காலம் கடந்தவைபின்பு ஒரு நாளில்
உன்னிடம்
கூடுத்து விடலாம் என்று
முன்பு ஒரு நாளில்
உன்னக்காக வாங்கப்பட்ட
பரிசு ஒன்றை
காலம் கடந்து
காத்து வருகிறது
என் பெட்டகத்தின்
உள் அறை….

பின்பு ஒரு நாளில்
சொல்லி விடலாம் என்று
முன்பு ஒரு நாளில்
தோன்றிய காதலை
காலம் கடந்து
காத்து வருகிறது
என் இதயம் ….

ச. மணி ராமலிங்கம் (smrngl@gmail.com)

Series Navigationஒரு கடலோடியின் வாழ்வுஎனது இலக்கிய அனுபவங்கள் – 16 எழுத்தாளர் சந்திப்பு – 3 (அசோகமித்திரன்)