அடுத்த பாடல்

அடுத்து என்ன பாடல் ஒலிக்கும்
என்ற மன நிலையுடன் உள்ள
வானொலி ரசிகனைப்போல
உனது அடுத்த வார்த்தைகளுக்கென
ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அவர் எழுதிய கவிதைப்புத்தகம்
எங்கே கிடைக்கும் என்று
எழுத்தாளனிடமே
கேட்பது போல உன்னைப்பற்றிய
கவிதை எங்கே கிடைக்கும் என
உன்னிடமே கேட்கிறேன்

பத்திரிக்கைகள் ஏதுவாயிருப்பினும்
அவற்றின் தலையங்கங்கள்
தனித்தமிழில் மட்டுமே வருவது போல
கடிதங்கள் ஏதுவாயிருப்பினும்
உனக்கென எழுதும்போது நானதில்
காதல் மட்டுமே எழுதுகிறேன்.

என்னைச்சுற்றி பல மொழிகள்
பேசப்படினும் என் எண்ணங்கள்
தமிழில் மட்டுமே இருப்பது போல
உன்னைச்சுற்றி பலர் இருப்பினும்
என்னில் உன்னை மட்டுமே
நிறைத்திருக்கிறேன்.

– சின்னப்பயல் (chinnappayal@gmail.com)

Series Navigationஎனது இலக்கிய அனுபவங்கள் – 14 எழுத்தாளர்கள் சந்திப்பு – 1 (அகிலன்)பிணங்களை வெட்டுபவரின் குறிப்புக்கள்