ஒஸ்தி

குழந்தை நட்சத்திரங்களாக இருப்பவர்கள் வளர்ந்து பெரியவர்களாக ஆகும்போது அவர்கள் எல்லோருமே பிரபல நடிகர்களாகவோ நடிகைகளாகவோ வருவதில்லை. விதி விலக்காக சிலர் வருவதுண்டு. அதற்கும் சில திரையுலக ஞானத்தந்தைகள் அவசியம். சிரிதேவீ அழகான குழந்தையாக இருந்தார். வளர்ந்த பின் குடைமிளகாய் மூக்கு, ஒரு 3டி எ•பெக்டுடன் அவரை பின்னுக்குத் தள்ளியது. பாலச்சந்தர் தத்தெடுத்தபின் தான் ஏற்றமே. மீனாவுக்கு ஒரு ரஜினிகாந்த், ஷாலினிக்கு ஒரு மணிரத்னம். ஆண்களைப் பொறுத்த வரை கமலஹாசனுக்கும் ஒரு பாலச்சந்தர் தேவைப்பட்டார். சமகால நடிகர்களான தசரதன், பிரபாகர் காணாமல் போய் விட்டார்கள். சூர்யா, விஜய், அஜீத், தனுஷ் போன்றோர் குழந்தைகளாக சினிமாவில் இல்லை. அவர்களது தந்தைமார்கள் இருந்தார்கள்.. ஆனால் அவர்களெல்லாம் சராசரிதான். 25 படங்கள் வரையில் அவர்களும் சிரமப்பட்டவர்கள்தான். ஆனால் நம்ம சிம்பு இருக்கிறாரே அவருக்கு மழலை பருவத்திலேயே லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று பட்டம். சூப்பர் ஸ்டார் என்ன கட்டை விரலை சூப்பிக்கொண்டா இருக்கிறார் என்றொரு கேள்வி மக்கள் மனதில் அப்போதே எழுந்தது.

இருபது வயதிலேயே கதாநாயகன், 22 வயதிலேயே இயக்குனர் என்று வயதுக்கு மீறின, கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனமான பில்ட் அப்.. அதுவே அவர் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தது. இன்று வரையில் அதை அவர் உணரவும் இல்லை, மாற்றிக் கொள்ளவும் இல்லை என்பது தான் உச்சபட்ச சோகம்.

ஒஸ்தியில் அதுவே அவர் சறுக்கலுக்கு அடி கோலுகிறது. மேக்கோ இமேஜுக்கான உடலும் இல்லை.. கூடவே காமெடி பண்ணுகிறேன் என்கிற கோணங்கித்தனம் வேறு. இதையே விஷால் செய்து கொண்டிருந்தார். பாலாவுக்கு பிடித்துப்போய் அசமஞ்சமாகவே மாற்றி விட்டார். அடுத்த பாலா படத்தில் சிம்புவுக்கு சான்ஸ் வரலாம். பெஸ்ட் ஆ•ப் லக்.

இந்தப் படத்துக்கு எதற்கு டபாங். நான் இந்திப்படம் பார்க்கவில்லை. எதையும் விட்டு வைக்கவில்லை சிம்பு. கொஞ்சம் ரஜனி, கொஞ்சம் அஜீத், கொஞ்சம் தனுஷ், கொஞ்சம் விஜய் என்று கலவையாக ஒரு நடிப்பு. எதுவும் எடுபடவில்லை. நடிக்காமல் வந்து போன வி.தா.வருவாயா எவ்வளவு நன்றாக இருந்தது. சிம்பு நல்ல நடிகர் என்பதில் எனக்கு ஐயமேதுமில்லை. ஆனால் ராங் எக்ஸ்பிரஷன்ஸ் இன் ரைட் சிச்சுவேஷன்ஸ். என்ன ஒரு கேலிக் கூத்து.

வழக்கமான ரவுடி போலீஸ், சூப்பர் வில்லன். கூடவே வரும் காமெடி போலீஸ் பட்டாளம். ஊறுகாயாய் ரிச்சா கங்கோபாத்யா { கங்கைக் கரை புரோகிதர் என்று அர்த்தமாம்.. தர்ப்பைக் கட்டு காசுக்குக் கூட தேறவில்லை நடிப்பு ), சோனு சூட் ( நெல்லை தமிழில் வில்லன் பேசுவது செம காமெடி ), நாசர், சந்தானம் ஆச்சர்யமாக ஜித்தன் ரமேஷ் ( நன்றாக நடித்திருக்கும் ஒரே நடிகர் ). நல்ல வேளை ரிச்சாவுக்கு மயக்கம் என்ன முதலில் வந்து விட்டது. இல்லையென்றால் பெட்டி படுக்கையுடன் அடுத்த ரயிலில் ( அன்ரிஸர்வ்ட் ) அனுப்பி இருப்பார்கள். தினகரன் கேள்வி பதிலில் மீனாவுக்கு அப்புறம் கண்ணழகி என்று ரிச்சாவை போடுகிறார்கள். க்ளோஸப்பில் டப்சா அதாவது அவன் இவன் விஷால்.. கண்ணழகியாம்.
விஷ¤வல் காமெடி கொஞ்சம் ரசிக்க வைத்தாலும் வெர்பல் காமெடி சுளிக்க வைக்கிறது. அதுவும் பீர்பாட்டிலை வேட்டிக்குள் சொருகுவதும், பிஸ்டலை பேண்டுக்கு ஒளித்து கருப்பண்ண சாமிக்கு வேண்டுவதும், தாங்கலைடா சாமி.

எல்லாமே குத்துப்பாட்டு. ஒரு மெலோடி கூட இல்லை. இலக்கிய நயம்.. அப்டீன்னா என்னா மாமு? பளிச் காமெரா, அபார ஸ்டண்ட், எல்லா காட்சிகளிலும் கிண்டல் என்று சொல்ல ஏதோ இருக்கிறது. அதையும் தாண்டி படம் பட்டையைக் கிளப்புமா?

இது போக உச்ச கட்ட விளம்பரமாக சிம்புவின் 6 பேக். முகத்தையே காட்டவில்லை.. யாருடைய உடலோ? சோனூ சூட் நேர்மையாக மார்பைக் காட்டுகிறார். சிம்பு? ம்ஹ¥ம். அது சரி, வச்சுக்கிட்டா வஞ்சனை பண்றோம் .

தம்பிக்கான கல்யாணத்தில் அண்ணன் காதலியுடன் வந்து தாலி கட்டிவிடுகிறார். ஜோடியே வேறு. இதில் மானம் மரியாதை எங்கே போகிறது? முகூர்த்த நேரம் முடிவதற்குள் அடுத்த ஜோடி கல்யாணம் முடிக்க வேண்டியது தானே? என்ன கொடுமை சார் இது?

கடைசியில் சிம்பு சொல்கிறார்: ‘ ஒரு வாசிப்பு, டபுள் வசூல் ‘ படம் வெற்றியாம்.

நமக்குத் தோன்றுகிறது : ‘ ஒரு வாசிப்பு! டப்பு டமால்! ‘

0

Series Navigationநிகழ்வுப்பதிவு : இலக்கியச் சிந்தனைக் கூட்டம்மழையின் முகம்