ஆத்மாநாம்

“உங்கள் நண்பர்களைச் சொல்லுங்கள்
நீங்கள் யாரென்று சொல்லுகிறேன்
என்றார் ஒரு பேரறிஞர்
நான் சொன்னேன்
நீங்கள் யாரென்று சொல்லுங்கள்
உங்கள் நண்பர்களைச் சொல்லுகிறேன்
முழித்த முழி முழியையே முழுங்கும்போல
நீங்கள் யாரானால் என்ன
நான் யாரானால் என்ன
அனாவசியக் கேள்விகள்
அனாவசிய பதில்கள்
எதையும் நிரூபிக்காமல்
சற்று சும்மா இருங்கள்”
————————————————————————————-
இது தான் எனக்கு கிடைத்து
ஆத்மாநாமின் கவிதை என்று.
இதில் தற்கொலை செய்து கொண்டது
எந்த எழுத்து?
தெரியவில்லை.
இவை
சுஜாதாக்களை
அசோகமித்திரன்களை
நிமிண்டியிருக்கிறது.
அந்த‌
“சும்மா இரு”வில்
ஒரு மூளையின் ரத்தம் கசிகிறது.
அது இதய அறைகளில்
கசாப்பு செய்யப்பட்டிருக்கலாம்.
எங்கோ ஒரு விழி மின்னல்
தாக்கி இருக்கலாம்.
சிறகுக்கள் உயர்த்த முடியாமல்
“காலில் விலங்கு இட்டோம்”
என்று
அகன்ற வானத்தை
மூச்சுச் சிமிழுக்குள்
அடைக்கப்பார்த்திருக்கலாம்.
ஓ!நண்பா!
ஓலங்களும்
ஓசை கழற்றினால்
ஒப்பற்ற இலக்கியங்களே.
உன் ஓசைகள்
கடற்கரையில்
நுண்துளி பட்டுமணலில்
பொமரேனியன் போல்
நக்கிக்கொடுக்கும்
அந்த அலைகளைப்போல்
நெஞ்சு வரை வந்து
நனைக்கிறது.
Series Navigationபேரா.வே.சபாநாயகம் – 80 விழா அழைப்புஓவியம் விற்பனைக்கு அல்ல…தமிழ்க்கணினி இணையப்பயன்பாடுகள் என்ற தலைப்பில் பன்னாட்டுக்கருத்தரங்கம்நீங்காத நினைவுகள் 33 – சூடாமணி பற்றிய நினைவலைகள்திண்ணையின் இலக்கியத் தடம்-21தொடுவானம் 2 – விழியறிந்த முதல் கவிதை அவள்!ஜாக்கி 27. வெற்றி நாயகன்தினம் என் பயணங்கள் – 4மந்தமான வானிலைமருமகளின் மர்மம் – 15மணிக்கொடி எழுதியவர் : ஜோதிர்லதா கிரிஜாபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 45சிற்றிதழ்களில் சங்கு(2010-2011): கவிதைகள் ஓர் ஆய்வுபுதியமாதவியின் மின்சாரவண்டிகள்மனோபாவங்கள்நாசா நிலவைச் சுற்றும் “லாடி” [LADEE] விண்ணுளவி ஆய்வு காலத்தை நீடிக்கிறது.வால்ட் விட்மன் வசனக் கவிதை – 61 ஆதாமின் பிள்ளைகள் – 3