உபாதை

Spread the love

 

ஒலிபெருக்கியில்

ஒப்பாரி சத்தம்

உறக்கத்தைத் துரத்தியது

நேரத்தைக் கூட்டியது

தாகமெடுத்தது

அருகில் சென்ற போதுதான்

தெரிந்தது

கானல் நீரென்று

கதவு திறந்திருந்தது

உள்ளே எட்டிப் பார்த்தேன்

ஈர விறகால் அடுப்பு புகைந்தது

வானத்தின் உச்சியில் பறக்கும்

கழுகின் நிழல்

பூமியில் விழும்

விளக்கிலுள்ள சுடர் தான்

இருளை விரட்டியடிக்கின்றது

மரணப் புதிரை

அவிழ்க்க முயல்பவனை

எச்சரிக்கும் பைசாசங்கள்

கரைகளுக்கிடையே

ஓடும் ஆறு

கடல் போய்ச் சேருமா

நீர்மட்டத்திற்கு மேலே

துள்ளும் மீனை

கவ்விச் செல்லும் பறவை.

Series Navigationபூதளக் கடற்தட்டுகள் புரண்டெழும் பிறழ்ச்சி. பூகோளக் கடற்தளங்கள் நீட்சி, குமரிக் கண்டம். -3சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 42