அதில்.

Spread the love

ஓர் எண்ணம்
மன தொலைவுகளை
கடந்து கொண்டிருக்கிறது
இக்கணம் .

அதில்

நம் கனவுகள் மீதம்
கொண்டு உருவாக்கப்படுகிறது
இந்த இரவு.

அதில்

சிதறல் கொண்டிருந்த
ஒரு மவுனம்
மன ஒலிகளில்
விழுங்கப்படுகிறது .

அதில்

ஒன்றும்
நிகழ்த்தியிருக்கவில்லை
ஒரு அக மவுனமே
அனைத்தும்
சாத்தியமாக்கியது .

அதில்

என்னை விதைக்கும்
பிரபஞ்சத்தில்
இயக்கமாவேன்
உணர்த்துவதற்கு காலம்
பின் தொடரும்
பிறகு
நீயும் .

அதில்

நிறைவு தன்மையற்ற
பகிர்வுகள் நேற்றைய
மீதம் கொண்டு
வளர்த்தெடுக்கப்படுகிறது .

அதில்

நீடித்து நிலைத்திருக்கும்
தன் பிரபஞ்ச இயக்கங்களின்
தன்மையில் பெற்றிருப்பவை
என் காலமும் சிறிது
பெற்று கொள்கிறது .

-வளத்தூர் தி.ராஜேஷ்

Series Navigationவீடுஇங்கே..