எல்லாம் தெரிந்தவர்கள்

Spread the love

அதைப் பற்றி அப்பொழுதே எனக்கு

தெரிந்து விட்டிருந்தது

அனைவரும் அதை ஆமோதிக்கத் தொடங்கியிருந்தார்கள்

இடுப்பில் இருக்க மறுத்து நழுவியோடும்

கீழாடையாய் மீண்டும் ஏற்றி

அந்நிகழ்வுகளை பத்திரப்படுத்தினார்கள் மாந்தர்கள்

வல இட உள் வெளி புறமெல்லாம்

உறுப்புகள் நீண்ட ஆக்டோபஷாய்

அதற்கு உருவமிடத் தொடங்கினார்கள் என் சுற்றியவர்கள்

மனனமிட்டுருத்தும் அல்ஜிப்ரா சூத்திரங்களாய்

மீண்டும் மீண்டும் சொல்லிச் சொல்லி

அதனிருத்தல்களை உறுதிசெய்து கொண்டார்கள் பலர்

சிலரின் உயிரோரம் அந்நிகழ்வுகள் இடித்ததாயும்

சிலருக்கு உயிருக்குப் பதிலாய் அதுவே துடித்ததாயும்

ஆளாளுக்கு அளக்கத் தொடங்கியிருந்தார்கள்

என் பங்கிற்கும் எதையாச்சும் எடுத்தோதும்

ஏக பணி எனக்கிருந்ததாய் கொண்டேன்

“அதைப் பற்றி அப்பொழுதே எனக்கு

தெரிந்து விட்டிருந்தது”

அனைவரும் அதை ஆமோதிக்கத் தொடங்கியிருந்தார்கள்.

Series Navigationஎஸ். ராமகிருஷ்ணனுக்கு இயல் விருதுஐம்புல‌ன் அட‌க்க‌ம்