அறிவுத்தேடல் நூல் அறிமுக மின்னஞ்சல் இதழ் 14

 

”திராவிடம் பெரியாரியம் இன்றும் தேவையே”(பெரியாரிய எதிர்ப்பாளர்களுகு பதிலடி தரும் நூல்)

தொகுப்பாசிரியர்: தமிழேந்திInline image 1

பெரியார் முவைத்த திராவிடர் கோட்பாட்டுக்குத் தவறான , வரலாற்று உண்மைகளுக்கு மாறான திரிபுகளும் திருத்தல்களும் சில முகாம்களில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு வருகின்றன. அந்தப் பொய்மைகள் ஒவ்வொன்றாக அம்பலப்பட்டு வருகின்றன.

இந்தச் சூழலில் ”திராவிடம் , பெரியாரியம் இன்றும் தேவையே” எனும் தலைப்பில் பாவலர் தமிழேந்தியைப் பதிப்பாசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்டிருக்கும் இந்த நூல் மிகச்சிறந்த கருத்தாக வெளிவந்துள்ளது.

பெரியார் தமிழுக்கு எதிரி;

திராவிடர் கழகம் என்ற பெயர்மாற்றம் பெரியாரால் ஒரேநாளில் மேற்கொள்ளப் பட்டது;

1938 இல் இந்திஎதிர்ப்புப் போராட்டத்தை நடத்தியவர்கள் தமிழ்ப்பண்டிதர்களே தவிர பெரியார் அல்ல

பெரியார் முன்வைத்த திராவிடம் ஆந்திர, கர்நாடக, கேரளத்தவருக்குத் துணைசெய்தது;

பெரியார் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரி

போன்ற உண்மைக்கு மாறான வாதங்களைச் சுக்குநூறாகத் தகர்த்தெறியும் பலரின் ஆழமான கட்டுரைகள் இடம்பெற்றிருப்பதோடு, தோழர் வே.ஆனைமுத்து, பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆகியோரின் நேர்காணல்களும் பெரியாருக்கு எதிரானவரலாற்றுப் புரட்டுகளை அம்பலப் படுத்துகிறது.

பெரியாரியலாளர்களுக்கு வெளிச்சமும்,திரிபுவாதிகளின் குழப்பங்களுக்கு ஆணித்தரமான மறுப்பாகவும்வெளிவந்துள்ள இந்தநூல் படிப்பதற்கும் பரப்புவதற்கும்தகுதியான சிறந்த ஆவணமாகும்

நன்றிநூலின் பெயர்

” ”திராவிடம் பெரியாரியம் இன்றும் தேவையே” ”

தொகுப்பாசிரியர்: தமிழேந்தி

வெளியீடு: புரட்சிக்கவிஞர் கலை இலக்கிய மன்றம்,

44, இராசாசி வீதி, அரக்கோணம் – 631 001

பக்:    152       விலை:          உருவா 70

பேச: 94434 32069
91711 14048

மின்னஞ்சல்: tamizhendi@yahoo.com

அறிவுத் தேடல் என்ற பெயரிலான நூல் அறிமுக மின்னஞ்சல் இதழ் ஒன்றினை அனுப்பி வருகிறேன். முடிந்தால் நாள்தோறும் அல்லது அவ்வப்போது, பெரியாரியம், தலித்தியம், பெண்ணியம், தமிழியம் மற்றும் முற்போக்கு நூல்களின் அறிமுகம் மின்னஞ்சல் வழியாக அனுப்பப்பெறும். முற்போக்கான உள்ளடக்கம் கொண்ட குறும்படங்கள், நூல்கள் பற்றிய விவரங்களுடன் மின்னஞ்சல் அனுப்புக! அறிமுகப் படுத்துகிறோம்.

நூல்கள், குறும்படங்கள் அனுப்பவிரும்பினால் தொடர்பு கொள்க! அஞ்சல் முகவரி தெரிவிக்கிறேன்.

Series Navigation‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………30 வெங்கட் சாமிநாதன் – ‘இன்னும் சில ஆளுமைகள்’தாகூரின் கீதப் பாமாலை – 77 உன் ஆத்மாவைத் திறந்து வை .. !