ஐங்குறுப் பாக்கள்

Spread the love

அரசுப் பாடம்

காற்று மிரட்ட

காலத்தின் சமச்சீர் பக்கங்களை

அழுதுகொண்டே

நடுங்கியபடி படிக்குது

மெழுகுவர்த்தி

ஐந்தாம் படை

கடலின் ரகஸ்யங்களை

கடத்திக் கரைசேர்க்குது அலைகள்

தவணை முறையில்.

காற்றின் உபயம்

மூச்சு முட்டி

மூங்கிலில் வழிகிறது

இசை

குனிந்து நிமிர்ந்து

உடற்பயிற்சியில்

தாவரங்கள்

சோம்பித் தி¡¢யும்

மானிடப் பதர்க்கு

காற்றின் உபயத்தில்

கவிதையும் இலவசம்.

மலராது மலர்ந்து

பூக்கவே பூக்காத

செடியில்

சோகம் பூத்திருக்கு.

சாகாதல்

பூத்துப் போயிருக்குமென

ஞாபகம் தோண்டினால்

இன்னும் நெருப்பு.

_ ரமணி,

Series Navigationகுருதி சுவைக்கும் வாழ்வு எனக்குறியது.ஐசிஐசிஐ வங்கியின் மென்பொருள் பாதுகாப்பானதா…?