் . ” எங்களை வந்து தீர்க்கட்டாம் ” என்ற ரஞ்சஜனைப் பார்த்து “பிரச்சனையைக் கூறு” என்றவன், யோசித்து விட்டு.”கேட்டடியிலே நின்று கதைக்க வேண்டாம், உள்ளே வாருங்கள் ” கூட்டிச் சென்றான். வாடகையில் ‘ராஜ’ களையுடன் இருக்கிற அந்த பெரிய பழைய வீடு வந்தாரை வாழ வைக்கும் . வெளியிலுள்ள பூச்சுக்கள் கழன்று பெரிதாக விழுந்திருக்கவில்லை . உள்ளுக்க தான் […]


 • இரவு

  இரவு

                                                                                          (கதை பிரசுரமான ஆண்டு14 juin 1887))                                                      கி தெ மாப்பசான்                                                தமிழில் நா. கிருஷ்ணா   இரவென்றால் எனக்கு அப்படியொரு தாபம். ஒருவர் தன்னுடைய நாட்டை, அல்லது ஆசைநாயகியை ஆழமாகவும், இயல்பாகவும், தன்னை மீறிய மையலுடனும் நேசிப்பதுபோல எனக்கு இரவின்மீது தணியாத மோகம். மோகமெனில் எப்படி? கண்களைக்கொண்டு அதைக் காண்பது, மூக்கினைக்கொண்டு அதன் வாசத்தை நுகர்வது, காதுகளைக்கொண்டு அதனுடைய நிசப்தத்தைச் செவிமடுப்பது, உடலைக்கொண்டு அதன் அந்தகாரத்தை வருடுவதென்று, எனது […]