எல்லாருக்கும் பிடித்த எம்ஜியார் -நூல் அறிமுகம்

Spread the love

எம்ஜியார் என்ற மூன்றெழுத்து மந்திரம் நம் தமிழ் சினிமாவையும் அரசியலையும் ஆட்டிப்படைத்த விபரத்தையும் அவரது வாழ்க்கைச் சரிதத்தையும் பால கணேஷ் சுருக்கமாக அழகாக விவரித்துள்ளார்.

பிறப்பிலிருந்து அவர் சந்தித்த சோதனைகள், ஈழத்திலிருந்து கேரளாவுக்குப் புலம் பெயர்ந்தது, மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடகக் கம்பெனியில் நடிக்கத்துவங்கி சினிமாவுக்கு வந்தது, சினிமாவில் பெற்ற வெற்றிகள், எம் ஆர் ராதா சுட்டது, அதன் பின் அரசியல் ப்ரவேசம் , திமுக விலிருந்து விலகி அதிமுக துவங்கியது, மூன்று முறை முதல்வரானது, சத்துணவுத்திட்டம்,நல்லாட்சி வழங்கியது அதன் பின் உடல் நலக்குறைவால் உயிர்துறந்தது வரை சித்தரித்துள்ளார்.

அவரின் மன உறுதி , ஏழாம் எண்ணுக்கும் அவருக்கும் உள்ள சம்பந்தம், வெள்ளைத் தொப்பி அணிந்தது மற்றும் அவர் வாழ்வில் நடந்த சிறு சம்பவங்களையும் விவரித்துள்ளார். அவர் நடித்த 136 சினிமா படங்களின் தொகுப்போடு முடிகிறது நூல்.

முகம் என்று ஒரு படம் நாசர் எடுத்தது. அதில் ஒரு முகம் எப்படி மக்களை ஆட்டிப் படைக்கிறது என்று கூறி இருப்பார். அது போலவே மக்களை இறக்கும் வரையிலும் ஏன் இறப்பிற்குப் பின்னும் ஆட்டிப் படைக்கும் சக்தியாக எம்ஜியாரைச் சொல்லலாம்.

மிக அருமையாகத் தொகுப்பப்பட்ட இந்நூல் எம்ஜியாரைப் பற்றிய கையேடு எனலாம்.

நூல் :- எல்லாருக்கும் பிடித்த எம்ஜியார்

ஆசிரியர் :- பா. கணேஷ்

பதிப்பகம் :- ஸ்ரீ பாலகங்கை பதிப்பகம்

Series Navigation