அவனேதான்

ஆட்டுக்கு புல்லைக்காட்டி
அழைத்துச் செல்கிறான்
கழுத்தை வெட்ட..
மீனுக்கு புழுவைக்காட்டி
தூண்டிலில் பிடித்து
துடிக்க வைக்கிறான்..
பசுவிடம் பால்கறக்க
போலியாய்க்
கன்றைக் காட்டி
காரியம் சாதிக்கிறான்..
இத்தனையும் தானாகி
இலவசத்தால் ஏமாந்து
ஜனநாயகம் என்ற பேரில்
சந்தியில் நிற்கிறான் !

-செண்பக ஜெகதீசன்..

Series Navigationநடனக்கலைஞர் சாந்தா ராவ் நினைவாக…ப மதியழகன் கவிதைகள்