கலித்தொகையில் தொல்காப்பிய மெய்ப்பாடுகள்

This entry is part 6 of 27 in the series 29 செப்டம்பர் 2013

ப.சுதா,                     முனைவர் பட்ட ஆய்வாளர்,        இலக்கியத்துறை    ,                தமிழ்ப் பல்கலைக்கழகம்,        தஞ்சாவ+ர்-10.

மனிதர்களுக்கு இலக்கணம் கூறும்நூல் தொல்காப்பியம். மனிதர்களின் அக வாழ்க்கையை கூறும் நூல் கலித்தொகை. கலித்தொகையில் தொல்காப்பியர் கூறும் எண்வகை மெய்ப்பாடுகள் எவ்வாறு இடம்பெற்றுள்ளதென்பதை விளக்குவதே இக்கட்டுரை.
முடியுடைவேந்தரும் குறுநில மன்னரும் முதலாமனார் நாடக மகளிர் ஆடலும் பாடலும் கண்டும் கேட்டும் காமம் நுகரும் விளையாட்டினுள் தோன்றிய முப்பத்திரண்டு பொருளும் நாடக நூலாசிரியருக்குப் பொருட்பகுதி பதினாறாகி அடங்கும். அதில் அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாக வருவன எண்வகை மெய்ப்பாடு ஆகும். அவை,
நகையே அழுகை இளிவரல் மருட்கை                                     அச்சம் பெருமிதம்  வெகுளி உவகையென்று                                அப்பால் எட்டே மெய்ப்பாடென்ப         (தொல்.மெய்.247)
என்ற நூற்பாவின் மூலம் அறியலாம்.
நகை
நகை என்பது சிரிப்பு, எள்ளல், இளமை, பேதைமை, மடமை என்ற நான்கின்கண் இம்மெய்ப்பாடு தோன்றும்.  எள்ளல் என்பது இகழ்ச்சிக் குறிப்பு.  தான் பிறரை எள்ளி நகுதலும் பிறரால் எள்ளப்பட்ட வழிதான் நகுதலும் ஆகும்.  பேதமை என்பது தன் மடமையால் பிறர் நகுதலும் பிறர் மடமையால் தான் நகுதலும் ஆகும்.  இவற்றில் எள்ளல் குறிப்பைக் காட்டும் கலித்தொகைப் பாடல்,                    இனிப் புணர்ந்த எழில் நல்லார் இலங்கு எயிறு உறாஅலின்                        நனிச்சிவந்த வடுக் காட்டு நாண் இன்றிவரின்        (கலித்.67)
என்னும் பாடல்வரிகளில் தலைவனை இனிதாகக் கூடிய அழகினை உடைய பரத்தையரின் பற்கள் பதிந்த சிவந்த வடுக்களைக் காட்டி நாணமின்றியே வருவான் எனத் தலைவனின் தீய ஒழுக்கத்தை எள்ளி நகையாடுகிறாள்.

அழுகை
சோகத்தால் வரும் உணர்வு- இவ்வழுகை.  இளிவு, இழவு, அசைவு, வறுமை என்ற நான்கின் கண் தோன்றும். பிறரால் இகழப்பட்டு எளியவனாதல், இழவு என்பது, இளிவு என்பது தாய் தந்தை சுற்றம் இன்பம் பயக்கும் நுகர்ச்சியை இழத்தல்.  அசைவு என்பது பண்டைநிலை கெட்டுச் சீரழிந்து வருந்துதல்.  வறுமை என்பது நுகர்வன இல்லா வறுமை நிலை. தன் கண்ணும் பிறர் கண்ணும் தோன்றும். இவற்றில் அசைவு குறித்த கலித்தொகைப் பாடல்
நனவு எனப் புல்லுங்கால், காணாளாய் கண்டது                                கனவு என உணர்ந்து பின் கையற்று, கலங்குமே        (கலி.126)
எனும் பாடல் வரிகளில் தலைவி, கனவில் தலைவனைத் தழுவிக் கிடப்பதாக நினைத்தால் கனவு தனிந்தபொழுது தலைவனைக் காணாதவளாய் செயலற்று அசைவு காரணமாக அழுகை பிறக்கிறது.
இளிவரல்
இழித்தல் உணர்வு என்றும் அருவருப்பு என்றும் வழங்கப்படும் மூப்பு, பிணி, வருத்தம். மென்மை என்ற பொருளின்கண் மெய்ப்பாடுகள் தோன்றும். மூப்பு என்பது வயது முதிர்ச்சி. பிணி என்பது நோய். வருத்தம் என்பது முயற்சியின்மை. மென்மை என்பது வலிமையின்மை இவற்றில் பிணி என்னும் கலித்தொகைப்பாடல்,
தளிர் அன்ன எழில்மேனி தகைவாட நோய் செய்தான்        (கலி.40)
எனும் வரியில் தலைவி தனக்கு நோய் செய்த தலைவனைத் தாழ்ந்த குளைகளிலே விளங்கும் தளிரை ஒத்த அழகிய என் மேனியின் அழகு கெடும்படி அவன் நோய் செய்தான் என நோய் காரணமாக இளிவரல் புலப்படுகிறது.
மருட்கை
இது வியப்பு எனினும் அற்புதம் எனினும் ஒக்கும். புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம் ஆகியவை மருட்க என்னும் பொருளின் கண்தோன்றும். புதுமை என்பது புதிதாய்த் தோன்றுவது. பெருமை என்பது பெருமைக்குரியது.  சிறுமை என்பது சிறுமைக்குரியது.  ஆக்கம் என்பது ஒன்று ஒன்றாய்த் திரிவது.  இவற்றில் புதுமைக் குறிக்கும் கலித்தொகை.
அன்பு அறச்சூழாதே, ஆற்றிடை நும்மொடு                                துன்பம் துணையாக நாடின்                (கலி.6)
என்னும் பாடல் வரிகளில் தலைவி தலைவனை வினைக் காரணமாகப் பிரியும் தலைவனை ஆற்றிடை துன்பத்திற்கு எம்மையும் உடன்கொண்டு செல்க எனத் தலைவி குறிப்பிடுவது புதுமையாக உள்ளது.

அச்சம்
ஒன்றைக் கண்டு பயப்படுவது. அணங்கு, விலங்கு, கள்வர், இறை என்ற பொருளில் அச்சம் தோன்றும்.  அணங்கு என்பது பேய் பூதம், காலன் போன்றவை விலங்கு என்பது புலி, சிங்கம், கரடி முதலானவை. கள்வர்களைக் கண்டு அஞ்சுவது.  இறை என்பது தண்டனைகளைக் கொடுக்கும் அதிகாரம் படைப்பது இவற்றில் விலங்கு குறித்த கலித்தொகைப் பாடல்.
கொள இடம் கொளவிடா நிறுத்தன ஏறு                                    கொள்வாரைக் கொள்வாரைக் கோட்டுவாய்ச் சாக்குத்தி                            கொள்வார்ப் பெறாஅக் குரூஉச் செகில் காணிகா                                செயிரின் குறை நாளால் பின்சென்று சாடி                                உயிர் உண்ணும் போன்ம்                (கலி.105)
எனும் பாடல் வரிகளில் எருது விடும் தொழுவில் தழுவுவாரைக் கொம்பினால் சாகும்படிக் குத்தித் தழுவுவார்க்கும் இடம் கொடாமல் நிற்கும்.  சிவந்த ஏறு, வாழ்நாள் குறைகின்ற காலத்தே உயிரை உண்ணும் கூற்றுவனைப் போன்றிருந்தது எனத் தலைவிக்கு விலங்கு காரணமாக அச்சவுணர்வு தோன்றும்.
பெருமிதம்
வீறு தரும் செருக்கு.  இம்மெய்;ப்பாடு கல்வி, தறுக்கண், புகழ்மை, கொடை என்ற நான்கின்கண் தோன்றும். கல்வி என்பது சொல் வல்லார் முன் வல்லவனாகி வெல்லல். தறுக்கண்மை என்பது அஞ்சத்தக்கன விடத்து அஞ்சாமை. புகழ்மை என்பது புகழ்;மிகும் செயல் மேலானதென்று சான்றோர் ஒருவரை புகழ்தல்.  கொடை என்பது மேம்பட்ட கொடையால் வரும் பெருமிதம். இவற்றில்
சொல்லின் மறாதிவாள் மன்னோ இவள்?                                    செறாஅது ஈதல் இரந்தார்க்கு ஒன்று            (கலி.61)
என்னும் பாடல் வரிகள் இரந்தவர்க்குத் தேவையான பொருளைக் கொடுப்பர் நீ வேண்டிய பொருள் யாது எனத்தோழி கேட்பதால் தலைவியின் பெற்றோரது கொடை பெருமிதம் உணர்வு வெளிப்படுகிறது.
வெகுளி
சினம் என்னும் மெய்;;ப்பாடு உறுப்பறை, குடிகோள், அலை, கொலை எனும் நான்கின் கண் தோன்றும் தாரம் சுற்றம் குடிப்பிறப்பு முதலானவற்றின் கண்கேடு சூழ்தல்.  அலை என்பது தன் சினத்தால் பெற்ற வெற்றியுடன் வந்தும்  அவ்வலைப+ண்டதனை நினைந்து சினங்கொள்ளுதல். கொலை என்பது அறிவு, புகழ் முதலானவற்றைக் கொன்றுரைத்தல், இவற்றில் உறுப்பறை குறித்த கலித்தொகைப் பாடல்
முறம்செவி மறைப் பாய்பு முரண்செய்த புலிசெற்று         (கலி.52)
என்னும் பாடல்வரி மூலம் யானை முறம் போன்ற செவியை மறைப்பாகக் கொண்டு பாய்ந்து புலியைச் சினந்து தாக்கியது என்பதால் உறுப்பறை மெய்ப்பாடு வெகுளியில் வெளிப்பட்டது.

உவகை
செல்வம், புலன், புணர்வு, விளையாட்டு என்ற நான்கின்கண் இம்மெய்ப்பாடு தோன்றும்.  செல்வம் என்பது நுகர்ச்சி, புலன் என்பது ஐம்புலன்களால் பெறும் இன்பம். புணர்வு என்பது காமப்புணர்ச்சி. விளையாட்டு என்பது ஆறு சோலைகளில் புகுந்து விளையாடுதல். இவற்றில்,
மெய்ம்மலி உவகையன் புகுந்தான் புணர்ந்து ஆரா                            மென்முலை ஆகம் கவின் பெற                                        செம்மலை ஆகிய மலை கிழவோனே            (கலி.40)
எனும் பாடல் வரிகளில் முயங்கியமையாத மெல்லிய முலையினை உடைய அகம் அழகுபெறுமாறு செய்ய நீ தலைமையை உடைமையாதற் பொருட்டு நம்மிடத்து வரைவோடு புகுந்தான் என்பதில் தலைவிக்குப் புணர்ச்சி உவகை மெய்ப்பாடு தோன்றுவதை அறியமுடிகிறது.
இதுவரை தொல்காப்பியர் கூறும் எண்வகை மெய்ப்பாடுகள் கலித்தொகையில் எவ்வாறு இடம்பெற்றுள்ளது என்பதை அறிந்தோம். தொல்காப்பிய     நெறிகள் கலித்தொகையின் வரிகள் தமிழர்களுக்கு மட்டுமல்ல உலக சமுதாயத்திற்கே வழிகாட்டி என்றும் புதுமைப+க்கும் பொன்னேடுகள் என்றும் போற்றத்தக்கவை.
ஆய்வுக்கு உதவிய நூல்கள்
இளம்ப+ரணார் உரை     (2010) – சாரதா பதிப்பகம், சென்னை-14.
புலியூர்க் கேசிகன்     (2005) – கலித்தொகை தெளிவுரை, பாரிநிலையம், சென்னை-01
பாக்கியமேரி         (2011) – வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, சென்னை-410.
டாக்டர் சி.இலக்குவனார் (2011) – ப+ம்புகார் பதிப்பகம், சென்னை-108.

Series Navigationகு சின்னப்ப பாரதி அறக்கட்டளைஉயிர்த் தீண்டல்
author

ப.சுதா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *