கார்பொரேட் கூட்டங்களின் கடைசி நிமிடங்கள்

Spread the love

ஐயன்மீர்!

தொடக்கத்தில்

திரையில் காட்டப்பட்ட

பாதுகாப்பு அட்டைகள் பற்றி

எந்த ஆட்சேபமும் இல்லை எங்களுக்கு.

அடுத்து முன்வைக்கப்பட்ட

வரவு செலவு கணக்கு பற்றியோ

எதிர்கால திட்டங்கள் குறித்தோ

நாங்கள் சொல்ல விரும்புவதும்

ஏதுமில்லை.

விடைபெறுவதற்கு முன்

விருந்தோம்பல் சகிதம்

திறக்கப்பட்ட மதுப் போத்தல்களைப் பற்றியே

எங்களின் இந்த தாழ்ந்த விண்ணப்பம்.

எங்களைப் போலவே உங்களின்

வாகனங்களின் வருகைக்கும்

காத்திருக்கும்

எதிர்பார்ப்பின் கண்களுக்கு

என்னவிதமான உத்திரவாதத்தை

தரப் போகிறோம்

நாம்.

Series Navigationபுகுஷிமா விபத்துக்குப் பிறகு அணுமின் நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றி உலக நாடுகளின் தீர்மானங்கள் – 2சிற்றேடு – ஓர் அறிமுகம்