அழுகையின் உருவகத்தில்..!

என்ன பதில் மொழிவதென தவிக்கும்

விளிம்பு நிலை விரிசலின் தடயங்களில்
ஏதேனும் மார்பு அகப்பட்டிருந்தால்
கண்ணீர் கரைசல்
படிமக் காடு படர்ந்திருக்கும்.
வார்த்தைகளின் உயிரோட்டத்திலே
உயிர் பிரிந்து சென்றிருக்கலாம்..
ஏதோ ஒரு அழுகையின் உருவகத்தில்
அரவணைத்திட அறியாதொரு
அழகியலின் தொன்மம்
கரைந்துக் கொண்டிருக்கிறது.
*மணவை அமீன்*

 

Series Navigationப மதியழகன் கவிதைகள்கிறீச்சிடும் பறவை