என்னைச் சுற்றிப் பெண்கள்: நூல் அறிமுகம்

ஆண்கள் சார்ந்த உலகில் ஒரு பெண் பிரதமரும்., முதல்வரும் எவ்வளவு பிரச்சனைகளை., எள்ளல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பெண்களுக்கு சம உரிமை என்று பேசினாலும் கூட நம் இந்தியக் குடும்ப உறவு முறைகளில் வெளிப்படாத சிக்கல்கள் ஏராளம்.

தன் வாழ்வில் எதிர்நீச்சல்கள் போட்டு ஜெயித்த ஒருவர் மற்ற பெண்களுக்கு ஆலோசனை சொல்லி உயர்த்த எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இது. கங்கை புத்தக வெளியீடு. விலை ரூ. 60. ஆசிரியை திருமதி கிரிஜா ராகவன். துணிந்துரையாக அணிந்துரை வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன்.பாச்த்திருவுருவான தன் தாத்தா பாட்டிக்கு இதை அர்ப்பணித்திருக்கிறார் இதன் ஆசிரியை.

பெண்ணை அடித்தல் மட்டுமல்ல. ஒரு செயலை நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்யத் தடுப்பதும் கூட வன்முறைதான்., வேறு வடிவில் அவ்வளவே.

பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவரின் பங்களிப்பைப் பார்த்த பெண்கள் இவரை மகளாய்., சகோதரியாய்., தாயாய் உணர்ந்து நெகிழ அவர்கள் பகிர்ந்த்ததே இந்தக் கட்டுரைத் தொகுப்பாய் வந்திருக்கிறது.

டிப்ரஷனை சரியான நேரத்தில் சரியாகக் கையாண்ட மதுமிதா., தைரியத்தோடு எதிர்த்து நிற்கும் சுநீதா., ஊதாரிக் கணவனைத் திருத்திய அகல்யா., கணவனின் அன்பை ஜெயித்த நிம்மி., வேலை செய்த இடத்திலேயே தாய் தந்தை அறியாமல் திருமணம் செய்து தவிக்கவிட்ட தான்யா., பிள்ளைகளுக்குத்தானே எல்லாம் என்று பாசத்தால் வாரி வழங்கிவிட்டுத் தவித்த சுசீலா., உறவினர்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் தாம்பத்திய இச்சையில் பிரச்சனை பண்ணும் கணவன் குமாரை சமாளிக்கும் விஜயஸ்ரீ., தாய் ஜெயந்தியின் பேச்சுக் கேட்டு மாமியார் வடிவுக்கரசியை மகனுடன் அண்டவிடாமல் செய்த மருமகள் ஈஸ்வரி., தன் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற வேலை இல்லை என அடுத்தடுத்து வேலை மாறும் கோபி., அவரைத் திருத்திய மனைவி குமுதா., வாழ்க்கையில் எதற்கு எதை விட்டுத்தரவேண்டுமென்ற தெளிவோடு இருக்கும் சத்யா., ஒரு ஃப்ரொஃபசராயிருப்பதாலேயே செல்லத்துரை., தன் மனைவியாகிவிட்ட காரணத்தால் மீனாட்சியை எப்போதுமே மட்டம் தட்டிக் கொண்டேயிருத்தல்., காதல் திருமணமான பின்பு ஏற்பட்ட எதிர்பார்ப்புகளால் பிரியும் அனிஷா., லோகு., அழகான மனைவி கௌரியை வீட்டுக்குள்ளேயே அடக்கி உலகம் தெரியவிடாமல் செய்து தன்னுடன் பணிபுரியும் பெண்ணுடன் இருக்கும் செந்தில் ., தன் இயல்பைத்தொலைக்க வைத்தவர்கள் மேல் தீராக் கோபத்திலிருக்கும் சீதா., சாஃப்ட்வேர் வேலையில் டெட்லைனை முடிக்க வேண்டிய இக்கட்டில் தற்கொலைக்கு முயன்ற வஞ்சுளா., கணவனின் சந்தேகத்தால் நிம்மதி இழந்த ஸாகரா., வக்கிரம் பிடித்த கணவனுடன் வாழ விரும்பாத ஷைலஜா., பிரச்சனை ஏதும் இல்லாததாலேயே தன்னை யாரும் கவனிக்கவில்லை என வருந்தும் மாமி., திருமணம் செய்த பிறகும் பிள்ளையின் வாழ்க்கையில் இடையூறு செய்யும் பூரணி., அப்பப்பா..என அசரும் அளவுக்கும் மனிதர்களிடம் எத்தனை பிரச்சனை..??

அது வரையும் சித்திரங்கள் எத்தனை. சில அழகாய் சில அலங்கோலமாய்.. எல்லாவற்றிற்கும் ஒரு ஆலோசனை ., ஒரு முடிவு., வழிகாட்டல் என கிரிஜா ராகவன் கொடுத்திருக்கும் விதம் அற்புதம்.

வாழ்க்கையைப் போராடி ஜெயிக்க வேண்டும். சவால்களைச் சந்தித்து சிந்தித்து ., சாதித்து வாழப் பழக வேண்டும். மன மாற்றங்கள் அவசியம். காலம் சிறந்த ஆசான். கற்றுக் கொடுப்பதில். கண்மூடித்தனமான அன்பு மட்டுமல்ல., தேவையான சமயத்தில் ஆலோசனையும் சொல்ல வேண்டும். தன்மானம்., விட்டுக் கொடுக்காத சுயகௌரவம்., குற்றங்களை மன்னித்தல்., உலக அறிவு., விழிப்புணர்வு., தன்னம்பிக்கை., மனிதாபிமானம்., என கிரிஜா ராகவன் எல்லா வகையிலும் உளவியல் வல்லுனராக சொல்லும் கருத்துக்கள் ரசிக்கத்தக்கன. வாசித்துப் பாருங்கள்.

Series Navigationமூன்று கன்னங்களில், மூன்று விரல்கள்அந்த ஒருவன்…