அறியாமை அறியப்படும் வரை….

god.pngஆண்டவனே


ஒரு தவம் செய்து கொண்டிருக்கிறான்.


மனிதனை நான்


படைத்தேன் என்றால்


நான் கற்பனை செய்யுமுன் 


அந்த மனதெனும் கர்ப்பத்தில்


முன்பே வந்து


படுத்திருக்கும் அந்த 


மனிதன் யார்?
ஆண்டவன் தவம் 


இன்னும் கலையவில்லை.


ஆத்திகர்களின் கூச்சலால்


ஆண்டவன் தவம் கலைத்தார்.


திருவாய்


மலர்ந்தருளினார்.


மனிதா


என்னைப் படைத்து விட்டு


இன்னும் என்ன‌


இங்கு வந்து கூச்சல் போடுகிறாய்.


உங்களை


“என்ன சொல்லி அழைக்க?”


“நீயே படைத்துவிட்டு 


நீயே கேட்கிறாய்.


மனிதா..மனிதா..என்று


ஆயிரம் தடவை அழை”


என்றான் ஆண்டவன்.


விஷ்ணு சஹஸ்ரநாமமாய்


மனிதன்


தன்னையே


அழைத்துக்கொண்டு 


கேட்டுக்கொண்டே இருக்கிறான்.


அவன் “அறியாமை” அறியப்படும் வரை


ஆண்டவனும் கேட்டுக்கொண்டே


சிரித்துக்கொண்டிருக்கிறான்.


======================================

Series Navigationகேட்காமலே சொல் பூத்தது : முகக்கவசம்தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]