Posted in

கனவுகளின் பாதைகள்

This entry is part 15 of 39 in the series 4 டிசம்பர் 2011

மிதமிஞ்சி உண்டுவிட்டு
அடங்காத பசியில்
தன்னையும் சேர்த்தே
உண்டுவிடுகிறது அந்தக்
கரிய துளை…

உண்ட மயக்கத்தில்
கொண்ட உறக்கத்தில்
காணும் கனவுகளிலெல்லாம்
முக்காலமும் உணர்கிறது அது…

அக்கனவுகளுக்குள் பாதையிட‌
காத்திருக்கிறது சிலிக்கான்
சமூகம்…

Series Navigationபுதிதாய்ப் பிறத்தல்!சொக்கப்பனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *