உட்சுவரின் மௌன நிழல்…

*
இரவின் துளி ஈரம்
பரவும் இவ்வறையெங்கும்

கணுக்கால் தொட்டு நீளும் யாமத்தின்
முதல் கீற்றை ஒற்றியெடுக்கும் உதடுகள்
உச்சரிக்க மறுக்கின்றன

முந்தையப் பகலை அதன் கானலை

நினைவில் மிதக்கும் முகங்களின்
நெளியுணர்ச்சிகள் குமிழ் விட்டு வெடிக்கிறது
மொழியற்ற மொழியொன்றின் ஆழத்தில்

கூரையின் உட்சுவர் சுமக்கிறது
கரிய நிழலின் மௌனத்தை

*******
— இளங்கோ

Series Navigationமே 17 விடுதலை வேட்கை தீஎன் ம‌ண‌ல் குவிய‌ல்…