கிரிக்கெட் வீரன் மரணமும் , மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்த எழுத்தாளர்களும்

Spread the love

   கிரிக்கெட் வீரர் ரஜிந்தர் கோயல் இம்மாதம் காலமானார். இந்த செய்தி இலக்கியம் , சமூகம் என பல விஷயங்கள் குறித்தும் யோசிக்க வைத்தது.. ஏன் ? பார்க்கலாம்.

   இவர் டெல்லி மற்றும் ஹரியானா அணிகளுக்காக விளையாடியவர்.  மிகச்சிறந்த சுழற் பந்து வீச்சாளர். ரஞ்சிப்போட்டிகளில் அதிகபட்ச விக்கெட்டுகள் எடுத்த சாதனை இவர் வசமே உள்ளது

கவாஸ்கர் தன் நூலில் தன்னை கவர்ந்த வீரர்கள் வரிசையில் இவரை சிறப்பாக குறிப்பிட்டுள்ளார்

கிரிக்கெட் உலகம் கண்ட சிறந்த வீரர்களில் இவரும் ஒருவர் என் பிஷன் சிங் பேடி குறிப்பிட்டுள்ளார்..இன்றைய வீரர்கள் பலரும் அவர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்

அவர் நேர்மையான விளையாட்டு வீரர். 1981ல் ஒரு ரஞ்சி,  போட்டியில் , தமிழகத்துக்கு எதிராக அவரது ஹரியானா அணி ஆடியது. 

இன்னும் நான்கு விக்கட்டுகள் எடுத்தால் ஹரியானா வென்று அடுத்த சுற்றுக்கு போய்விடலாம் என்ற சூழல்.

அப்போது பேட்ஸ்மேன் அடித்த பந்தை டை அடித்து அபாரமாக பிடித்தார் இவர். பேட்ஸ்மேன் தான் அவுட் என கருதி வெள்யேறலானார்

இவர் அம்பெயரிடம் சென்று அது அவுட் இல்லை என்றும் தான் பிடித்தது சரியான கேட்ச் இல்லை என்றும் தெரிவிக்கவே அது நாட் அவுட் என் அறிவிக்கப்பட்டது.. விளைவாக , அவ்ர் அணி தோற்றது

    இவ்வளவு நல்லவரும் சாதனையாளருமான இவர் இந்திய அணியில் ஒரு போதும் இடம்பெறவில்லை என்பதுதான் இதில் இருக்கும் கொடுமை

   தேர்வாளர்களுக்கும் அணித்தலைவர்களுக்கும் ஏனோ இவரை பிடிக்கவில்லை.. தான் விளையாட அஞ்சும் பவுலர் என கவாஸ்கரே குறிப்பிட்ட சிறந்த வீரர் என்றாலும் அணியில் இடம், கிடைக்கவில்லை

அணி அரசியல் , பாரபட்ச அணுகுமுறைகள் என இதற்கு ஆயிரம் காரணங்கள்.

ஒரு குறிப்பிட்ட சிலருக்கு பிடிக்காவிட்டால் , எப்பேற்பட்ட மேதை என்றாலும் பெரிய நிலைக்கு வர முடியாது என்பது எப்பேற்பட்ட சோகம்

இவரைபோன்ற எத்தனை எத்தனை சாதனையாளர்கள் வெளிச்சத்துக்கு வராமல் மறைந்தார்கள் என யாருக்கு தெரியும்

தமிழகத்தின் தென் கோடி கிராமத்தில் ஏழைக்குடும்பத்தில் பிறந்த ஒருவன் எப்பேற்பட்ட சிறந்த வீரன் என்றாலும் அவனால் ச்ர்வதேச அரங்கில் ஜொலிக்க முடியுமா

   இப்படி , ஒரு சின்ன கும்பலின் தனி மனித விருப்பு வெறுப்பு , திறமைசாலிகளை மேலே வராமல் தடுப்பது என்ற நிலை இன்று ஓரளவு மாறி வருகிறது

நிறைய உள்ளூர் அணிகள் , அய் பி எல் போன்ற போட்டிகளால் , பலருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ரஜீந்தர் கோயல் இன்று விளையாடினால், பெருந்தொகைக்கு அவரை ஏலத்தில் எடுத்து இருப்பார்கள்

தொழில் நுட்ப வளர்ச்சியும் , சமுதாய வளர்ச்சியும் கத்தியின்றி ரத்தம் இன்றி இது போல பல வித புரட்சிகளுக்கு வழி வகுத்துள்ளன

முன்பெல்லாம் வாக்குச்சாவடிகளை கைப்பற்றுதல் , ஓட்டுகளை ஒருவரே ஒட்டு மொத்தமாக போடுதல் போன்றவை சகஜம் . வொட்டிங் மெஷின் , சிசிடிவி போன்றவற்றால் இவை ஓரளவு குறைந்துள்ளன

முன்பெல்லாம் வெகு ஜன வார மற்றும் மாத இதழ்களில் எழுதுவோர்தான் ஸ்டார்கள் , பொது மக்களிட்மும் , அரசியல்வாதிகளிடமும் அவர்கள்தான் நாயகர்கள்

யாருக்கு எழுத வாய்ப்பளிப்பது என்பது  அப்போது இருந்த – விரல் விட்டு எண்ணக்கூடிய – ஒரு சில பத்திரிகை முதலாளிகள் கைகளில் இருந்தது

 இலக்கியவாதிகளும் சிற்றிதழ் எழுத்தாளர்களும் வறுமையில் வாடினர்

சிசு செல்லப்பா கொளுத்தும் வெயிலில் புத்தக மூட்டைகளை ஊர் ஊராக எடுத்துச் சென்று இலக்கியம் வளர்க்க முனைந்தார்

ஏன் சினிமா செய்திகளையே படித்து மழுங்கிப்போகிறீர்கள். எனக்கு கொஞ்சம் நிதி பலம் இருந்தால் போதும் தரமான பொழுதுபோக்கு பத்திரிக்கையை நான் நடத்திக்காட்டுகிறேன் என பசித்த வயிற்றுடன் குரல் கொடுத்த சான்றோரின் குரல் மக்களுக்கு கேட்கவே இல்லை.  

விருதுகளும் பண முடிப்புகளும் புகழும் வெகு ஜன எழுத்தாளர்களுக்கே கிடைத்தன அவர்களே எழுத்தாளர்கள் என்று கருதப்பட்டனர்

இந்த நிலையை முடித்து வைத்தது தொழில் நுட்ப வளர்ச்சிதான்

இன்று வார இதழ்களும் மாத இதழ்களும் கட்சி சார்பு இதழ்களாகி விட்டன..  இந்த  கட்சி ஆதரவு நிலை எடுத்தால் இந்த பத்திரிக்கையில் வாய்ப்பு கிடைக்கும் என்பதை எழுதுவோரும் தெரிந்து கொண்டு விட்டனர். அறச்சீற்ற பாவனையோடு அந்தந்த கட்சி சார்பு நிலை எடுத்து அந்தந்த பத்திரிக்கைகளில் எழுத வாய்ப்பு பெறுகின்றனர்

இதனால் தர வீழ்ச்சி அடைந்து இன்றைய இளைய தலைமுறை வெகுஜன இதழ்களை விட்டு வெகுவாக விலகி விட்டது

கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களிடம் ஆய்வு எடுத்தால் , அப்படிப்ப்ட்ட இதழ்களை ஒருவர்கூட படிப்பதில்லை என தெரியவ்ருகிறது

50 வய்துக்கு மேற்பட்டோர்தான் இவற்றின் வாசகர்க்ளாக உள்ளனர்

ஆனால் சிசு செல்லப்பா , ப சிங்காரம் , ந பிச்சமூர்த்தி என தரமான எழுத்தாளர்கள் இன்று தேடி தேடி படிக்கப்படுகின்றனர்

சாரு நிவேதிதா , ஜெயமோகன் , எஸ் ரா போன்ற இலக்கியவாதிகள் இன்று ஸ்டார்களாக வலம் வருகின்றன

சொல்வனம் , பதாகை , திண்ணை என  பல இணைய இதழ்களில் முக்கியமான ஆக்கங்கள் வெளியாகின்றன. 

தம் எழுத்துகள் இன்று இப்படி தேடிதேடி படிக்கப்படுபவதையும் , விவாதிக்கப்படுவதையும் மறைந்த எழுத்தாளர்கள் இன்று வந்து பார்த்தால் திகைத்து விடுவார்கள் . எப்படி என்ற மாற்றம் நிகழ்ந்தது..  ஏதேனும் மிகப்பெரிய ரத்தப் புரட்சி நடாத்தி என நினைப்பார்கள்

ஆனால்  நடந்தது ரத்தப்புரட்சி இல்லை.,  உலகளாவிய அறிவுப்புரட்சி/ அந்த அறிவுப்புரட்சியால்  விளைந்த நல் விளைவுகளில் இதுவும் ஒன்று

      இந்த அறிவு யுகத்திலும் சிலர் அரசியல் பேசிக்கொண்டு , தனி மனித வசைகளில் ஈடுபட்டுக்கொண்டு அதற்கு இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர்

ஆனால் தொழில் நுட்பம் வளர வளர குப்பைகள் அந்த அறிவுத்தீயில் சாம்பலாகி விடும்

Series Navigationஅதிசயங்கள்