அந்தப் பாடம்

பூவைப் பறிக்கிறோம்,
செடி
புன்னகைக்கிறது மறுநாளும்..
காயைக் கனியைக் கவர்கிறோம்,
கவலைப்படவில்லை
காய்க்கிறது மறுபடியும்..
கிளைகளை ஒடிக்கிறோம்,
தளைக்கிறது திரும்பவும்..
தாங்கிக்கொள்கிறது புள்ளினத்தை-
ஓங்கிக்கேட்கிறது பலகுரலிசை..
அட
மரத்தையே வெட்டுகிறோம்,
மறுபடியும் துளிர்க்கிறதே !

மீண்டும் வெட்டாதே ..
மனிதனே,
உனக்கு வேண்டியது
ஒரு பாடம்..
அதைநீ கற்றுக்கொள்
மரத்திடம்-
அழிவை என்றும் எதிர்க்கும்
ஆவேசம் !

-செண்பக ஜெகதீசன்..

Series Navigationபுதிய பழமைநீரிலிருந்து உப்புத்திரவமான பயணத்தில்..:-