ஏதோவொன்று

 

 

வருவதையும் போவதையும்

கூற முடியாத

குளிரொன்றைப் போன்ற அது

தென்படாதெனினும் உணரலாம்

எம்மைச் சுற்றி இருப்பதை

 

அது எம்மைத் தூண்டும்

கண்டதையும் காணாதது போல

வாய் பொத்தி, விழிகள் மூடி

ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்க

 

பசியின் போதும்

குருதி பீறிடும் போதும்

அடுத்தவன் செத்துக் கொண்டிருக்கும் போதும்

அமைதியாக

சடலங்களின் மேலால் பாய்ந்து

நாம் வேலைக்குச் செல்லும் வரை

 

அது

என்னது?

எங்கிருந்து வந்தது?

 

– இஸுரு சாமர சோமவீர

தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,

இலங்கை

Series Navigationகதையே கவிதையாய் (8)ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 40) காதலியைக் கவர்ந்த கள்ளன் !