அடைமழை!

Spread the love


அடைமழை பெய்து

அப்போதுதான்

ஓய்ந்திருந்தது!

 

அலுவலகம் முடிந்து

வீடு திரும்புவதற்காய்

சாலையோரமாய் நடந்தேன்!

 

என் கைகுலுக்கிவிட்டு

தேநீர் அருந்தச் சொன்னது

தென்றல்!

 

ஸ்ட்ராங்காய்

ஒரு டீ குடித்தவுடனே

மீண்டும் கிளம்பினேன்

சாலையோரமாய் நிறுத்திவைத்திருந்த

நடராஜா சர்வீசில்…!

 

பூக்கடைப் பெண்மணி

உரக்கக் கூவினாள்

‘நான்கு முழம்

பத்து ரூபா…

நான்கு முழம்

பத்து ரூபா…’

என்று!

 

கடந்து போகயிலே

அவள் முகம் பார்த்தேன்

கூவியபடியே

அவள் கண்கலிளிருந்து

மீண்டும் வலுத்தது

அடைமழை…!!

Series Navigationஅகஒட்டு( நாவல்)விமர்சனம்தேடல்