காம்பிங் vs இயேசு கிறிஸ்து

செப்டம்பர் 7, 1994 அன்று, ஹரோல்ட் கேம்பிங் அவர்களும் அவரது ஆதரவாளர்களும் சர்ச்சுக்கு போகும்போது உடுத்து சிறந்த ஞாயிற்றுக்கிழமை உடைகளுடன், விவிலியத்தை திறந்து வைத்துகொண்டு வான் நோக்கி பார்த்து இயேசுகிறிஸ்துவின் வருகைக்காக காத்திருந்தார்கள்.செம்டம்பர் 8 ஆம் தேதி, ரப்சர் Rapture என்று கிறிஸ்துவர்கள் எதிர்பார்க்கும் எந்த வித நிகழ்வும் இல்லாமல் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் எப்போதும் போல சூரியன் உதித்தது. ஹரோல்ட் காம்பிங் தனது கணக்கில் ஏதோ ஒரு தவறை கண்டுபிடித்தார். ரப்சர் ஏற்படும் நாளை (இயேசு திரும்பி வரும் நாளை) மே 21, 2011க்கு மாற்றி அமைத்தார்; இன்னொரு நாளும் வந்தது. அதுவும் எந்த விதமான வித்தியாசமும் இல்லாமல் கடந்து சென்றது.

கேம்பிங் அவர்களது கணிப்பு பற்றி ஊடகங்களில் செய்திகள் வர ஆரம்பித்து பெரிய புயலை கிளப்பிகொண்டிருந்த போது, பல செய்திகளில் பின்னூட்டம் இடுபவர்களில், கேம்பிங் அவர்களை பின் தொடர்பவர்களை கிண்டல் செய்பவர்களாகவும், அவர்களை கண்டிப்பவர்களாகவும் பெரும்பாலும் கிறிஸ்துவர்களாகவே இருக்கக்கண்டேன். நான் படித்த ஒரு கட்டுரையில், கேம்பிங் அவர்கலது பேமிலி ரேடியோவை 1994இல் அவர் தோல்வியடைந்த கணிப்பை வெளியிட்டதிலிருந்து பின் தொடரும் நபரை பற்றியும் குறிப்பிட்டிருந்தது. ஒரு சிலர் சிரித்தாலும், ஒரு சிலர் கண்களை உருட்டினாலும், ஒரு சிலர் திட்டினாலும், ஒருவரது தீர்க்கதரிசனம் தோல்வியடைந்த பின்னாலும் ஏன் அவரை பின்பற்றுகிறார்கள் என்று இந்த கிறிஸ்துவ சமூகம் புரிந்துகொள்ளமுடியாமல் திணறியது.

தனிப்பட்ட முறையில், திரும்பத்திரும்ப தனது தலைமுறையை சேர்ந்தவர்கள், தன் முன்னால் நிற்கும் அப்போஸ்தலர்கள் உயிருடன் இருந்து, தான் இரண்டாவதாக திரும்பவும் வருவதை காண்பார்கள் என்று இயேசு சொல்வதை பற்றிய பைபிள் வசனங்களை படித்த போதே என்னுடைய கிறிஸ்துவ மத நம்பிக்கை உடைய ஆரம்பித்தது. என்னதான் தலைகீழாக திருப்பி அந்த வசனங்களை கிறிஸ்துவ பிரச்சாரகர்கள் விளக்க முயன்றாலும், அவரது வசனங்கள் என்ன சொல்கின்றனவோ அதை தவிர அதற்கு எதிர்ப்பதமான விளக்கத்தை கொடுத்து என்னை ஏமாற்றமுடியாது. பைபிளின் கீழ்த்தரமான ஒழுக்கநிலைப்பாடுகளும், அதன் தொடர்ந்த தவறுகளும் தனியாக இருக்க, பைபிளே இயேசு கிறிஸ்துவை ஒரு பொய் தீர்க்கதரிசியாக சிறப்பாக காட்டுகிறது. ஆமாம், ஒரு ஆயிரம் வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவர் பேசிய அப்போஸ்தலர்களும் அவரது தலைமுறையும் போய் விட்டன. அதன் பின்னால் வந்த பல தலைமுறைகளும் இயேசுவின் இரண்டாம் வருகை இல்லாமலேயே வந்து சென்றுவிட்டன. இருப்பினும், கேம்பிங் அவர்களை 1994இல் தோல்வியடைந்த தீர்க்கதரிசனத்தின் பின்னாலும் பின்பற்றுபவர்களைப் போல, பல கோடிக்கணக்கான கிறிஸ்துவர்கள் இயேசுவின் தெளிவாகவே தவறான தீர்க்கதரிசனத்தை புறம் தள்ளிவிட்டு தனக்கு வசதியானதை வைத்துகொண்டிருக்கிறார்கள்.

கேம்பிங் அவர்களது தோல்வியடைந்த மே 21 இறுதி தீர்ப்பு நாள் தீர்க்கதரிசனத்துக்கு ஆதாரமாக அவர் காட்டுவது பைபிளின் காரண்டியே. மே 22ஆம் தேதி நானும் என் நண்பரும் யூட்யூபில் மே 21ஆம் தேதி நிச்சயமாக இயேசு இரண்டாவதாக வருகிறார் என்று உறுதியாக கூறுவதை பார்த்தோம். இவ்வாறு கூறும் இந்த யூட்யூப் விசுவாசி நிச்சயமாக அக்டோபர் தாண்டியும் கேம்பிங் அவர்களை பின் தொடர்பவராகவே இருப்பார் என்று நம்புகிறேன். இது பற்றி எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இவர் தனது நேரம் பணம் ஆகியவற்றை செலவு செய்திருப்பது மட்டுமல்ல, தனது வேலையையும் விட்டுவிடு, குடும்பம் வீட்டையும் விட்டுவிட்டு இந்த தீர்க்கதரிசனத்துக்காக தனது எதிர்கால வாழ்க்கையையே தியாகம் செய்திருக்கக்கூடும். பலர் மே 21ஆம் தேதி மிகத்தெளிவாக பைபிளில் எழுதப்பட்டிருக்கிறது என்று முழுமையாக நம்பியிருப்பார்கள். கேம்பிங் அவர்களை விட்டுக்கொடுப்பது என்பது தங்களது சொந்த நம்பிக்கையையே விட்டுக்கொடுப்பது போன்றது. பெரும்பாலானவர்கள் அதற்கு தயாராக இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. இதே காரணத்துக்காகத்தான் பெரும்பாலான கிறிஸ்துவர்கள் இயேசு கிறிஸ்து பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லியிருந்தாலும், அதனை உதாசீனம் செய்துவிடுகிறார்கள். பைபிள் பொய் என்றால் தங்களது முழு நம்பிக்கையுமே பொய்.

இது போன்ற ஒருவனாக நான் இருந்ததால், இது ஒப்புக்கொள்ள மிக மிக கடினமான ஒன்று என்பதை அறிவேன். திறந்து வைத்த பைபிளின் முன்னே, கண்ணீர் அந்த பக்கங்களில் சிதற, இயேசுவின் வார்த்தைகளில் ஒரு ஆழமான கருத்தை கண்டுகொள்ள நான் துடித்தேன். பரிசுத்த ஆவி என்னை வழிநடத்தி அதன் உண்மையான கருத்தை அறிந்துகொள்ள வைக்க பிரார்த்தித்தேன். புத்தகங்களையும் ஏராளமான இணையப்பக்கங்களையும் தேடி அவற்றுக்கு பதில் தேடினேன். பலருக்கு எழுதினேன். ஆனால் யாருமே எனக்கு திருப்திகரமான பதில் அளிக்கவில்லை. கிறிஸ்துவம் உண்மை அல்ல. இறுதியாக கிறிஸ்துவத்தை நான் விட்டேன். ஆனால் பல கிறிஸ்துவர்களால் அது முடியாது என்பதை அறிவேன்.

ஆகவே, 1994இன் தோல்வியடைந்த தீர்க்கதரிசனத்தின் பிறகும் பலர் கேம்பிங் அவர்களின் பின்னே பின் தொடர்வார்கள் என்பதை மக்கள், அதுவும் கிறிஸ்துவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அக்டோபர் 21க்கு பிறகும் இன்னும் பலர் அவர்கள் பின் தொடர்பவர்களை கிறிஸ்துவர்கள் நிச்சயம் புரிந்துகொள்ளவேண்டும். ஏனெனில் அவர்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசமில்லை.

ஆங்கில இணையப்பக்கம்
http://new.exchristian.net/2011/06/camping-vs-christ.html#disqus_thread
இதில் சில பின்னூட்டங்களும் இருக்கின்றன
பின் குறிப்புகள்
1) ஹரோல்ட் காம்பிங்
http://en.wikipedia.org/wiki/Harold_Camping
ஹரோல்ட் காம்பிங் என்ற கிறிஸ்துவ மத பிரச்சாரகர், இயேசு எப்போது திரும்ப வருகிறார் என்பதை பற்றி பைபிள் சொல்வதை வைத்து மே 21 1988 என்று முதலில் சொன்னார். அது நடக்கவில்லை என்றதும், செப்டம்பர் 7, 1994 என்று கணக்கை சரி செய்தார். அப்போது நடக்கவில்லை. பிறகு மே 21 2011 தான் இயேசு திரும்ப வருகிறார் என்று உறுதியாக பிரச்சாரம் செய்தார். அதுவும் நடக்கவில்லை என்றதும், இப்போது உறுதியாக அக்டோபர் 21ஆம் தேதி 2011இல் பிரபஞ்சமே முழுமையாக அழிந்துவிடும் என்று சொல்லி வருகிறார். இவருக்கு இப்போது வயது 90. அமெரிக்காவில் சுமார் 150 ரேடியோ நிலையங்களை நடத்தும் இவர் இப்படியான பிரச்சாரத்தின் மூலம் பெரும் பணக்காரராக ஆகியிருக்கிறார்.

2) மாற்கு 13 அதிகாரம்
23. நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள்; இதோ, எல்லாவற்றையும் முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.
24. அந்நாட்களிலே, அந்த உபத்திரவத்திற்குப்பின்பு, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக்கொடாதிருக்கும்;
25. வானத்தின் நட்சத்திரங்கள் விழும், வானங்களிலுள்ள சத்துவங்களும் அசைக்கப்படும்.
26. அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.
27. அப்பொழுது அவர் தம்முடைய தூதரை அனுப்பி, தாம் தெரிந்துகொண்டவர்களை பூமியின் கடைமுனை முதற்கொண்டு வானத்தின் கடைமுனைமட்டுமுள்ள நாலுதிசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்.
28. அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்.
29. அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்.
30. இவைகளெல்லாம் சம்பவிக்கும் முன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 24
29. அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக்கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்.

30. அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்.
31. வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள்.
32. அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்த காலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்.
33. அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்.
34. இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

லூக்கா 21
26. வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்; ஆதலால் பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்.
27. அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.
28. இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்து பார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள் என்றார்.
29. அன்றியும் அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: அத்திமரத்தையும் மற்றெல்லா மரங்களையும் பாருங்கள்.
30. அவைகள் தளிர்க்கிறதை நீங்கள் காணும்போது வசந்தகாலம் சமீபமாயிற்றென்று அறிகிறீர்கள்.
31. அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள்.
32. இவையெல்லாம் சம்பவிக்கும் முன் இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மொழிபெயர்ப்பு:

மல்லித்தம்பி

 

Series Navigation