குடிமகன்

Spread the love

தினம் தினம் கரைக்கப்படும் நேரங்களின்
எச்சங்கள் சேமித்துவைக்கப்படுகின்றன
காரணங்கள் காரியங்கள் ஏதும் இன்றியே
உருவாகின்றது மீளா  நினைவுகள்.

யாரொருவர் சொல்லும் என்னையறியாமல்
என்னிடம் சேர்வதில்லை,கடலிடம் சேரும்
நதியை போலவே அது ,என்றொருநாள்  அது
நிச்சயம் பழக்கப்படுத்தப்படுகின்றது

யாருமற்ற இரவில் விடப்படும் ஒலிகளின்
ஓசைகளும் கேட்பாரற்றே  கிடக்கின்றன
ஊடுருவும் ஒலிகளுக்காக ஏங்குகின்றன
செவிப்பறைகள் தினம், தினமும் .

பிறப்பின் கண் பிரிக்கப்படும் சாதிகளும்
கள்ளிப்பால் கொலைகளும் அணு தினமும்
நிகழ்கிறது எங்கோ ஓரிடத்தில் நாமறிந்து
நம்மை அறிந்து சில உச்சு கொட்டலும்
ஓரிரு கண்ணீர் துளிகளால் மறக்கப்படுகின்றன.,

கேட்பவைகளையும் பார்பவைகளையும் ஏனோ
நம் அன்றாட கடமைகளால் மறக்கவைத்துவிட்டு
வாழ்ந்துகொண்டிருக்கிறோம் குடிமகனாய்.

–    சி.ஹரிஹரன்

Series Navigationசௌந்தர்யப்பகைஓரு பார்வையில்