காதல் கொடை

—————வே.பிச்சுமணி

என் காதலை
உன் பாதங்களில்
சமர்ப்பிக்கிறேன்
ஏற்றுகொள்வதும்
ஏற்றுக்கொளளாததும்
உன் இதயத்தின் முடிவில்
மிஞ்சினால்
மிதியடியாக பயன்படுத்து
பிஞ்சி போனால்
உன்னை சீண்டுபவரை சாத்தும்
உன்பாதத்துடன் பழகி பழகி
பரதன் மதிக்கும்
இராமனின் பாதஅணிகளாக மாறி
உன் மனது ஆளும் நேரம்
மழை வரும்
சிரமேற்கொண்டால்
என் காதல் (கொ) குடையாகும்

Series Navigationஅவன் இவன் அவள் அது…!அன்பின் அரவம்